Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காபி அருந்துவதால் உடல் கொழுப்பு குறையுமா?
[Monday 2026-10-26 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.

இந்நிலையில், காபி அருந்தும் பழக்கத்திற்கும் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசை நிறைக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் எனச் சமீபத்திய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

2,264 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வு பின்லாந்தில் உள்ள ஓலு (Oulu) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 1966ஆம் ஆண்டு வடக்கு பின்லாந்தில் பிறந்தவர்களைக் கொண்ட ஆய்வுக் குழுவைச் சேர்ந்த 46 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 2,264 பேரின் சுகாதாரத் தரவுகளை ஆய்வு செய்தனர்.

இதில் அவர்களின் காபி அருந்தும் பழக்கம், உடல் கொழுப்பு மற்றும் தசை நிறை ஆகியவை ஒப்பிடப்பட்டன. ஆய்வில், அதிகமாகக் காபி அருந்தியவர்களிடம் மொத்த உடல் கொழுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ளுறுப்புகளைச் சுற்றிச் சேரும் உள்ளுறுப்புக் கொழுப்பு (Visceral Fat) குறைவாகக் காணப்பட்டது தெரியவந்துள்ளது.

அதேவேளை, அவர்களிடம் எலும்புத் தசை நிறை சற்றே அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும், இரத்தத்தில் சில கிளைச் சங்கிலி அமினோ அமிலங்களின் (BCAAs) அளவும் குறைவாக இருந்துள்ளது.

இந்த ஆய்வில், அதிகமாகவும் குறைவாகவும் காபி அருந்தியவர்களிடையே உடல் நிறைக் குறியீட்டெண்ணில் (BMI) குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படவில்லை.

இருப்பினும், BMI என்பது உயரம் மற்றும் எடையை அடிப்படையாகக் கொண்ட அளவீடு என்பதால், உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தசையின் அளவைத் துல்லியமாகக் காட்டாது. எனவே, ஒரே எடை கொண்டவர்களிடையே உடல் அமைப்பில் வேறுபாடுகள் காணப்படலாம்.

காஃபின் ஏற்படுத்தும் தாக்கம் காபியில் உள்ள காஃபின் நரம்பு மண்டலத்தைத் தூண்டுவதுடன், உடலின் ஆற்றல் செலவு மற்றும் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். சில ஆய்வுகள், காஃபின் ஆற்றல் செலவை அதிகரிக்கவும் பசி உணர்வில் மாற்றங்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

எனினும், காபி அருந்துவதால் மட்டுமே உடல் கொழுப்பு குறைகிறது அல்லது தசை நிறை அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை.உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் பிற வாழ்க்கைமுறை அம்சங்களும் உடல் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும் தசை நிறையைப் பராமரிக்கவும் காபியை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. சமச்சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் அளவான காஃபின் உட்கொள்ளல் ஆகியவை முக்கியமானவை.

மேலும், அதிக சர்க்கரை மற்றும் கலோரி கொண்ட சேர்க்கைகளுடன் காபி அருந்துவதையும் கட்டுப்படுத்துவது நல்லது. முடிவாக, அதிகமாகக் காபி அருந்துபவர்களிடம் உடல் கொழுப்பு குறைவாகவும் தசை நிறை சற்றே அதிகமாகவும் காணப்படுவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், இந்தத் தொடர்புக்கான காரணங்களை உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தேவை. காபியை உடல் எடையைக் குறைக்கும் தனிப்பட்ட தீர்வாகக் கருதாமல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையின் ஒரு பகுதியாக அணுகுவதே சிறந்தது என இந்த ஆய்வு விளக்கியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா