Untitled Document
November 3, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? - பூசணி விதை செய்யும் அற்புதம்!
[Monday 2026-11-02 16:00]

ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் பூசணி விதையினை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் மக்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ள அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறு சத்தான உணவுகளில் ஒன்று தான் பூசணி விதை ஆகும். பூசணி விதையில் புரதச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் போன்றவை இருக்கின்றது.

ஆதலால் தினசரி இதனை உணவில் சேர்க்கும் போது, உடலின் செயல்பாடு சீராக இருப்பதுடன், உடலில் பல அற்புதமான மாற்றத்தினையும் காணலாம். அவ்வாறு தொடர்ந்து 30 நாட்கள் பூசணி விதையினை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மையினை தெரிந்து கொள்வோம்.

பூசணி விதையில் உள்ள மக்னீசியம் இதயம் மற்றும் தசைகளின் செயல்பாட்டை சீராக வைக்க உதவுகின்றது. இதனால் இதய நோயின் அபாயமும் குறைக்கின்றது. இவற்றில் உள்ள உன்சாச்சுரேட்டட் கொழுப்பு இதயத்திற்கு நன்மை அளிக்கின்றது.

பூசணி விதையில் இருக்கும் இரும்புச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தினை சீராக செயல்பட வைக்கின்றது. அடிக்கடி நோய் தாக்கபடாமலும், காயங்களை விரைவில் குணப்படுத்தவும் உதவுகின்றது.

மேலும் ஆண்களுக்கு கருவுறுதல் திறனை அதிகரிக்கின்றது. ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கவும் உதவுகின்றது.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு பூசணி விதை உதவியாக இருக்கின்றது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து தேவையற்ற உணவுகள் மீது நாட்டம் கொள்ளாமல் இருப்பதால் உடல் எடையும் குறைக்க முடிகின்றது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்பட்டாலும், அதிகளவில் கலோரிகளும் உள்ளது.

பூசணி விதையிலுள்ள பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் என்ற சேர்மமானது ஹார்மோனை போன்தாகும். அவை மார்பக புற்றுநோயின் அபாயத்தினைக் குறைக்கின்றது.

இரவில் நல்ல தூக்கத்தினை பெறவும் உதவி செய்கின்றது. இதிலுள்ள ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தினை ஊக்குவிக்கின்றது.

  
  
   Bookmark and Share Seithy.com



தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாக்!
[Sunday 2026-11-01 18:00]

தீபாவளி பலகாரமாக நெய் மைசூர் பாக் கடையில் வாங்காமல் வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். தீபாவளி நெருங்கும் நிலையில் மக்கள் வீட்டில் இனிப்பு வகைகளை செய்ய யோசனை செய்து வருகின்றனர். பொதுவாக தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பட்டாசு, புத்தாடை, இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் தான்.



முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு: எடையை குறைக்க சரியான ரெசிபி!
[Saturday 2026-10-31 16:00]

முருங்கைக்கீரையுடன் கொள்ளு சேர்த்து குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக முருங்கைக்கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றது. ரத்த குறைபாடு உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக முருங்கை கீரை இருக்கின்றது. இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் அதிகமாக இருக்கின்றது. உடம்பிலுள்ள நச்சுக்களை நீக்குவதுடன், எலும்பு மற்றும் இதய ஆரோக்கியத்தினையும் மேம்படுத்துகின்றது.



செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம்!
[Friday 2026-10-30 16:00]

ரசம் விரும்பி சாப்பிடுபவர்களுகள் செட்டிநாடு ஸ்டைலில் வெங்காய ரசம் எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீடுகளில் சமையல் என்றால் அங்கு ரசமும் கட்டாயமாகவே இருக்கும். ஆனால் சிலருக்கு ரசம் என்பது பிடிக்காத உணவாகவும் இருக்கின்றது. ஆனால் ரசம் உடலில் பல நோய்களுக்கு தீர்வாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதில் ரசம் முக்கியமானதாக இருக்கின்றது. எப்பொழுதும் மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி இவற்றினை சேர்த்து ரசம் வைக்கும் நிலையில், தற்போது வெங்காய ரசம் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



ஹோட்டல் சுவையில் சின்ன வெங்காய சட்னி வேண்டுமா?
[Thursday 2026-10-29 16:00]

இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற தென்னிந்திய உணவுகளுக்கு ஹோட்டலில் பரிமாறப்படும் சுவையான சின்ன வெங்காய சட்னியின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும். அதே சுவையில் வீட்டிலேயே எளிதாகத் சின்னவெங்காய சட்னி தயாரிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சின்ன வெங்காயத்தின் இயற்கையான இனிப்புச் சுவையுடன், வரமிளகாயின் காரமும், புளியின் புளிப்பும் கலந்து இந்தச் சட்னிக்கு தனித்துவமான சுவையை கொடுக்கின்றது.



மட்டன் பிரியாணியை மிஞ்சும் வித்தியாசமான முட்டை புலாவ்!
[Wednesday 2026-10-28 15:00]

மட்டன் பிரியாணியை மிஞ்சும் சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மதிய உணவாக சாதம், பிரியாணி, புலாவ் என்று சாப்பிடும் நிலையில், புலாவ் பிரியர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் முட்டையை வைத்து புலாவ் செய்து அசத்தலாம். அதாவது மட்டன் பிரியாணி சுவையை விட அசத்தலான சுவையில் முட்டையை வைத்து வித்தியாசமான புலாவ் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளிக்கு குலாப் ஜாமூன் செய்யப் போறீங்களா? - உருளைக்கிழங்கில் கூட செய்யலாம்!
[Tuesday 2026-10-27 16:00]

உருளைக்கிழங்கினை வைத்து குலாப் ஜாமூன் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்தியாவில் மிகவும் முக்கிய பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி வந்துவிட்டாலே பலகாரம் செய்வதற்கு ஏற்பாடுகளை வீட்டில் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவ்வாறு செய்யப்படும் இனிப்பு வகைகளில் குலாப் ஜாமூன் ஆகும். அவ்வாறான குலாப் ஜாமூன் உருளைக்கிழங்கில் எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.



காபி அருந்துவதால் உடல் கொழுப்பு குறையுமா?
[Monday 2026-10-26 16:00]

பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த பானமாக காபி திகழ்கின்றது. காபி குடிக்காம நாளே விடியாது' என சொல்லும் நபர்கள் தான் அதிகம் இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் ஏராளம். இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் அதீத புத்துணர்வு தான். காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டி ஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.



கிராமத்து ஸ்டைல் மட்டன் மிளகாய் தொக்கு: எப்படி செய்யனும் தெரியுமா?
[Sunday 2026-10-25 17:00]

சுவையான மட்டன் மிளகாய் தொக்கு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



மீந்து போன சாதத்தில் சப்பாத்தி செய்யலாமா?
[Saturday 2026-10-24 15:00]

வீட்டில் மீதமான சாதத்தில் அசத்தலான சப்பாத்தி எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் சாதம் மீதமாகிவிட்டால் அதில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு பழைய சாதமாக மாற்றி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடம் இருந்து வருகின்றது. அவ்வாறு இல்லையெனில் மீதமான சாதத்துடன் சில பொருட்களை சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதனை வடகமாகவும் செய்வார்கள்.



மழைகாலத்தில் கமகமக்கும் நண்டு மசாலா: செட்டிநாடு சுவையில் எப்படி செய்வது?
[Friday 2026-10-23 16:00]

மழைக்காலத்திற்கு ஏற்ப நண்டு மசாலா செட்டிநாடு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல் இவற்றினால் அவதிப்படுவார்கள். இவ்வாறு சளி மற்றும் இருமலுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கும் உணவாக நண்டு இருக்கின்றது. நண்டு சூப் மட்டுமின்றி நண்டு மசாலாவும் மழைக்காலத்திற்கு ஏற்ற உணவாக இருக்கின்றது. செட்டிநாடு ஸ்டைலில் நண்டு மசாலா எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



உள்ளிருந்து கூந்தலைப் பராமரிக்க உதவும் 6 ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள்!
[Thursday 2026-10-22 16:00]

அழகான, அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் விருப்பம். ஆனால், கூந்தலின் ஆரோக்கியம் என்பது நாம் பயன்படுத்தும் எண்ணெய்கள், ஷாம்புகள் மற்றும் தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களை மட்டும் சார்ந்ததல்ல. நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளும் கூந்தலின் வளர்ச்சியிலும் வலிமையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்குக் கிடைப்பது அவசியம்.



கேஸ் அடுப்பின் அருகில் வைக்கக்கூடாத 6 பொருட்கள்!
[Wednesday 2026-10-21 16:00]

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் செல்வம், அமைதி மற்றும் நிம்மதியைப் பராமரிப்பதில் சமையலறைக்கு முக்கியப் பங்கு உள்ளது. சமையலறையில் நெருப்பின் ஆதாரமாக இருக்கும் கேஸ் அடுப்பின் அருகில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. வாஸ்து நம்பிக்கைகள் மட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்களுக்காகவும் சில பொருட்களை அடுப்பிலிருந்து தள்ளி வைப்பது அவசியம்.



தினமும் எலுமிச்சை நீர் அருந்துவது நல்லதா?
[Tuesday 2026-10-20 17:00]

பொதுவாகவே பலரும் தங்களது நாளை ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் அருந்துவதன் மூலம் தொடங்குகின்றனர். எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதுடன், தண்ணீர் உடலில் நீர்ச்சத்தைப் பேணவும் உதவுகிறது. தினமும் மிதமான அளவில் எலுமிச்சை நீர் அருந்துவது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. குறிப்பாக, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைப் பேணுவதற்கு இது பெரிதும் துணைப்புரிகின்றது.



ஒருமுறை மட்டன் சுக்கா இப்படி செய்து பாருங்க!
[Monday 2026-10-19 15:00]

மட்டன் சுக்கா தேங்காய் சேர்த்து எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் அதிகமாக இருக்கும் உணவு என்றால் அது மட்டன் தான். அதிக சத்துக்களை கொண்ட மட்டனை மிகவும் வித்தியாசமாக சமைத்து சாப்பிடுவதை தான் பலரும் விரும்புகின்றனர். சாதாரணமாக குழம்பு வைப்பதை விட, சுக்கா, வறுவல் என சமைப்பதையே விரும்புகின்றனர். குறிப்பாக இந்த வறுவலுக்கு தனியாக மசாலா வறுத்து அரைத்து செய்வதால், சுவை வேற லெவலில் இருக்கும்.



நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் நெல்லிக்காய்!
[Saturday 2026-10-17 17:00]

உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு மண்டலம் சிறப்பாகச் செயல்படுவதற்கு, சத்தான உணவுகளை அன்றாட உணவுப் பழக்கத்தில் சேர்த்துக்கொள்வது முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில், உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளை வழங்கும் இயற்கை உணவுகளில் நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் உண்டு. சிறிய அளவில் காணப்பட்டாலும், நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும் சேர்மங்கள் நிறைந்துள்ளன.


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா