Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மட்டன் பிரியாணியை மிஞ்சும் வித்தியாசமான முட்டை புலாவ்!
[Wednesday 2026-10-28 15:00]

மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மதிய உணவாக சாதம், பிரியாணி, புலாவ் என்று சாப்பிடும் நிலையில், புலாவ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் முட்டையை வைத்து புலாவ் செய்து அசத்தலாம். அதாவது மட்டன் பிரியாணி சுவையை விட அசத்தலான சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 3 கப்

வெங்காயம் - 3

தக்காளி - 2

தயிர் - ¾ கப்

பச்சை மிளகாய்கள் - 3

புதினா - ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

எலுமிச்சை பழம் - 1

சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்

ஏலக்காய் - 6

பிரியாணி இலை - 2

பட்டை - 2 இன்ச் அளவு

அன்னாசி பூ - 1

மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்

முழு மிளகு - சிறிதளவு (தோராயமாக 8)

நெய் அல்லது எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டையை வறுக்க

முட்டைகள் - 12

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்

முழு மிளகு - 1/4 டீ ஸ்பூன் (புதிதாக இடித்தது)

விழுது அரைக்க

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 12 பல்

இஞ்சி - 2 இன்ச் அளவு

செய்முறை

முதலில் பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 45 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். முட்டையை சேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அரைக்க கூறிய பொருட்களை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அவித்து வைத்த முட்டையை அதில் சேர்த்து மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து நன்றாக பிரட்டி பழுப்பு நிறமான பின்பு எடுத்துக் கொள்ளவும்.

புலாவ் செய்வதற்கு ஆழமான பாத்திரம் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். இதில் சீரகம், ஏலக்காய், பட்டை, மிளகு, அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.

அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்க்கவும், பின்பு நறுக்கி வைத்த வெங்காயத்தினை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி, இதனுடன் தயிர் சேர்க்கவும்.

பின்பு உப்பு, புதினா, கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு இவற்றினை சேர்த்து நன்றாக கிளறவும். ஊற வைத்த அரிசியை வடிகட்டி அதனுடன் சேர்க்கவும்.

இத்துடன் வறத்த முட்டையை லேசாக கீறி இதனுடன் சேர்த்து அரிசிக்கு தேவயைான தண்ணீர் சேர்த்து, வேக வைத்து இறக்கினால் சுவையான முட்டை புலாவ் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா