Untitled Document
October 25, 2026 [GMT]
காதலிக்கும், கள்ள காதலிக்கும் ஒரே நேரத்தில் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கிய கனேடிய நபர்: சிக்கியது எப்படி?
[Tuesday 2021-05-25 17:00]

மொன்றியலில், ஒரே நேரத்தில் தனது காதலிக்கும், தான் தவறான உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கும் நிச்சயதார்த்த மோதிரம் வாங்கியிருக்கிறார் ஒருவர். jake என்ற அந்த நபர், ஒரு 45 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும், ஒரு 50 டொலர் மதிப்புள்ள மோதிரத்தையும் வாங்கியதோடு, அதைக் குறித்து பெருமையாக கடை ஊழியரான Eli என்ற இளம்பெண்ணிடம் பெருமை வேறு அடித்துக்கொண்டிருக்கிறார்.


  

அந்த பெண்கள் இருவரையுமே அந்த நபரிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த Eli, தன் வேலையை விட்டுவிட்டு, அந்த மோதிரங்களின் படங்களையும் வெளியிட்டு டிக் டாக்கில் அந்த பெண்களுக்கு செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

உங்கள் காதலனின் பெயர் Jake என்றால், அவர் மொன்றியலில் வாழ்கிறார் என்றால், உங்களுக்கு ஒரு செய்தி, அவர் ஒரே நேரத்தில் இரண்டு நிச்சயதார்த்த மோதிரங்களை வாங்கியுள்ளார்.

ஒன்று அவர் காதலிக்கென்றும், மற்றொன்று அவர் தகாத உறவு வைத்திருக்கும் பெண்ணுக்கென்றும் அவர் கூறியுள்ளார். இதுதான் அந்த மோதிரங்கள், இவரை விட சிறந்த காதலனை அடைய நீங்கள் தகுதியுடையவர்கள் என்று நான் நினைக்கிறேன் என்று எழுதிவிட்டு, தன் நகைக்கடைவேலையை விட்டுவிட்டார் Eli.

இந்த செய்தியை படித்தவர்கள், அந்த ஆளைக் காட்டிக்கொடுத்துவிட்டதால் உங்களுக்கு ஆபத்து வரலாம் பத்திரமாக இருங்கள் என்றும், நீங்கள் நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் என்றும் கூறி பாராட்டும் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு பெண், தனது நெருங்கிய தோழியின் காதலனின் பெயர் Jake என்றும், என் தோழிக்கு அந்த மோதிரம் கிடைத்துவிட்டது.

அது அவராக இருக்க 50/50 வாய்ப்பு உள்ளது என்றும் கூறி, அவளிடம் நான் இந்த விடயத்தைக் கூறுகிறேன், உங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா