Untitled Document
October 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.

தற்போது மட்டன் சுக்கா சற்று வித்தியாசமான முறையில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மட்டன் மரினேட் செய்ய தேவையானவை:

மட்டன் - 1/2 கிலோ

இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன் உப்பு - சிறிதளவு

தேங்காய் அரைக்க தேவையானவை:

துருவிய தேங்காய் - 1 கப்

காய்ந்த மிளகாய் - 1

கிராம்பு - 3

ஏலக்காய் - 1 அல்லது 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

மற்ற பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2 அல்லது 3

பச்சை மிளகாய் - 2

இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 அல்லது 1½ டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - 3 அல்லது 4 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

மட்டனை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். (விரும்பினால் சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கலாம்.) மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து இஞ்சி, கிராம்பு, சீரகம், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

தற்போது இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்த்து உடனடியாகக் கலக்கவும்.மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் சமைத்த மட்டனை சேர்த்து 5-7 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.

பின்னர் அரைத்த தேங்காய் மசாலாவைச் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். தேவையென்றால் சிறிதளவு மட்டன் வேகவைத்த தண்ணீரை சேர்க்கலாம்.

மட்டனை மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் வறுக்கவும். மசாலாக்கள் மட்டனில் நன்கு ஒட்டிக்கொண்டு, அதிகப்படியான நீர் கிட்டத்தட்ட வற்றும் வரை சமைக்கவும்.

இறுதியாக, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, நன்றாகக் கலந்து இரண்டு நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.உங்களுக்குக் கூடுதல் தேங்காய்ச் சுவை வேண்டுமென்றால், கடைசியில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

அவ்வளவு தான் இப்போது தேங்காய் போட்ட சூடான மட்டன் சுக்கா தயாராகிவிட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா