Untitled Document
November 25, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா!
[Wednesday 2026-11-25 15:00]

பொதுவாகவே சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் மட்டுமின்றி, அசைவ உணவுப் பிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதன் தனித்துவமான சுவையும், எந்த வகையான மசாலாக்களுடனும் எளிதில் ஒன்றிணைந்து ருசியை அள்ளித்தரும் தன்மையும் இதற்கான முக்கியக் காரணங்களாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கைக் கொண்டு ஏராளமான சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.

வறுவல், பொரியல், மசாலா என எந்த முறையில் சமைத்தாலும் அதன் சுவை நிச்சயம் நாவில் நீர் ஊற வைக்கும். அதிலும் பட்டர் சேர்த்து மசாலாக்களுடன் பக்குவமாகத் தயாரிக்கும்போது அதன் ருசி இன்னும் கூடுதலாகிவிடும்.

வழக்கமாகச் செய்யும் உருளைக்கிழங்கு மசாலாவிலிருந்து சற்று வித்தியாசமாகவும், அதே நேரத்தில் சுவையில் அனைவரையும் கவரும் வகையிலும் ஒரு அருமையான உணவைத் தயாரிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்த ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு பட்டர் மசாலாவை ஒருமுறை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மட்டுமின்றி சூடான சாதத்துடனும் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். குறைந்த பொருட்களைக் கொண்டே எளிதாகத் தயாரிக்கக்கூடிய, இந்தச் சுவையான உருளைக்கிழங்கு பட்டர் மசாலாவின் எளிய செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – 1 கப் (தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியது)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 1 (நீளவாக்கில் கீறியது)

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி இலை – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

தக்காளி விழுது – 1½ கப்

முந்திரி விழுது – ½ கப்

தயிர் – 2 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

ஏலக்காய் – 3

பிரிஞ்சி இலை – 1

கிராம்பு – 3

பட்டை– ½ துண்டு

மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்

மிளகாய் தூள் – ½ ஸ்பூன்

சீரகத் தூள் – ½ ஸ்பூன்

மல்லித் தூள் – ½ ஸ்பூன்

மிளகுத் தூள் – ½ ஸ்பூன்

கரம் மசாலா – ½ ஸ்பூன்

மேத்தி – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான

அளவு வெண்ணெய் – 2 ஸ்பூன்

எண்ணெய் – 2 ஸ்பூன்

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளைக்கிழங்கை அரைவேக்காடாக வேகவைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் வெண்ணெயைச் சேர்த்துச் சூடாக்க வேண்டும். அதில் சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் பிரிஞ்சி இலையைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில்

இப்போது பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் அரைவேக்காடாக வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

அதன்பின் உப்பு, மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிளகாய்த்தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் முந்திரி விழுதைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் கரம் மசாலா மற்றும் கைகளால் நசுக்கிய கசூரி மேத்தியையும் சேர்க்கவும்.

இப்போது தயிரைச் சேர்த்து நன்றாகக் கலந்து, மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவியின் பதத்தைச் சரிசெய்து கொள்ளலாம்.

இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கிரேவி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com



கேரளா ஸ்டைலில் சிக்கன் வறுவல்!
[Monday 2026-11-23 16:00]

அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான பாலக்காடு சிக்கன் ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாக சிக்கன் இருக்கின்றது. சிறு குழந்தைகளும் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு, சில்லி சிக்கன், சுக்கா என்று தான் நமது வீட்டில் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாலக்காடு ஸ்டைலில் சிக்கன் அவ்வளவாக நாம் சமைத்திருக்க மாட்டோம்.



ஞாயிறு ஸ்பெஷல்: கேரளாவின் பாரம்பரிய சுவையில் பாலக்காடு சிக்கன்!
[Sunday 2026-11-22 18:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து களைகட்டிவிடும். அதிலும், சிக்கன் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்கள் ஏராளம். வாரம் முழுவதும் வேலை, பள்ளி எனப் பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே அமைந்துவிடுகிறது. அப்படியிருக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கிச் சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?



கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம்!
[Saturday 2026-11-21 18:00]

கார்த்திகை தீபம் அன்றும் செய்யப்படும் ஸ்பெஷல் நெய் அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம். கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் இம்மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. வீடு முழுவதும் அகல்விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது. மேலும் முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கு பிடித்தமான இனிப்புகளை படையலாக வைத்து வழிபடுவார்கள். அவ்வாறான இனிப்புகளில் ஒன்று தான் நெய் அப்பம்.



ஈரமான தலையுடன் தூங்கும் பழக்கம் இருக்கா? - இந்த பாதிப்புகள் குறித்து ஜாக்கிரதை!
[Friday 2026-11-20 16:00]

தலைமுடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஆனால், தலைக்குக் குளித்த பிறகோ அல்லது மழையில் நனைந்த பிறகோ தலைமுடியைச் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்குவது பலரும் செய்யும் தவறுகளில் ஒன்றாகும். ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதம்!
[Thursday 2026-11-19 16:00]

காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எளிமையானதும்ஆரோக்கியமானதுமான இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை ஒரு முறை செய்து கொடுங்கள். இந்த தக்காளி சாதம் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தக்காளி சாதம் போல இருக்காது. கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் எப்படி பிரபலமானதோ அதேபோல மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த தக்காளி சாதம் மிகவும் பிரபலமானது. இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை எளிய படிமுறையில் விரைவாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



அமைதியான உயிர்க்கொல்லி” இதயத் தமனி நோய் குறித்து விழிப்புணர்வு தேவை — முன்கூட்டிய மருத்துவ மதிப்பீட்டையும் சிகிச்சையையும் வலியுறுத்தும் புலம்பெயர் தமிழர் செய்திகள்!
[Thursday 2026-11-19 07:00]

இதயத் தமனிகளில் படியும் கொழுப்புத் தகடுகள், நோயைக் கண்டறியும் பரிசோதனைகள், செலவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து தமிழ் குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டுகோள் நியூயோர்க், நவம்பர் 17, 2026 — “Good Morning America” நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் ஜியோ பெனிடெஸ், தாம் ஆரோக்கியமாக உணர்ந்தபோதும் 41 வயதில் இதயத் தமனி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் இளம் வயதிலேயே இதய நோயால் உயிரிழந்தவர்கள் இருந்ததால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக மருத்துவ மதிப்பீட்டின்போது, இதயத் தமனிகளில் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் குடும்பங்கள் தமது இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு புலம்பெயர் தமிழர் செய்திகள் கேட்டுக்கொள்கிறது.



கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல்!
[Tuesday 2026-11-17 16:00]

கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக அசைவ பிரியர்கள் கடல்வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் கடலில் கிடைக்கும் ஒவ்வொரு உணவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றது. மீன் பொரியல், குழம்பு, புட்டு இவ்வாறு செய்து சாப்பிடும் நிலையில், தற்போது தேங்காய் எண்ணெய் மணத்துடன் கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



சிக்கன் வாங்கினால் ஒருமுறை மலபார் சிக்கன் பிரியாணி செய்து பாருங்க!
[Monday 2026-11-16 16:00]

கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமான மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது பலரும் நள்ளிரவு நேரத்திலும் பிரியாணி சாப்பிடுகின்றனர். சிலர் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி, பிரச்சனையில் மனம் கஷ்டமாக இருந்தாலும் பிரியாணி சாப்பிட்டு தன்னை மாற்றிக் கொள்கின்றனர். பிரியாணியில் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு ஊரை மையப்படுத்தி பிரலமாகியுள்ள பிரியாணியில் மலபார் பிரியாணி பிரபலமாகி வருகின்றது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல இடங்களில் பிரபலமாகிவரும் மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காஃபி குடிக்கிறீங்களா?
[Sunday 2026-11-15 15:00]

உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பதால் உடம்பிற்கு ஆரோக்கியமா? தீமையா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமாக இருக்கின்றது. ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமான சாப்பாடு இல்லாமல் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையில் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் தங்களது உடலை ஃபிட்டாக வைக்கவும் இன்று அதிகமாக ஆசைப்படுகின்றனர். உடல் எடை குறைப்பு, கட்டுக்கோப்பான உடல் இவற்றிற்கு உடற்பயிற்சி கட்டாயமாக இருக்கின்றது.



மீன் வறுவலை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல்!
[Saturday 2026-11-14 16:00]

மீன் வறுவல் பக்குவத்தில் கருணைக்கிழங்கை எவ்வாறு வறுவல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டு சமையலில் மதிய உணவிற்கு சாம்பார், புளிக்குழம்பு, ரசம் என்று சமைப்பது வழக்கம். ஆனால் இதற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு ஏதாவது செய்வதும் வழக்கம். அந்த வகையில் மீன் வறுவலுக்கு இணையான சைவ வறுவல் செய்து சாப்பிடலாம். இந்த வறுவலுடன் சாதம் சாப்பிடும் போது அட்டகாசமாகவே இருக்கும். குழந்தைகளும் இந்த சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு கருணைக்கிழங்கு வைத்து செய்யும் வறுவல் தான் இதுவாகும்.



விருந்தில் முதலில் வெள்ளரிக்காய், கேரட் வைப்பது ஏன்?
[Friday 2026-11-13 16:00]

திருமண நிகழ்வில் பரிமாறப்படும் உணவு விருந்தில் வெள்ளரிக்காய், கேரட் இவற்றினை முதலில் கொடுப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணம் இவற்றிற்கு சென்றால், உணவு பரிமாறும் போது வாழை இலையில், வெள்ளரிக்காய், கேரட் துண்டுகளை வைப்பார்கள். இவ்வாறு எதற்காக வைக்கப்படுகின்றது என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை துண்டுகளும் வழங்கப்படுகின்றது.



தினமும் வெறும் வயிற்றில் டீ பருகுவது நல்லதா?
[Thursday 2026-11-12 18:00]

காலை வெறும் வயிற்றில் டீ பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது தீங்கா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை பொழுது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் காபி அல்லது டீ இல்லாமல் தொடங்குவதில்லை. இதவ்வாறு டீ குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். மேலும் டீ பருகாமல் இருந்த அந்த நாளே சிலருக்கு மந்தமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.



இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்!
[Wednesday 2026-11-11 16:00]

உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சத்தான உளுந்தோரை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் கலவை சாதம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் எலும்பு ஆரோக்கியத்தினை உடனடியாக பெற வேண்டும் என்றால் உளுந்தம் பருப்பு சாதம் மிகவும் அருமையான தெரிவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கின்றது. கருப்பு உளுந்தை பயன்படுத்தி இந்த சாதத்தினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? - வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ!
[Tuesday 2026-11-10 16:00]

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டுவிட்ட நிலையில், மறுநாள் வயிறை சுலபமாக சுத்தம் செய்யும் பானத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகையில் அதிகமான உணவுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில், மறுநாள் உடல்நிலையைக் குறித்து கவலைபடவும் செய்கின்றனர். ஏனெனில் வயிறுக்கு அதிகமாக பல உணவுகளை சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு, உடல் கனமாக இருக்கும் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.



பாய்வீட்டு மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா?
[Monday 2026-11-09 17:00]

மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள். மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா