Untitled Document
November 23, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஞாயிறு ஸ்பெஷல்: கேரளாவின் பாரம்பரிய சுவையில் பாலக்காடு சிக்கன்!
[Sunday 2026-11-22 18:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து களைகட்டிவிடும். அதிலும், சிக்கன் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்கள் ஏராளம். வாரம் முழுவதும் வேலை, பள்ளி எனப் பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே அமைந்துவிடுகிறது. அப்படியிருக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கிச் சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?

வழக்கமாகச் செய்யும் சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் அல்லது சிக்கன் 65 என அதே உணவுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக, இந்த முறை சற்று வித்தியாசமான சுவையில் குடும்பத்தினரை அசத்தலாம்.

அதுவும் அதிக சிரமமின்றி, வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பாலக்காடு சிக்கன் வறுவலைத் தயாரிக்கலாம். அந்த ருசியான உணவை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1 கிலோ

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்கத் தேவையானவை

சின்ன வெங்காயம் – 15

வர மிளகாய் – 5

மல்லித்தூள் – 3 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 4 ஸ்பூன்

ஏனைய தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 2 (நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்.

அதனையடுத்து சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாயைச் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அவற்றை எடுத்து மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குறைந்த தீயில் சுமார் 2 நிமிடங்கள் வதக்கவும். இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மைய அரைத்துக்கொள்ளவும்.

மீதமுள்ள தேங்காய் எண்ணெயை வாணலியில் ஊற்றி, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும்.

இப்போது ஊற வைத்த சிக்கனைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். வாணலியை மூடி வைத்து, சிக்கன் பாதியளவு வேகும் வரை சமைக்க வேண்டும்.

சிக்கன் பாதி வெந்ததும் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, மீண்டும் மூடி வைத்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

சிக்கன் நன்றாக வெந்து மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். இறுதியாக எலுமிச்சை சாறு, கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டால் அவ்வளவுதான் சுவையான, மணமணக்கும் பாலக்காடு சிக்கன் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com



கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம்!
[Saturday 2026-11-21 18:00]

கார்த்திகை தீபம் அன்றும் செய்யப்படும் ஸ்பெஷல் நெய் அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம். கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் இம்மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. வீடு முழுவதும் அகல்விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது. மேலும் முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கு பிடித்தமான இனிப்புகளை படையலாக வைத்து வழிபடுவார்கள். அவ்வாறான இனிப்புகளில் ஒன்று தான் நெய் அப்பம்.



ஈரமான தலையுடன் தூங்கும் பழக்கம் இருக்கா? - இந்த பாதிப்புகள் குறித்து ஜாக்கிரதை!
[Friday 2026-11-20 16:00]

தலைமுடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஆனால், தலைக்குக் குளித்த பிறகோ அல்லது மழையில் நனைந்த பிறகோ தலைமுடியைச் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்குவது பலரும் செய்யும் தவறுகளில் ஒன்றாகும். ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதம்!
[Thursday 2026-11-19 16:00]

காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எளிமையானதும்ஆரோக்கியமானதுமான இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை ஒரு முறை செய்து கொடுங்கள். இந்த தக்காளி சாதம் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தக்காளி சாதம் போல இருக்காது. கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் எப்படி பிரபலமானதோ அதேபோல மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த தக்காளி சாதம் மிகவும் பிரபலமானது. இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை எளிய படிமுறையில் விரைவாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



அமைதியான உயிர்க்கொல்லி” இதயத் தமனி நோய் குறித்து விழிப்புணர்வு தேவை — முன்கூட்டிய மருத்துவ மதிப்பீட்டையும் சிகிச்சையையும் வலியுறுத்தும் புலம்பெயர் தமிழர் செய்திகள்!
[Thursday 2026-11-19 07:00]

இதயத் தமனிகளில் படியும் கொழுப்புத் தகடுகள், நோயைக் கண்டறியும் பரிசோதனைகள், செலவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து தமிழ் குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டுகோள் நியூயோர்க், நவம்பர் 17, 2026 — “Good Morning America” நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் ஜியோ பெனிடெஸ், தாம் ஆரோக்கியமாக உணர்ந்தபோதும் 41 வயதில் இதயத் தமனி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் இளம் வயதிலேயே இதய நோயால் உயிரிழந்தவர்கள் இருந்ததால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக மருத்துவ மதிப்பீட்டின்போது, இதயத் தமனிகளில் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் குடும்பங்கள் தமது இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு புலம்பெயர் தமிழர் செய்திகள் கேட்டுக்கொள்கிறது.



கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல்!
[Tuesday 2026-11-17 16:00]

கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக அசைவ பிரியர்கள் கடல்வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் கடலில் கிடைக்கும் ஒவ்வொரு உணவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றது. மீன் பொரியல், குழம்பு, புட்டு இவ்வாறு செய்து சாப்பிடும் நிலையில், தற்போது தேங்காய் எண்ணெய் மணத்துடன் கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



சிக்கன் வாங்கினால் ஒருமுறை மலபார் சிக்கன் பிரியாணி செய்து பாருங்க!
[Monday 2026-11-16 16:00]

கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமான மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது பலரும் நள்ளிரவு நேரத்திலும் பிரியாணி சாப்பிடுகின்றனர். சிலர் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி, பிரச்சனையில் மனம் கஷ்டமாக இருந்தாலும் பிரியாணி சாப்பிட்டு தன்னை மாற்றிக் கொள்கின்றனர். பிரியாணியில் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு ஊரை மையப்படுத்தி பிரலமாகியுள்ள பிரியாணியில் மலபார் பிரியாணி பிரபலமாகி வருகின்றது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல இடங்களில் பிரபலமாகிவரும் மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காஃபி குடிக்கிறீங்களா?
[Sunday 2026-11-15 15:00]

உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பதால் உடம்பிற்கு ஆரோக்கியமா? தீமையா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமாக இருக்கின்றது. ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமான சாப்பாடு இல்லாமல் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையில் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் தங்களது உடலை ஃபிட்டாக வைக்கவும் இன்று அதிகமாக ஆசைப்படுகின்றனர். உடல் எடை குறைப்பு, கட்டுக்கோப்பான உடல் இவற்றிற்கு உடற்பயிற்சி கட்டாயமாக இருக்கின்றது.



மீன் வறுவலை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல்!
[Saturday 2026-11-14 16:00]

மீன் வறுவல் பக்குவத்தில் கருணைக்கிழங்கை எவ்வாறு வறுவல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டு சமையலில் மதிய உணவிற்கு சாம்பார், புளிக்குழம்பு, ரசம் என்று சமைப்பது வழக்கம். ஆனால் இதற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு ஏதாவது செய்வதும் வழக்கம். அந்த வகையில் மீன் வறுவலுக்கு இணையான சைவ வறுவல் செய்து சாப்பிடலாம். இந்த வறுவலுடன் சாதம் சாப்பிடும் போது அட்டகாசமாகவே இருக்கும். குழந்தைகளும் இந்த சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு கருணைக்கிழங்கு வைத்து செய்யும் வறுவல் தான் இதுவாகும்.



விருந்தில் முதலில் வெள்ளரிக்காய், கேரட் வைப்பது ஏன்?
[Friday 2026-11-13 16:00]

திருமண நிகழ்வில் பரிமாறப்படும் உணவு விருந்தில் வெள்ளரிக்காய், கேரட் இவற்றினை முதலில் கொடுப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணம் இவற்றிற்கு சென்றால், உணவு பரிமாறும் போது வாழை இலையில், வெள்ளரிக்காய், கேரட் துண்டுகளை வைப்பார்கள். இவ்வாறு எதற்காக வைக்கப்படுகின்றது என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை துண்டுகளும் வழங்கப்படுகின்றது.



தினமும் வெறும் வயிற்றில் டீ பருகுவது நல்லதா?
[Thursday 2026-11-12 18:00]

காலை வெறும் வயிற்றில் டீ பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது தீங்கா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை பொழுது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் காபி அல்லது டீ இல்லாமல் தொடங்குவதில்லை. இதவ்வாறு டீ குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். மேலும் டீ பருகாமல் இருந்த அந்த நாளே சிலருக்கு மந்தமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.



இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்!
[Wednesday 2026-11-11 16:00]

உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சத்தான உளுந்தோரை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் கலவை சாதம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் எலும்பு ஆரோக்கியத்தினை உடனடியாக பெற வேண்டும் என்றால் உளுந்தம் பருப்பு சாதம் மிகவும் அருமையான தெரிவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கின்றது. கருப்பு உளுந்தை பயன்படுத்தி இந்த சாதத்தினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? - வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ!
[Tuesday 2026-11-10 16:00]

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டுவிட்ட நிலையில், மறுநாள் வயிறை சுலபமாக சுத்தம் செய்யும் பானத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகையில் அதிகமான உணவுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில், மறுநாள் உடல்நிலையைக் குறித்து கவலைபடவும் செய்கின்றனர். ஏனெனில் வயிறுக்கு அதிகமாக பல உணவுகளை சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு, உடல் கனமாக இருக்கும் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.



பாய்வீட்டு மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா?
[Monday 2026-11-09 17:00]

மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள். மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம்: அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
[Sunday 2026-11-08 16:00]

இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கும் குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் குறித்தும் எவ்வாறு அந்த பெயர் வந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக குலாப் ஜாமூன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலான வீடுகளில் செய்யும் முக்கியமான இனிப்பாகவும் இந்த குலாப் ஜாமூன் இருக்கின்றது. அவ்வாறு பண்டிகை காலங்களில் செய்யப்படும் குலாப் ஜாமூனுக்கு ஒரு கிராமம் பிரபலமாகியுள்ளது. பலரும் அறிந்திடாத கிராமம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.



தீபாவளி ஸ்பெஷல்: கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு!
[Saturday 2026-11-07 17:00]

தீபாவளி தினத்தில் நாட்டுக்கோழி குழம்பு கர்நாடகா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் காலை உணவு கறிக்குழம்பு, இட்லி என்று தான் இருக்கும். ஆதலால் தீபாவளிக்கு மட்டன், சிக்கன் அதிகமாகவே மக்கள் எடுக்கின்றனர். அதிலும் வழக்கமான குழம்பாக செய்யலாம் என்று வித்தியாசமாக நாட்டுக்கோழியும் எடுத்துக் கொள்ளலாம். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடம்பிற்கு அதிக நன்மையை அளிக்கின்றது. அந்த வகையில் நாட்டுக்கோழியை கர்நாடக ஸ்டைலில் எவ்வாறு குழம்பு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா