Untitled Document
October 25, 2026 [GMT]
இந்த ஆண்டு வானில் தோன்றவிருக்கும் முதல் சிவப்பு நிலவு!
[Sunday 2021-05-23 09:00]

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம். இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் 26ம் தேதி பவுர்ணமி நாளில் நிகழவுள்ளது.கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அதுவே பூமிக்கு மிக அருகில் வரும்போது, முழு நிலவாக (பவுர்ணமி) இருப்பின், 'சூப்பர்மூன்' என்று அழைக்கப்படுகிறது.


  

இந்த நிகழ்வின் போது, முழு நிலவு வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் இருக்கும். சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச்சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்தில் இருந்து ரத்தச்சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதை வெறும் கண்களால் பார்க்க முடியும்.

ஆசியாவில் சில நாடுகள், ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப்பெருங்கடல், அண்டார்டிகா பகுதியில் முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவில் இந்தமுழு சந்திர கிரகணம் ஒரு பகுதி அல்லது புறநிழல் சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். அதுவும், அனைத்து பகுதிகளிலும் காணமுடியாது.

வரும், 26ம் தேதி, மதியம், 2:17 மணிக்கு ஆரம்பித்து, இரவு, 7:19 மணிக்கு முடிவடையும் இந்த இந்நிகழ்வு, மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும். தொலைநோக்கி, பைனாகுலர் அல் லது வெறும் கண்ணால் கூட நாம் பார்க்கலாம்.வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் இரவு முழுவதும் சூப்பர் மூனை காண முடியும். இந்தாண்டின் அடுத்த சந்திர கிரகணம் நவ., 19ம் தேதி நடக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா