Untitled Document
October 25, 2026 [GMT]
டெஸ்லா காரின் உதவியுடன் மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன்!
[Tuesday 2021-12-21 16:00]

மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் டெஸ்லா காரை ஆட்டோ பைலட் முறைக்கு கணவர் மாற்ரி பிரசவம் பார்த்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் முன்னணி நிறுவனத்தில் டெஸ்லா நிறுவனமும் உள்ளது. இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வர்களில் ஒருவர். இவர், அன்றாடம் ட்விட்டரில் பல பதிவுகளை பதிவிட்டு பேசுவது வழக்கம்.


  

இதனிடையே கோடிகள் மதிப்புகொண்ட டெஸ்லா காரில் பலவிதமான சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்நிலையில், பென்சில்வேனியாவை சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி-யிரான் ஷெர்ரி. இவர்களுக்கு 3 வயது ரபா என்ற மகன் உள்ளான். யிரான் ஷெர்ரிக்கு இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.

இதனால் சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் தங்கள் டெஸ்லா காரில் பயணித்துள்ளனர். அப்போது யிரான் ஷெர்ரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே கணவர் கீட்டிங் ஷெர்ரி காரில் மருத்துமனை நோக்கி வேகமாக சென்றார்.

அப்போது அவர்களது கார் போக்குவரத்து நெரிசலால் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனை செல்ல தாமதத்தை தம்பதி உணர்ந்தனர். இதனால் கணவர் கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவியுள்ளார்.

அதன் பின்னர் டெஸ்லா காரில் இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்ததுள்ளது. இதுகுறித்து அந்த பெண் தெரிவிக்கையில், "டெஸ்லா காரின் தன்னியக்க பைலட்டின் அற்புதமான வடிவமைப்பிற்கு டெஸ்லா நிறுவன பொறியாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம் " என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா