Untitled Document
October 25, 2026 [GMT]
காதலுக்காக பட்டத்தை தூக்கி எறிந்த பெண்மணி: உலகின் செல்வந்த இளவரசி Top News
[Tuesday 2021-10-26 17:00]

ஓர் சாதாரண எளிமையான குடும்ப பின்னணி கொண்ட " KOMURO " எனும் தனது கல்லூரி நண்பனை ஜப்பான் இளவரசி"MAKO"காதலித்து திருமணம் செய்வதற்கு அரச குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எவ்வளவோ‌ தடைகள் முயற்சிகள் மேற்கொண்டனர் . எதுவுமே அந்த புனித காதலின் முன் சரியாகவில்லை . மாறாக இளவரசி சிறிது காலம் இவ்வாறான நடவடிக்கைகளால் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டார் .


  

2017 ல் தமது திருமணம் நிச்சயிக்கப்பட்டது என அறிவித்த 30 வயது கொண்ட காதல் ஜோடி, அரச சுகபோகம் பட்டம் பதவி அத்தனையும் இழக்கும் நிலையை எதிர்கொண்டனர் . வைராக்கியம் மனதில் உதிக்க, காதலன் தனது உயர் கல்விக்காக 2018 ல் அமெரிக்கா செல்கிறார். சென்ற மாதம் ஜப்பான் திரும்பிய அவர் இன்று (26/10/2021) தனது காதலி முன்னாள் ஜப்பான் இளவரசியை கைப்பிடிக்கிறார் .

நாடே விழாக்கோலம் கண்டு, உலக தலைவர்கள் வாழ்த்த அரண்மணை சுகத்துடன் நடக்க வேண்டிய திருமணம் சாதாரண பாமர மக்களின் எளிமையான சிறு நிகழ்வாக நடைபெறுகிறது. இதே நேரம் அரச குடும்பம் திருமண அன்பளிப்பாக ஒதுக்கிய 944, 000 டாலர் பணத்தை இளவரசி நிராகரித்துள்ளார் .

இன்னும் சில நாட்களில் அமெரிக்கா சென்று அங்கு பணி புரிய இருக்கும் காதல் ஜோடி , முதன் முதலாக இளவரசி தன் வாழ்வில் கடவுட்சீட்டு ( Passport) விண்ணப்பம் செய்ய உள்ளார். 21 ம் நூற்றாண்டில் இவ்வாறான ஓர் காதல் சாம்ராஜ்யம் கட்டப்படுவது புனிதமான காதலின் அத்திவாரமாகும் .

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா