Untitled Document
November 9, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பாய்வீட்டு மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா?
[Monday 2026-11-09 17:00]

மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள். மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1/2 கிலோ அல்லது 1 டம்ளர் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)

வேக வைப்பதற்கு

மட்டன் - 3/4 கிலோ

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 2 கப்

பிரியாணி மசாலாவிற்கு

பட்டை - 2 இன்ச்

கிராம்பு - 6

ஏலக்காய் - 4

ஜாதிக்காய் - சிறிது

கல்பாசி - சிறிது

பிரியாணி தாளிப்பதற்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 இன்ச்

கிராம்பு - 3

ஏலக்காய் - 4

பெரிய வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 4 (கீறியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்

வேக வைத்த மட்டன்

பெரிய தக்காளி - 3 (நறுக்கியது

உப்பு - சுவைக்கேற்ப

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

அரைத்த பிரியாணி மசாலா

கெட்டி தயிர் - 1/2 கப்

புதினா - 1 கைப்பிடி

கொத்தமல்லி - 1/2 கைப்பிடி

தண்ணீர் - 3 டம்ளர்

ஊற வைத்த பாசுமதி அரிசி

எலுமிச்சை - 1

செய்முறை

பிரியாணி செய்வதற்கு பாசுமதி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் கழுவிய மட்டனை சேர்த்து அதில் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சுவைக்கு ஏற்ப உப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

மிக்ஸியில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய், கல்பாசி இவற்றினை சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்பு பிரியாணி செய்வதற்கு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய், நெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும். வேக வைத்த மட்டனையும் சேர்த்து 2 நிமிடம் கிளறிவிடவும்.

நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும், மிளகாய் அரைத்த பிரியாணி மாசாலா சேர்த்து நன்றாக கிளறி, இதனுடன் கெட்டியான தயிரையும் சேர்த்து கிளறவும்.

இதனுடன் புதினா, கொத்தமல்லி இவற்றினை சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். இந்த 3 டம்ளர் தண்ணீரில் மட்டன் வேக வைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும்.

தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த பாசுமதி அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்து, உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்து, பின்பு எலுமிச்சை சாறு சேர்த்து மூடிவைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.

பின்பு இறக்கியதும் தம் போடுவதற்கு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து தம் போட்டு இறக்கினால் பாய்வீட்டு பிரியாணி தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com



தீபாவளி ஸ்பெஷல்: கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு!
[Saturday 2026-11-07 17:00]

தீபாவளி தினத்தில் நாட்டுக்கோழி குழம்பு கர்நாடகா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி வந்துவிட்டாலே அனைவருக்கும் காலை உணவு கறிக்குழம்பு, இட்லி என்று தான் இருக்கும். ஆதலால் தீபாவளிக்கு மட்டன், சிக்கன் அதிகமாகவே மக்கள் எடுக்கின்றனர். அதிலும் வழக்கமான குழம்பாக செய்யலாம் என்று வித்தியாசமாக நாட்டுக்கோழியும் எடுத்துக் கொள்ளலாம். பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி உடம்பிற்கு அதிக நன்மையை அளிக்கின்றது. அந்த வகையில் நாட்டுக்கோழியை கர்நாடக ஸ்டைலில் எவ்வாறு குழம்பு வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.



சத்தான காலை உணவு: பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி!
[Friday 2026-11-06 16:00]

காலையில் சத்தான உணவாக பச்சை பயறு தேங்காய் பால் அரிசி கஞ்சி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தினமும் காலையில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவும் மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் தொடர்ந்து தோசை, இட்லி இவற்றினை மட்டும் சாப்பிட்டு வருகின்றீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு அருமையான காலை உணவை இங்கு தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பச்சை பயறு அதிகமான சத்துக்கள் கொண்டதாக இருக்கின்றது. இதனை காலை உணவில் எடுத்துக் கொண்டால் அன்றைய நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இந்நிலையில் பச்சை பயறுடன், தேங்காய் பால் மற்றும் அரிசி சேர்த்து செய்யும் கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி!
[Thursday 2026-11-05 16:00]

அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் நாட்டுக்கோழி. இதனை குழம்பு, கிரேவி, 65 என செய்து சாப்பிடுகின்றோம். ஆனால் சற்று வித்தியாசமாக செட்டிநாடு ஸ்டைலில் நாட்டுக்கோழி கிரேவி செய்யலாம். காரசாரமாக அட்டகாசமான சுவையில் நாட்டுக்கோழி கிரேவி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



சத்தான காலை உணவு முருங்கைக்கீரை கோதுமை தோசை!
[Wednesday 2026-11-04 16:00]

காலை நேரத்தில் சத்தான முருங்கைக்கீரை கோதுமை தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் நாள்முழுவதும் நம்மை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகின்றது. அந்த வகையில் எப்போதும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை என்று எடுத்துக் கொள்ளாமல் புரதச்சத்து நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.



தீபாவளி ஸ்பெஷல்: பச்சை மிளகாய் தயிர் முறுக்கு!
[Tuesday 2026-11-03 16:00]

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பச்சை மிளகாய் தயிர் முறுக்கு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே புதிய ஆடை, பட்டாசு என்று தான் குழந்தைகளுக்கு ஞாபகம் வரும். ஆனால் பெரியவர்கள் பலகாரம் செய்வதை குறித்து தான் யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் பலகாரங்களை வீட்டில் செய்யாமல் கடையிலேயே வாங்கி முடித்து விடுகின்றனர். ஆனால் நமது வீட்டு பெரியவர்கள் வீட்டில் மட்டுமே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தனர்.



இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? - பூசணி விதை செய்யும் அற்புதம்!
[Monday 2026-11-02 16:00]

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பூசணி விதையினை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு சத்தான உணவுகளில் ஒன்று தான் பூசணி விதை ஆகும். பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருக்கின்றது.



தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பலகாரமாக நெய் மைசூர் பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் வீட்டில் இனிப்பு வகைகளை செய்ய யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தான்.



முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு: எடையை குறைக்க சரியான ரெசிபி!
[Saturday 2026-10-31 16:00]

முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக முருங்கைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக முருங்கை கீரை இருக்கின்றது. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகமாக இருக்கின்றது. உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.



செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம்!
[Friday 2026-10-30 16:00]

ரசம் விரும்பி சாப்பிடுபவர்களுகள் செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீடுகளில் சமையல் என்றால் அங்கு ரசமும் கட்டாயமாகவே இருக்கும். ஆனால் சிலருக்கு ரசம் என்பது பிடிக்காத உணவாகவும் இருக்கின்றது. ஆனால் ரசம் உடலில் பல நோய்களுக்கு தீர்வாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் ரசம் முக்கியமானதாக இருக்கின்றது. எப்பொழுதும் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி இவற்றினை சேர்த்து ரசம் வைக்கும் நிலையில், தற்போது வெங்காய ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



ஹோட்டல் சுவையில் சின்ன வெங்காய சட்னி வேண்டுமா?
[Thursday 2026-10-29 16:00]

இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளுக்கு ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையான சின்ன வெங்காய சட்னியின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அதே சுவையில் வீட்டிலேயே எளிதாகத் சின்னவெங்காய சட்னி தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சின்ன வெங்காயத்தின் இயற்கையான இனிப்புச் சுவையுடன், வரமிளகாயின் காரமும், புளியின் புளிப்பும் கலந்து இந்தச் சட்னிக்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றது.



மட்டன் பிரியாணியை மிஞ்சும் வித்தியாசமான முட்டை புலாவ்!
[Wednesday 2026-10-28 15:00]

மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மதிய உணவாக சாதம், பிரியாணி, புலாவ் என்று சாப்பிடும் நிலையில், புலாவ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் முட்டையை வைத்து புலாவ் செய்து அசத்தலாம். அதாவது மட்டன் பிரியாணி சுவையை விட அசத்தலான சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்யப் போறீங்களா? - உருளைக்கிழங்கில் கூட செய்யலாம்!
[Tuesday 2026-10-27 16:00]

உருளைக்கிழங்கினை வைத்து குலாப் ஜாமூன் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி வந்துவிட்டாலே பலகாரம் செய்வதற்கு ஏற்பாடுகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் ஆகும். அவ்வாறான குலாப் ஜாமூன் உருளைக்கிழங்கில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.



காபி அருந்துவதால் உடல் கொழுப்பு குறையுமா?
[Monday 2026-10-26 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.



கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு: எப்படி செய்யனும் தெரியுமா?
[Sunday 2026-10-25 17:00]

சுவையான மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



மீந்து போன சாதத்தில் சப்பாத்தி செய்யலாமா?
[Saturday 2026-10-24 15:00]

வீட்டில் மீதமான சாதத்தில் அசத்தலான சப்பாத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு பழைய சாதமாக மாற்றி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் மீதமான சாதத்துடன் சில பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை வடகமாகவும் செய்வார்கள்.


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா