Untitled Document
October 25, 2026 [GMT]
ஒருபாலுறவுக்காரர் பெயரை கப்பலுக்குச் சூட்டிய அமெரிக்க கடற்படை!
[Thursday 2021-11-11 20:00]

ஆண் ஒருபாலுறவினர் உரிமை செயற்பாட்டாளராக இருந்த ஒருவரின் பெயரை அமெரிக்க கடற்படை ஒரு கப்பலுக்கு வைத்துள்ளது. 1950களில் அவருடைய பாலியல் உணர்வு காரணமாக, அமெரிக்க கடற்படையிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு, பணியில் இருந்து விலக வைக்கப்பட்டவர் ஹார்வி மில்க்.


  

யு.எஸ்.என்.எஸ் ஹார்வி மில்க் (USNS Harvey Milk ) என பெயர் சூட்டப்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பல் சான் டியாகோவில் சனிக்கிழமை செயல்படத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் கடற்படை செயலர் கார்லோஸ் டெல் டோரோ மற்றும் ஹார்வி மில்கின் மருமகன் ஸ்டூவர்ட் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர். அவர்களோடு முன்னாள் தலைமை நீதிபதி எர்ல் வாரன் மற்றும் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ராபர்ட் கென்னடி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க மக்கள் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள் பெயர் சூட்டப்பட்ட ஆறு கப்பல்களில் இதுவும் ஒன்று. கொரிய போரில் நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் யூ.எஸ்.எஸ் கிட்டிவேக் (USS Kittiwake) கப்பலில் துணைத் தளபதியாகவும் டைவிங் அதிகாரியாகவும் பணியாற்றினார் ஹார்வி மில்க்.

ஹார்வி மில்க் 1955ம் ஆண்டு அவரது பாலியல் உணர்வு தொடர்பாக இரு வாரங்கள் விசாரிக்கப்பட்டு, பணியில் இருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார். அமெரிக்காவில் மிக வெளிப்படையாக ஒருபாலுறவுக்காரராகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகளில் ஒருவர் ஹார்வி மில்க். 1977ம் ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோ போர்ட் ஆஃப் சூப்பர்வைசர்ஸ் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஓராண்டுக்குப் பிறகு, முன்னாள் நகர கண்காணிப்பாளர் டான் ஒயிட் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரோடு ஹார்வி மில்குக்கு அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஹார்வி மில்க் கடற்படையில் பணியாற்றியபோது, தன் வாழ்கையின் மிக முக்கியமான காலகட்டத்தை மறைத்துக் கொண்டு வாழ கட்டாயப்படுத்தப்பட்டது தவறு என அந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படை செயலர் டெல் டோரோ கூறினார்.

"நீண்ட காலமாக, லெஃப்டினன்ட் ஹார்வி மில்க் போன்ற கடற்படையினர் கவனிக்கப்படாமல் இருளில் வைக்கப்பட்டனர் அல்லது அதை விட மோசமாக நடத்தப்பட்டனர், நமக்கு மிகவும் விருப்பமான கடற்படையிலிருந்து அவர் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டார்" என டெல் டோரோ கூறினார். "அந்த நியாயமற்ற விஷயங்களும் நம் கடற்படையின் வரலாற்றில் ஒன்று" எனவும் கூறினார்.

2016இல் பராக் ஒபாமா அதிபராக இருந்த போது, ஓர் அமெரிக்கக் கடற்படைக் கப்பலுக்கு ஹார்வி மில்கின் பெயரைச் சூட்டுவதற்கான அறிவிப்பு வெளியானது. அப்போதே அதை சிலர் எதிர்த்தனர். அமெரிக்கா வியட்னாமில் போர் நடத்தியதை எதிர்த்த ஹார்வி மில்க், தன் பெயரை ஓர் அமெரிக்க கடற்படை கப்பலுக்குச் சூட்டுவதை மறுத்திருப்பார் என அவர்கள் காரணம் கூறினர்.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா