Untitled Document
October 25, 2026 [GMT]
லொட்டரி மேல் நம்பிக்கையிழந்தவருக்கு அடித்த அதிர்ஷடம்!
[Monday 2021-12-06 16:00]

கேரளாவை சேர்ந்த நபர் ஓமனில் வசிக்கும் நிலையில் அவருக்கு Big Ticket Abu Dhabi series லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது. 42 வயதான ரஞ்சித் வேணுகோபாலன் உன்னிதன் என்ற 42 வயதான நபர் கடந்த 12 ஆண்டுகளாக ஓமனில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் accountant பணி செய்து வருகிறார்.


  

உன்னிதனுக்கு Big Ticket Abu Dhabi seriesல் 10 million Dirham (இலங்கை மதிப்பில் 55,06,45,214.40) பரிசு விழுந்துள்ளது. இந்த பரிசு தொகையை அவர் தனது 5 நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

உன்னிதன் கூறுகையில், நான் கடந்த 12 வருடங்களாக ஓமன் நாட்டில் இருக்கிறேன். நான் எனது முதல் பிக் டிக்கெட்டை ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தேன். பிக் டிக்கெட்டில் எனது கணக்கைத் தொடங்கவே அதை வாங்கினேன்.

நானும் என் நண்பர்கள் சிலரும் அந்த டிக்கெட்டை வாங்க பணம் சேர்த்து வைத்தோம். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை, பின்னர் நான் கடந்த மாதம் வரை அதில் பங்கேற்பதை நிறுத்திவிட்டேன்.

2021 ஆண்டு எனக்கு அதிர்ஷ்டமானதா இல்லையா என்பதைப் பார்க்க இரண்டாவது முறையாக முயற்சிக்க நினைத்தேன். அது இவ்வளவு பெரிய அதிர்ஷ்டத்தை எனக்கு வழங்கியுள்ளது. இதை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

உன்னிதன், பரிசுத்தொகையை தனது மகளின் கல்விக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். இதோடு கேரளாவில் உள்ள தனது குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா