Untitled Document
November 17, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தினமும் வெறும் வயிற்றில் டீ பருகுவது நல்லதா?
[Thursday 2026-11-12 18:00]

காலை வெறும் வயிற்றில் டீ பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது தீங்கா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை பொழுது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் காபி அல்லது டீ இல்லாமல் தொடங்குவதில்லை. இதவ்வாறு டீ குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். மேலும் டீ பருகாமல் இருந்த அந்த நாளே சிலருக்கு மந்தமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆனால் வெறும் வயிற்றில் இவ்வாறு டீ அருந்துவது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்குமா என்பதை பலரும் யோசிப்பதில்லை.

வெறும் வயிற்றில் தேநீர் பருகுவதால் வயிற்றுக்கு தீங்கு ஏற்படுவதுடன், அருந்திய பின்பு நெஞ்செரிச்சல், புளிப்பு ஏப்பம் அல்லது குமட்டல் போன்ற தொந்தரவு ஏற்படலாம்.

தேநீரில் உள்ள காஃபின் மற்றும் டானின்கள் சிலருக்கு செரிமான பிரச்சனை அதிகரிப்படுத்துவதுடன் வயிற்று கோளாறு மற்றும் அசௌகரியத்தினை ஏற்படுத்துகின்றது.

உணவுக்குழலுக்கும் வயிற்றுக்கும் இடையே தசை வால்வு ஒன்று உள்ளது. இதனை கீழ் உணவுக்குழல் சுருக்குத்தசை என்று கூறப்படுகின்றது. வயிற்றில் உள்ள அமில் மீண்டும் உணவுக்குழாலுக்கு பாய்வதை தடுத்து, வயிற்று அமிலம் மேல் நோக்கி வருமாம்.

இதன் காரணமாகவே நெஞ்செரிச்சல், புளிப்பான ஏப்பம், தொண்டையில் புளிப்புச் சுவை இவற்றினை ஏற்படுத்தும். குறிப்பாக கசப்பான தேநீர் அருந்தினால் இவை ஏற்படுமாம்.

மேலும் இரைப்பையழற்சி அல்லது அஜீரணத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் டீ பருகுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

தேநீரில் அதிகமான பால் சேர்த்தால் அமிலத்தன்மை முற்றிலும் நீக்கிவிடும் என்று கூறிவிட முடியாது. ஏனெனில் சிலருக்கு பால் வயிற்றுகோளாறை ஏற்படுத்தலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கு உடலுக்கு ஏற்ற தேநீர் வகையை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.

காலை எழுந்ததும் தேநீர் அருந்தாமல் முதலில் தண்ணீர் அருந்துவது சிறந்தது. காலை உணவிற்கு பின்பு தேநீர் எடுத்துக் கொள்ளலாம்.

தேநீருக்கு பயன்படுத்தும் பாலை சிறிது தண்ணீராக காய்ச்சிக் கொள்ளவும். தேநீர் அருந்தும் அளவையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேநீர் பருகியதும் புளிப்பான திரவம் மீண்டும் தொண்டைக்குள் வருதல், இரவு தூக்கம் கெடுதல், நெஞ்செரிச்சல் பிரச்சனை இருந்தால் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

ஆனால் நெஞ்செரிச்சலுடன், மூச்சு விடுவதில் சிரமம், தாடைககளில் வலி பரவுதல், அதிகப்படியான வியர்வை இவ்வாறான தருணங்களில் தாமதம் இல்லாமல் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா