Untitled Document
October 26, 2026 [GMT]
கணவனின் கனவால் கோடீஸ்வரரான கனேடிய பெண்!
[Tuesday 2021-01-26 08:00]

கனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிக்க கடுமையாக உழைத்து வந்துள்ளனர்.


  

20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில் அடிக்கடி ஒரு எண் வந்துள்ளது. அதை அவ்வப்போது அவர் தனது மனைவியிடம் கூறி வந்துள்ளார்.

இதனால், ஒரு நம்பிக்கையுடன் பல ஆண்டுகளாக அந்த பெண் அதே எண்ணில் தொடர்ந்து லொட்டரி சீட்டுகளை வாங்கி வந்திருக்கிறார். அவரது நம்பிக்கையும், அவரது கணவன் கண்ட கனவும் பலித்துவிட்டது.

கொரோனா லாக்டவுன் காலத்தில் கடந்த ஆண்டு தன்னை வேலையை இழந்து துன்பத்தில் இருந்த அவருக்கு அடித்தது அதிர்ஷ்டம், Ontario Lottery and Gaming லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக விழுந்துள்ளது.

இந்நிலையில், தனக்கு சில வைரங்களை வாங்குவதோடு, Pravatoudom அவரது கணவரும் முதலில் தங்கள் கடன்களை செலுத்தி தங்கள் குழந்தைகளுக்கு உதவுவதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்

மேலும் தனது, அம்மாவும் அப்பாவும் 40 ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து பல தியாகங்களைச் செய்துள்ளதாள் அவர்களும் இந்த மகிழ்ச்சிக்கு தகுதியானவர்கள் என்று Pravatoudom பூரிப்படைந்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா