Untitled Document
October 25, 2026 [GMT]
மரணத்தை அனுபவிக்க புதிய கண்டுபிடிப்பு!
[Tuesday 2023-03-28 18:00]

மரணத்தை அனுபவிப்பது எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி சிமுலேஷன் என்ற தொழில் நுட்பம் மூலம் மக்களுக்கு இதே போன்ற அனுபவங்களை வழங்க முயற்சிக்கிறது. அத்தோடு மக்கள் இறக்கும் போது என்ன உணரலாம் என்பதை அனுபவித்து பார்க்க உதவுகிறது. ஷான் கிளாட்வெல் என்ற கலைஞர் பாஸிங் எலக்ட்ரிக்கல் ஸ்டோர்ம்ஸ் (Passing Electrical Storms) என்ற Vertual Reality அமைப்பை உருவாக்கியுள்ளார்.


  

இது இறப்பு நெருங்கும் போது எப்படி இருக்கும் என்ற உணர்வை இது கொடுக்கிறது. இதில் பங்கேற்பாளர்களுக்கு இதயத் துடிப்பு நிற்பது முதல் மூளை இறப்பு வரையிலான வாழ்க்கையின் உருவகப்படுத்தப்பட்ட வளர்ச்சியின் மூலம் அவர்களுக்கு ஒரு உணர்வை கொடுக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதயத் துடிப்பைச் சரிபார்க்க நீங்கள் ஒரு தற்காலிக மருத்துவமனை படுக்கையில் படுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த அனுபவத்தைப் பெறும்போது நிலைமை கட்டுகடங்காமல் போனால் ஊழியர்கள் உங்களை இழுத்துச் செல்லலாம். சிலருக்கு இந்த செயலை தொடர மிகவும் பயமாக இருக்கும்.

TikTok இல் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில் "மரணம் பதட்டத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது, இதனை உணர்ந்த மக்கள் என்ன சொல்வார்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

அவர்கள் இதயத் துடிப்பு மானிட்டரில் உங்கள் விரலை வைத்துவிட்டு உங்கள் கையை உயர்த்தச் சொல்கிறார்கள்.

மரணம் நெருங்குவது குறித்த வெர்ச்சுவல் ரியாலிட்டி என்பது மரணத்திற்கு அருகில் செல்லும் அனுபவமாகும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் அமைக்கப்பட்டுள்ள இந்த வெர்சுவல் ரியாலிட்டி சிமுலேட்டரில் பங்கேற்பாளர்களுக்கு இதயத் துடிப்பு நிற்கப் போவது முதல் மூளை இறப்பு வரையிலான வாழ்க்கையின் உருவகப்படுத்தப்பட்ட வளர்ச்சியின் மூலம் உணர்ச்சிகளை கொடுக்கிறது.

மின்சாரப் புயல்களைக் கடந்து செல்லும் அனுபவம், உடலுக்குள்ளும் அதற்கு அப்பாலும் உள்ள பிரபஞ்சங்களைப் பற்றிய சிந்தனையைத் தருகிறது என கூறப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா