Untitled Document
November 7, 2026 [GMT]
இறந்தவர்களின் சாம்பலில் சூப்: குடும்பமாக குடிக்கும் பழங்குடியினர்!
[Saturday 2026-11-07 08:00]

தென் அமெரிக்காவில் வாழும் பழங்குடியினர் மிகவும் வினோதமான சடங்கினை பின்பற்றி வருவது விசித்திரமாக உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் தங்களுக்கென தனித்துவமான பழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கடைபிடிப்பது வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் பழங்குடி இன மக்கள் கடைபிடிக்கும் பழக்கம் சற்று விசித்திரமாகவே இருக்கும். ஆனால் தென் அமெரிக்காவில் வாழும் யனோமாமி பழங்குடி இன மக்களைக் குறித்து பல விடயங்களை தெரிந்து கொள்வோம்.


  

வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் உள்ள அமேசான் மழைக்காடுகளில் வாழ்ந்து வரும் இந்த பழங்குடி இன மக்கள் தங்களது மரபுகளையும், இயற்கையின் மீதும், ஆன்மீகத்தின் மீதும் அதிக பற்று கொண்டவர்கள். இந்த மக்களுக்கு ஒருவரின் மரணம் என்பது அவரது வாழ்க்கை முடிவிட்டது என்று அர்த்தமில்லையாம்... மாறாக ஆன்மா மற்றொரு பயணத்தினை தொடங்கும் என்று நம்புகின்றனர்.

இறந்தவர்களுக்கு சிறப்பு இறுதி சடங்குகள் நடத்தப்படவும் செய்கின்றது. தங்களது இனத்தில் ஒருவர் இறந்துவிட்டால் இறுதி சடங்கினை உடனடியாக செய்யாமல், காட்டில் உள்ள இலைகள் மற்றும் கிளைகள் கொண்டு உடலை மூடி ஒரு இடத்தில் வைக்கின்றனர்.

இவ்வாறு வைக்கப்படும் உடலை சில காலத்திற்கு பராமரிக்கவும் செய்து, ஒரு பகுதியாக எஞ்சியிருக்கும் எச்சங்களை சேர்த்து பின்பு உடலை தகனம் செய்கின்றனர்.

தகனம் செய்யப்படும் உடலின் சாம்பலை கவனமாக சேகரித்து வைப்பது இவர்களது பாரம்பரியம் ஆகும். பின்பு வாழைப்பழத்தில் தயாரிக்கப்படும் சூப் ஒன்றுடன் இந்த சாம்பலை கலந்து குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என அனைவரும் பருகுகின்றனர்.

மானுடவியல் சொற்களில் இந்த பழக்கத்தினை அகநரமாமிச உண்ணல் என்று அழைக்கப்படுகின்றது. இவர்கள் இதனை உணவுக்காக செய்யாமல், இறந்தவர்களுடன் இருக்கும் தொடர்பினை பேணுவதற்கு இவ்வாறான பாரம்பரியத்தினை கடைபிடிக்கின்றனர்.

இவர்களது இந்த பழக்கம் வெளி உலகிற்கு கொடூரமாக தெரிந்தாலும், இந்த இன மக்கள் இதனை அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாகவே பார்க்கின்றனர். அதாவது இறந்தவரின் ஆன்மா சாந்திய அடைவதற்கும், அவரது உடலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதற்கும் இவ்வாறு செய்கின்றனர்.

மேலும் இறந்தவர் தங்களது குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவதாகவும், மேலும் இறந்த ஆத்துமாவிற்கு முறையாக அளிக்கப்படும் பிரியாவிடை என்றும் இவ்வாறு இறுதிசடங்கு செய்தால் தான் ஆன்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கையில் இந்த சடங்கினை புனிதமாக செய்து வருகின்றனர்.

ஒரு கலாச்சாரத்திற்கு விசித்திரமாக தோன்றும் ஒருவரது வழக்கம், மற்றொரு கலாச்சாரத்திற்கு அவை மிகவும் புனிதமாகவே பார்க்கப்படுகின்றது என்பதற்கு Yanomami இன பழங்குடிமக்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com


நீல நிறத்தில் ஒளிரும் கடல்: மும்பை அருகே ஒரு அரிய காட்சி!
[Friday 2026-10-23 17:00]

மும்பை அருகிலுள்ள கடல் ஒன்று இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிர்கிறது. மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள மும்பையின் அருகே அமைந்துள்ள கடல் ஒன்றின் நீர், இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஒளிரும் காட்சிகள் வைரலாகிவருகின்றன. மும்பை அருகிலுள்ள அர்னாலா என்னுமிடத்தில் அமைந்துள்ள கடல் நீர், இரவு நேரத்தில் நீல நிற மின்மினிப்பூச்சிகள் நீந்துவதைபோல் ஒளிர்வதைக் கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.


உலகிலே முதல்முறை: இந்திய சிறுவனுக்கு கண்ணுக்கு மேல் வளர்ந்த பல்!
[Tuesday 2026-10-20 17:00]

இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, வரலாற்றில் முதல்முறையாக கண்ணுக்கு மேல் வளர்ந்த பல் வளர்ந்துள்ளது. இந்தியாவில் 16 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது இடது கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் உள்ள கண் குழியின் மேற்பகுதியில் கடந்த சில மாதங்களாக வலியற்ற வீக்கம் இருந்து வந்தது. முதலில் ஒரு லேசான கட்டியாக இருந்தது, விரைவில் இரண்டு கடினமான, வெள்ளை நிறப் புள்ளிகள் தோலைத் துளைத்துக்கொண்டு வெளிவரத் தொடங்கியது.


60 ஆண்டுகளாக வெட்டப்படாத பாட்டியின் 6 மீட்டர் நீள முடி!
[Saturday 2026-10-17 17:00]

வியட்நாமைச் சேர்ந்த 83 வயது பாட்டி ஒருவர் நீண்டு ஆண்டுகளாக முடியை வெட்டாமல் 6 மீற்றர் நீளத்திற்கு வளர்த்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமைச் சேர்ந்த நெஹூயென் தி தின் என்ற பெண், தனது 19 வயதில் ஏற்பட்ட தலைவலிக்கு மருத்துவ சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.


90 நிமிடங்கள் தூங்கி ரூ.12 லட்சம் சம்பாதித்த நபர்!
[Friday 2026-10-09 16:00]

ஜப்பானில் நடைபெற்ற 90 நிமிட தூக்க போட்டியில் விரைவாகவும், ஆழ்ந்தும் தூங்கிய சுய்மி ரூ.12 லட்சம் பரிசு வென்றுள்ளார். ஜப்பான், பொதுவாக நீண்ட வேலை நேரம், நீண்ட பயண நேரம் மற்றும் பரபரப்பான இரவு நேரப் பொருளாதாரம் ஆகியவை கொண்ட நாடாக உள்ளதால் அந்த நாட்டு மக்கள் குறைந்த நேரமே தூங்குவதாக கூறப்படுகிறது.


3 மாத குழந்தையாக இருந்ததிலிருந்தே நினைவுகளை மீட்டெடுக்கும் சிறுவன்!
[Saturday 2026-09-26 17:00]

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்தி பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். ஆனால் 16 வயதான சிறுவன் ஒருவரால், தான் 3 மாத குழந்தையாக இருந்த காலத்திலிருந்து தனக்கு நடந்த நிகழ்வுகளை நினைவு கூற முடிவதாக தெரிவித்துள்ளது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த சிறுவனின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக ஆய்வாளர்கள் அந்த சிறுவனுக்கு KCL என பெயரிட்டுள்ளனர்.


தெஹ்ரான் வானில் இரவு நேரத்தில் தெரிந்த மர்ம பொருள்!
[Tuesday 2026-09-22 16:00]

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட குறித்த மர்மப் பொருளை, அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களது கைத்தொலைபேசிகளில் காணொளியாகப் பதிவு செய்துள்ளனர்.


1952-ல் அணிவகுத்த பறக்கும் தட்டுகள்: வீடியோ ஆவணங்களை வெளியிட்ட அமெரிக்கா!
[Saturday 2026-09-19 07:00]

பென்டகனின் நிர்வாக உத்தரவின் கீழ் 1952ம் ஆம் ஆண்டை சேர்ந்த UFO ஆவணங்களின் ஆறாவது தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அரசிடம் உள்ள UFO தொடர்பான கோப்புகளை வெளியிடுமாறு நிர்வாக உத்தரவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த உத்தரவின் கீழ் அமெரிக்க ராணுவத்தின் கட்டளை மையமான பென்டகன், UFO தொடர்பான வரலாற்று ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டு வருகிறது. இதுவரை 6 தொகுப்புகளாக நூற்றுக்கும் மேற்பட்ட கோப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 6 தொகுப்பில் 1952ம் ஆண்டை சேர்ந்த பழமையான காட்சிகள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


முதுகு சொறிவதற்கே 300 யுவான்: சீனாவில் வைரலாகும் வித்தியாசமான தொழில்!
[Friday 2026-09-04 16:00]

சீனாவில் முதுகு சொறியும் சேவையை வணிகமாக மாற்றிய தொழில்முனைவோர் ஒருவர், அதனை வெற்றிகரமாக நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் ஷென்சென் நகரில் 32 வயதான ஜாங் சியாவோகியா (Zhang Xiaoqiao) என்பவர் ‘சுமா’ (Suma) என்ற பெயரில் இந்த சேவை நிலையங்களை நடத்தி வருகிறார். இங்கு ஒரு மணிநேர அமர்வுக்கு சுமார் 300 யுவான் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


ஒரு நாடே கடல் நீரில் மூழ்கும் அபாயம்!
[Sunday 2026-08-16 05:00]

கடல் உயர்ந்துகொண்டே சென்றால், ஒரு நாடே வரைபடத்திலிருந்து மறைந்துவிடுமா?தெற்குப் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் வெறும் 26 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புடன் அமைந்துள்ள துவாலு, அந்த அச்சுறுத்தலை நிஜமாக எதிர்கொண்டு வருகிறது. உலகின் கடல் மட்ட உயர்வால் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழும் இந்தச் சிறிய தீவு நாடு, எதிர்காலத்தில் தனது நிலத்தையும் வாழ்விடத்தையும் கடலிடம் இழக்கும் அபாயத்தில் உள்ளது. தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு வெறும் 26 சதுர கிலோமீட்டர்.


வெளியே வந்தால் உடல் எரியும்: மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்!
[Tuesday 2026-08-11 16:00]

இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக். இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.


ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்ட மர்ம கோவில்: 6 மணிக்கு மேல் இங்கு அனுமதியில்லை!
[Monday 2026-08-10 16:00]

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சிவாலயம் பெய்களால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதை பற்றி இப்பொழுது நாம் விரிவாக பார்க்கலாம். நம்முடைய இந்தியா கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாக பார்க்கப்படுகிறது. அதாவது குக் கிராமங்கள் துவங்கி பெரிய பெரிய நகரங்கள் வரை சிறப்புமிக்க பல்வேறு ஆலயங்களும் அதற்கு பின்னால் மிகப்பெரிய அளவில் வரலாறுகளும் உள்ளது. அந்த வகையில், பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டுள்ளது தான் கக்கன்மாத் சிவன் கோவில்.இந்த கோவில் பேய்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.


40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட கோவில்!
[Sunday 2026-08-09 17:00]

இந்தியாவில் உள்ள ஒரு கோவிலை தண்ணீருக்கு பதிலாக 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் உள்ள பண்டசார் சமணக் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 550 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், சமண மதத்தின் ஐந்தாவது தீர்த்தங்கரரான சுமதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவில் தண்ணீருக்குப் பதிலாக நெய்யைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.


மனிதர்களால் முடியவில்லை: Cryptography துறையில் AI வரலாற்றுச் சாதனை!
[Wednesday 2026-08-05 16:00]

உலகின் தலைசிறந்த கிரிப்டோகிராஃபி வல்லுநர்கள் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக ஆராய்ந்தும் கண்டுபிடிக்கத் தவறிய கணிதவியல் பிழையை (Mathematical Flaw), இந்த AI மாடல் வெறும் 60 மணி நேரத் தேடலில் மிகத் துல்லியமாகக் கண்டுபிடித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் முன்னணி நிறுவனமான ‘ஆந்த்ரோபிக்’ (Anthropic) உருவாக்கியுள்ள தனது அதிநவீன ‘க்ளாட் மைத்தோஸ்’ (Claude Mythos) என்ற மாடல், தகவல் பாதுகாப்புத் துறையில் (Cryptography) பெரும் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.


மனித மலத்தில் இருந்து மருந்து!
[Monday 2026-07-27 16:00]

ஆண்டிபயாட்டிக் மருந்துகளுக்குக் கட்டுப்படாத 'சுப்பர் பக்டீரியா' தொற்றுகளுக்கு எதிராக புதிய சிகிச்சை முறையாக "மல நுண்ணுயிர் உறையுறைகள்" (Poop Pills) பயன்படுத்தும் ஆய்வு இங்கிலாந்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிகிச்சைக்காக, ஆரோக்கியமான நபர்களின் மலத்தில் உள்ள பயனுள்ள குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) சுத்திகரிக்கப்பட்டு, உறையவைக்கப்பட்டு


700 ஆண்டுகால ஸ்பெயின் அரச கல்லறைக்குள் அதிர்ச்சி: எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள்!
[Wednesday 2026-07-22 16:00]

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ‘சாண்டா மரியா டி பெட்ரால்பஸ்’ (Santa Maria de Pedralbes) மடாலயத்தில், 700 ஆண்டுகள் பழமையான அரச கல்லறைகளைத் திறந்து தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் எதிர்பாராத திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 14-ஆம் நூற்றாண்டில் அரசி எலிசெண்டா (Queen Elisenda) என்பவரால் நிறுவப்பட்ட இந்த வரலாற்றுச் சின்னத்தின் 700-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளுக்கு முற்றிலும் மாறான உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா