Untitled Document
October 26, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
French Fries Dangerous: எச்சரிக்கும் புற்றுநோய் மருத்துவர்!
[Tuesday 2026-07-14 16:00]

இந்தியாவின் குருகிராமை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான Dr Vartika Vishwani உலகம் முழுவதும் விரும்பப்படும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மிக எளிதில் கிடைக்கக்கூடிய துரித உணவான 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' (French fries) சிகரெட்டை விட ஆபத்தானது என கூறுகிறார். வாரத்திற்கு மூன்றுமுறை இதனை சாப்பிட்டால் நீரிழிவு நோய்க்கான அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிப்பதாகவும் கூறுகிறார்.

உருளைக்கிழங்குகள் நல்லது என்றாலும் 'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தப்படுகிறது, இது அதனுடைய வேதியியல் அமைப்பை மாற்றுகிறது.

ஒரே எண்ணெயை அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போது டிரான்ஸ் கொழுப்புகளும், நச்சு சேர்மங்களும் அதிகரிக்கின்றன.

குறித்த எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவை உட்கொள்ளும் போது உடல் செல்களுக்கு பரவலான பாதிப்பை ஏற்படுத்துகிறது,

இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கிறார்.

'பிரெஞ்ச் ஃப்ரைஸ்' மற்றொரு முக்கிய காரணியாக உப்பின் அளவு அதிகமாக உள்ளது, இதனை தொடர்ந்து உட்கொள்ளும் போது சோடியத்தின் அளவு அதிகரித்து எதிர்காலத்தில் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது, இதனால் ரத்த அழுத்தப் பிரச்சனை ஏற்படலாம்.

மற்றொன்று உடல் பருமன், இளைஞர்களின்- குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் துரித உணவுகள்.

'பிரெஞ்ச் ஃப்ரைஸ்'-ன் ருசியால் அதிகளவில் சாப்பிடுகிறார்கள், இதனால் உடலுக்கு எவ்வித நன்மையும் கிடையாது.

பொறுப்புத்துறப்பு - சமூகவலைத்தளத்தில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா