Untitled Document
October 25, 2026 [GMT]
காட்டுப்பன்றியால் அசிங்கப்பட்ட ஜேர்மனியர்! Top News
[Friday 2020-08-07 17:00]

ஜேர்மனியில் ஆடையின்றி நிர்வாணமாக சூரியக்குளியல் போட்ட ஒருவரின் பையை தூக்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தது காட்டுப்பன்றி ஒன்று. பெர்லினுக்குமேற்கே உள்ள ஏரி ஒன்றின் கரையில் சூரியக்குளியல் போட்டுக்கொண்டிருந்திருக்கிறார் ஒருவர். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று, அவரது லாப் டாப் வைத்திருக்கும் பையைத் தூக்கிக்கொண்டு ஓட, தான் பிறந்த நாள் உடையில் இருப்பதையோ, அங்கு பலர் தன்னைப்போலவே ஏரியின் அழகை ரசித்துக்கொண்டிருப்பதையோ பற்றிக் கவலைப்படாமல், பன்றியைத் துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார் அவர்.


  

அதே பகுதியில் குளிக்க வந்த Adele Landauer என்ற பெண், இந்த காட்சிகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார் (சம்பந்தப்பட்டவரின் சம்மதத்துடன்தான்). புகைப்படத்திற்கு, ’திருப்பித் தாக்கும் இயற்கை, மனிதனை வேட்டையாடும் காட்டுப்பன்றி’ என்று பெயர் வைத்திருக்கிறார் Adele. பிறகு அந்த நபர் எழுப்பிய சத்தத்தில், பையை போட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளது அந்த காட்டுப்பன்றி.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா