Untitled Document
October 25, 2026 [GMT]
மாத வருமானம் 75 ஆயிரம் ரூபாய்: அசர வைக்கும் ஒரு வயது குழந்தை!
[Monday 2021-10-25 17:00]

இன்றைய நவீன இணையத்தள வளர்ச்சியில் பலரும் வீட்டிலிருந்தபடியே பல வேலைகளை செய்து அதை ஆன்லைனில் அப்லோட் செய்து பணம் சம்பாரித்து வருகின்றனர். அதிலும், பெரும்பல மக்கள் வயது அடைந்தவர்களாக தான் இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது அதெல்லாம் மாறி பிறக்கும் குழந்தைக்கே பிட்காயின் முதலீடு செய்வதும், யூடியூப் சேனல் தொடங்குவதும் என பலரும் வித்தியாசமான முறையில் ஈடுப்பட்டு பணத்தை சம்பாரித்து வருகின்றனர்.


  

அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தை தான் பேபி ப்ரிக்ஸ். இந்த ஒரு வயதே ஆன குழந்தைக்கு தாய் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி இருக்கிறார்.

கணக்கை தொடங்கியதில் இருந்தே அந்த குழந்தைக்கு, 31 ஆயிரம் ஃபாலோயர்கள் பின் தொடங்க ஆரம்பித்துவிட்டனர். தற்போது அந்த குழந்தைக்கு மட்டும் மாத வருமானமே 1000 டாலர் வருகிறதாம்.

இந்திய மதிப்பில் 75 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து பேசிய குழந்தையின் தாய், பிரிக்ஸ் பிறந்ததில் இருந்தே அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினோம்.

குழந்தையை நாங்கள் சுற்றுலா அழைத்து செல்வதை அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தேன். கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி வெளிநாட்டு பயணங்கள் செய்வதை தவிர்த்தோம்.

இதனால், குழந்தையின் அனுபவத்தால் பலரும் பின் தொடர்ந்தனர். பிரிக்ஸுடன் பயணம் செய்வதை நிறுத்த வேண்டும் நாங்கள் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை மட்டுமே சுற்றி வரும் இந்த குடும்பம் தற்போது லண்டன் உட்பட மொத்த ஐரோப்பாவையும் சுற்றி பார்க்க ஒரு பயணத்தை திட்டமிட்டு வருகிறார்களாம்.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா