Untitled Document
November 8, 2026 [GMT]
கனடாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய லாட்டரி பரிசு!
[Sunday 2026-11-08 16:00]

லாட்டரி சீட்டுக்காகத் தனியாக அமைக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவின் மூலம் இணைந்த நான்கு நண்பர்கள், தற்போது கனடாவின் வரலாற்றிலேயே மிக அதிகப்படியான லொட்டோ மெக்ஸ் ஜக்பாட் பரிசான 90 மில்லியன் டொலர் தொகையை வென்று தங்களது கனவை நனவாக்கியுள்ளனர். ஐடெல்சன் எல்சிகோ, லவ்லின் மால்வர், ஹேஸலின் ஓங் மற்றும் வெல்னா ராமிரெஸ்ஆகிய நால்வரும் அக்டோபர் 20-ஆம் திகதி நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த குலுக்கலில் இமாலயப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர்.


  

கல்கரியைச் சேர்ந்த இந்த 4 நண்பர்களும் பரிசைச் சமமாகப் பிரித்துக் கொள்வதன் மூலம், ஒவ்வொருவருக்கும் தலா 22,500,000 டொலர் கிடைக்கவுள்ளது. இந்த வெற்றியாளர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவே இந்த லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.

மேலும், இவர்கள் தங்களது வாட்ஸ்அப் குழுவிற்கு “மேனிஃபெஸ்டிங் மில்லியன்ஸ்” என்று பெயரிட்டுத் தொடர்ந்து உரையாடி வந்துள்ளனர்.

ஒரு நாள் அதிகாலையில் தனது மின்னஞ்சலை சரிபார்த்தபோதுதான் இந்த வெற்றி குறித்துத் தெரியவந்ததாக எல்சிகோ தெரிவித்துள்ளார்.

உடனடியாக அவர் குழுவில் இருந்த மற்ற நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து லவ்லின் மால்வர் கூறுகையில், "அதிகாலை நேரத்தில் எங்கள் குரூப் சாட்டில் அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

'இவ்வளவு காலையிலேயே என்ன செய்தி?' என்று யோசித்தேன். ஆனால் நண்பர்களோ, 'உடனே போனை எடு, இது ஒரு எமர்ஜென்சி!' என்று பதற்றத்துடன் கூறினார்கள்," எனப் பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு வெற்றியாளரான ஹேஸலின் ஓங் கூறுகையில், "என் கணவர் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது அவருக்கு அழைப்பு வந்தது.

அவர் ஓடிவந்து என்னை எழுப்பி, வீடியோ காலில் இணையுமாறு கூறினார். நாங்கள் முதல் முறையிலேயே இவ்வளவு பெரிய தொகையை வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை," என்றார்.

ஆரம்பத்தில் இதை நம்ப கடினமாக இருந்தாலும், பின்னர் உண்மையைப் புரிந்து கொண்டு அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். வெற்றி பெற்ற இந்த நால்வரும் தங்களது வீடுகளுக்கான கடன் அடமானங்களை அடைக்கவும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவவும், வாழ்க்கையை இன்னும் மகிழ்ச்சியாக வாழவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா