Untitled Document
October 25, 2026 [GMT]
அமேசானிடமிருந்து வந்த பார்சல்: வாடிக்கையாளர் செய்த வினோத செயல்!
[Wednesday 2021-06-23 18:00]

அமேசானில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் காருக்குப் பதிலாக பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட்டை பெற்ற வாடிக்கையாளர் தனது வேடிக்கையான அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா தொற்றுநோய், ஓன்லைனில் ஆர்டர் செய்வதை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையின் பிரிக்க முடியாத பகுதியாக ஆக்கியுள்ளது. ஓன்லைனில் ஆர்டர் செய்வதால் பல நன்மைகள் மற்றும் வசதிகள் உள்ளன, ஆனால் அதே சமயம் இது சில எதிர்பாராத முட்டாள்தனங்களையும் கொண்டுள்ளது.


  

செல்போனுக்கு பதிலாக கருங்கல், ஆப்பிள் போனுக்கு பதிலாக சாப்பிடும் ஆப்பிள் என, ஓன்லைன் ஆர்டர்களில் பல வேடிக்கையான நிகழ்வுகள் நடந்துள்ளன. அதுபோன்ற சம்பவம் தான் இது.

இந்திய தலைநகர் டெல்லியை சேர்ந்த விக்ரம் புரகோஹைன் (Vikram Buragohain) என்பவர் அமேசானில் ஒரு ரிமோட் கண்ட்ரோல் காரை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு வந்த பார்சலில் ஒரு Parle-G பிஸ்கட் இருந்தது.

இப்படி ஒரு சூழ்நிலையில், யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான கோபம் வந்திருக்கும். உடனடியாக, அமேசானில் புகார் கொடுத்து, ரீ-ஆர்டர் செய்து அந்தப்பொருளை வாங்கியிருப்போம்.

ஆனால், விக்ரம் இதற்கு நேர்மாறாக இந்த சம்பவத்தை தனது facebook பக்கத்தில் பதிவிட்டு வேடிக்கையான நிகழ்வாக மாற்றியுள்ளார். அவரது பதிவு பலரையும் சிரிக்கவைத்துள்ளது.

அவர் தனது பதிவில், அமேசாநிலிருந்து ஆர்டர் செய்ததற்கு பதிலாக பார்லே-ஜி பிஸ்கட் கிடைத்தால் என்ன செய்வது.... உடனே ஒரு டீ போட்டு, அதில் தொட்டு சாப்பிட வேண்டியது தான் என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

டீயுடன் பார்லே-ஜி பிஸ்கட்டை ஊறவைத்து சாப்பிடுவது என்பது இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. குறிப்பாக 90S கிட்ஸ்க்கு இதைப்பற்றை சொல்லவே தேவை இல்லை. விக்ரமின் இந்த பதிவு பல இந்தியர்களுக்கு தங்ககள் குழந்தைப்பருவத்தை நினைவூட்டியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா