Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்யப் போறீங்களா? - உருளைக்கிழங்கில் கூட செய்யலாம்!
[Tuesday 2026-10-27 16:00]

உருளைக்கிழங்கினை வைத்து குலாப் ஜாமூன் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி வந்துவிட்டாலே பலகாரம் செய்வதற்கு ஏற்பாடுகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் ஆகும். அவ்வாறான குலாப் ஜாமூன் உருளைக்கிழங்கில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

குலாப் ஜாமுன் செய்ய

உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு (வேகவைத்து மசித்தது)

மைதா மாவு அல்லது கோதுமை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை

நெய் - ½ டீ ஸ்பூன்

சர்க்கரை பாகு தயாரிக்க

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - ½ கப்

ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய் - 2

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஏலக்காய் மற்றும் சிறிதளவு சர்க்கரை சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அடித்துக் கொள்ளவும்.

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் சேர்த்து பொடியாக்கி வைத்துள்ள சர்க்கரை, ஏலக்காய் இவற்றினை சேர்த்து பாகு தயாரித்து வைக்கவும்.

இதனுடன் ரோஸ் எசென்ஸ் மற்றும் குங்குமப்பூ சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடிப்பினை அணைத்துக் கொள்ளவும்.

வேறொரு பாத்திரத்தில் அவித்து வைத்த உருளைக்கிழங்கினை நன்றாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் மைதா, பேக்கிங் பவுடன் மற்றும் நெய் சேர்த்து மென்மையாக பிசையவும்.

பின்பு இதனை சிறு சிறு உருண்டையாக உருட்டிக்கொண்டு, கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

பின்பு தயாரித்து வைத்துள்ள சர்க்கரை பாகில் சேர்க்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை ஊறவிட்ட பின்பு எடுத்து சாப்பிட்டால் சுவையான உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா