Untitled Document
May 11, 2024 [GMT]
ருவாண்டா இனவழிப்பிற்கும், தமிழ் இனவழிப்பிற்கும் சர்வதேச சக்திகளின் முரண்பட்ட நிலைப்பாடு
[Saturday 2024-04-13 15:00]


கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி ஆகும். 100 நாட்களில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும். மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.

கொடூரமான ருவாண்டா இனவழிப்பின் 30ஆவது ஆண்டு நினைவு, 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழாம் திகதி ஆகும். 100 நாட்களில் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் ஏழாம் திகதியிலிருந்து 1994ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் திகதி வரையில் 800,0000க்கும் மேற்பட்ட Tutsi இன மக்களையும். மிதவாத Hutu இனமக்களையும், Hutu பெரும்பான்மையினம் கொன்றொழித்திருந்தது.

  

ருவாண்டா இன அழிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில், இவ் இன அழிப்பை சர்வதேச சமூகமானது குறிப்பாக பலம் வாய்ந்த சர்வதேச சக்திகள் கவனத்தில் எடுக்கவில்லை. மேலும் படுகொலை இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் நடைபெற்றுக் கொண்டிருப்பது இனவழிப்பென ஏற்றுக் கொள்ள சர்வதேச சக்திகள் மறுத்திருந்தன. 100 நாள்களுக்குப் பின்னரே ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது “இனவழிப்பு நடவடிக்கை” என அமெரிக்கா குறிப்பிட்டிருந்தபோதும் இந்நடவடிக்கைகள் இனவழிப்புக் குற்றத்தில் உள்ளடங்குபவை என கூறத் தயாராக இருக்கவில்லை. இது திடர்பாக அமெரிக்காவின் இயலாமை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது எத்தனை “இனவழிப்பு நடவடிக்கைகள்” இனவழிப்பாகும் என பிரபலமான குறிப்பிடத்தக்க கேள்வியை ஒரு ஊடகவியலாளர் வினவியிருந்தார்.

1994ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி வரை அந் நேரத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளராகவிருந்த Warren Christopher, ருவாண்டாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் படுகொலை, இனவழிப்புக் குற்றமென ஏற்றுக் கொள்ளவில்லை. படுகொலையை இனவழிப்பென சர்வதேச சக்திகள் எற்க தயங்குவதற்கு காரணம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இன்ப்படுகொலையென அங்கீகரித்தால் அதனைத் தடுக்க வேண்டிய சட்டக் கடப்பாடு இருப்பதே ஆகும் .

அந் நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படையின் தலைவராகவிருந்த கொபி அனான் (Kofi Annan) ருவாண்டா இனப்படுகொலையை தடுக்கத்தவறியமைக்கு காரணம் அதனைப்பற்றி மேற்குலக நாடுகள் அறியாமல் இதுந்தது என்பதல்ல, மாறாக மேற்குல நாடுகளின் அரசியல் நிலைப்பாடுகளே காரணமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச சக்திகளோ ருவாண்டா இனவழிப்பை நிறுத்தவில்லை. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவண்டா தேசிய முண்ணனியே(Rwandan Patriotic Front) அவ் இனவழிப்பை நிறுத்தியது. இச் சந்தர்ப்பத்தில் தமிழினப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இனவ்ழிப்பை, ருவாண்டா இனப்படுகொலையுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. ருவாண்டா இனவழிப்பை தடுத்து நிறுத்தாதது போன்று தமிழ் இனவழிப்பையையும் தடுத்து நிறுத்தாமைக்குக் காரணம் தமிழினப்படுகொலையை அவர்கள் அறியாமல் இருந்தது என்பது அல்ல மாறாக அந் நாடுகளின் அரசியல் நிலைப்பாடே காரணம் ஆகும்.

ருவாண்டா இனவழிப்பு தொடர்பாகவும், தமிழ் இனவழிப்பு தொடர்பாகவும் சர்வதேச சக்திகளின் நிலைப்பாடுகளில் ஒரு முக்கிய வேறுபாடு இருந்தது. ருவாண்டா மக்களின் விடுதலை இயக்கமான ருவாண்டா தேசிய முன்னணியின் ஆயுதப்போராட்டத்தை முறியடிக்கவில்லை. ஆயினும் முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்பின்போது, தமிழ்த்தேசியத்தின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டத்தை முறியடிப்பதில் சர்வதேச சக்திகள் முக்கிய பங்குவகிக்கின்றன.

சிறிலங்கா தனது தமிழ் இனவழிப்பிற்கு “பயங்கரவாதத்திற்கு எதிரான போர் “ என முலாம் பூசியபோது சர்வதேச சக்திகள் இந்தப் பொய்யை ஏற்றுக் கொண்டதுடன், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பிற்கு ஆயுதங்களையும் வழங்கியது. சர்வதேச சக்திகளின் இந் நடவடிக்கை தமிழ் இனவழிப்பிற்கு அச் சக்திகளும் உடந்தையாக இருத்தது என கருதவேண்டி உள்ளது. சர்வதேச சக்திகள் தலையிடாமல் இருந்திருந்தால் ருவாண்டா தேசிய விடுதலை முன்னணி போன்று, தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறிலங்காவின் தமிழ் இனவழிப்பை தடுத்து நிறுத்தியிருப்பார்கள்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் ஜேர்மனியானது காஸாவில் நடைபெறும் இனவழிப்புக்கு உடந்தையாக இருக்கின்றதென்ற சர்வதேச நீதிமன்றத்தில் ஜேர்மனிக்கெதிரான நிக்கரகுவாவின்(Nicaragua) சட்ட முன்னெடுப்பானது உலகம் முழுவதுமுள்ள இனவழிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வழிகாட்டல்களை வழங்குமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புகின்றது.

கொங்கோவில்(Congo) ருவாண்டாவின் நடவடிக்கை தொடர்பாக, ருவாண்டா அதிகாரி ஒருவர் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமக்கு “சர்வதேசத்தின் அனுமதி தேவையில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்காவிற்கு எதிராக நிக்கரகுவா 1986 ஆம் ஆண்டு உலக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உலக நீதிமன்றம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51 வது சரத்து தற்காப்பு தொடர்பாக தனி நபர்களுக்கும், குழுமங்களுக்கும் உள்ளார்ந்த உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து உள்ளது எனக் கூறியது..

2005ஆம் ஆண்டில் அப்போது அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சராகவிருந்தவர் தமிழர்களைப் பாதுகாப்பதற்கான ருவாண்டா இனவழிப்பின்போது உருவான கோட்பாடான பாதுகாக்கும் பொறுப்பை ‘Responsibility to Protect” [R2P] குறிப்பிட்டிருந்தார். கவலைக்குரிய விடயம் என்னவெனில் அக் கோட்பாடு அரசுகளாலே பின்னர் கொல்லப்பட்டது.

ருவாண்டா இனவழிப்புக்கும், முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புக்குமிடையிலான இன்னொரு முக்கிய வேறுபாடானது நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பானது. ருவாண்டா இனவழிப்பையடுத்து ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச சக்திகளும் இனவழிப்பிற்கு நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை ( (ICTR) உருவாக்கியிருந்தன. தமிழ் இனவழிப்பு தொடர்பாக நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு சர்வதேச தீர்ப்பாயமும் உருவாக்கப்படவில்லை. தமிழ் இனவழிப்புக்கு எந்தவொரு சர்வதேச நீதி தொடர்பாக முன்னெடுப்பும் இதுவரை இல்லை. இனவழிப்பிற்கு எதிரான சாசனத்தின் கைச்சாத்திட்டுள்ள 153 நாடுகளில் எந்தவொரு நாடும் உலக நீதிமன்றத்தில் (International Court of Justice [ICJ]) சிறிலங்காவிற்கு எதிரான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறிலங்கா அரசின், அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் எவரையும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court [ICC].)பரிந்துரைக்கவில்லை.கடந்த 15 ஆண்டுகளாக தமிழர்களின் குருதியின் மேல் சிறிலங்கா நிற்கின்றது- நலன்களின் அடிப்படையில் சிறிலங்காவின் இரத்தம் தோய்ந்த கரங்களை சர்வதேச சக்திகள் தொடர்ந்தும் பற்றிக் கொள்கின்றன.

கடந்த 15 ஆண்டுகளாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனவழிப்புக்காக சிறிலங்கா தேசத்தின் பொறுப்புக்கூறல் தவறல், தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் உக்ரேன், காஸா மோதல்களானவை பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய புதிய சர்வதேச ஒழுங்கொன்றின் தேவையை உடனடியாக வலியுறுத்துகிறது.

விஸ்வநாதன் உருத்திரகுமரன்

பிரதமர்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  
   Bookmark and Share Seithy.com



இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதிக்கு புதிய அமெரிக்க தூதுவர் ஆதரவு!
[Saturday 2024-05-11 18:00]

இலங்கையில் பொறுப்புக்கூறல், உண்மை, நல்லிணக்கம், நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார்.



2009 இல் இடம்பெற்றது இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்ய வேண்டும்!
[Saturday 2024-05-11 18:00]

தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கொல்பேர்ன் முள்ளிவாய்க்காலில் 169,000 தமிழர்கள் கொல்லப்பட்டது, ஒரு இனப்படுகொலை எனவும் குறிப்பிட்டுள்ளார்.



கிளிநொச்சி, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்! Top News
[Saturday 2024-05-11 18:00]

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது.



முருகனைக் காண கிளிநொச்சி வந்தார் நளினி!
[Saturday 2024-05-11 18:00]

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையான நளினி தனது கணவர் முருகனை பார்ப்பதற்கு கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.



தாளையடியில் குடும்பப் பெண் கழுத்து நெரித்துப் படுகொலை!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.



தம்மிக்க பெரேராவுடன் கலந்துரையாட மொட்டு முடிவு!
[Saturday 2024-05-11 18:00]

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்காதீப இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.



ஒன்ராறியோவின் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டம்! Top News
[Saturday 2024-05-11 18:00]

அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரச் சட்டத்துக்கான 'சட்டமூலம்-104' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் தேதியில் முடிவடையுமாறு ஏழு நாட்களை உள்ளடக்கியதாக 'தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்' (மே 12 - 18) கடைப்பிடிக்கப்படுவதை சட்டமூலம்-104 உறுதிசெய்கிறது.



யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த 15 வயது சிறுமி குழந்தையை கைவிட்டு தப்பியோட்டம்!
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.



ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக எல்லா கட்சிகளும் இணைந்து சதி!
[Saturday 2024-05-11 18:00]

நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பற்றியது! - ஒருவர் காயம்.
[Saturday 2024-05-11 18:00]

யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் நேற்று மழையுடனான காலநிலையின் போது மின்னல் தாக்கி தென்னை மரமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது ஒருவர் காயமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சிறீதரனைச் சந்தித்தார் இந்தியத் தூதுவர்!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.



பொலிசார் உதைத்து விழுந்தியதால் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி! - யாழ்ப்பாணத்தில் சம்பவம்.
[Saturday 2024-05-11 05:00]

யாழ்ப்பாணம் - புன்னாலைக் கட்டுவனில் நேற்றிரவு பொலிஸார் விரட்டிச் சென்ற ஒருவர், மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஜனாதிபதி தேர்தலுக்கு சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை!
[Saturday 2024-05-11 05:00]

ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார் ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.



அறிவுள்ளவர்கள் அனுரவுக்கு வாக்களிக்கமாட்டார்களாம்!
[Saturday 2024-05-11 05:00]

அறிவார்ந்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்களிக்களிக்க மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் உண்மை முகம் தற்போது அவர்களின் பேச்சிலேயே வெளிப்படுகிறது.ராஜபக்ஷர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எவருக்கும் ஆட்சியமைக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.



4 ஆண்டுகளில் 81 பாடசாலைகள் மூடப்பட்டன!
[Saturday 2024-05-11 05:00]

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



மொட்டு நிறுத்தும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதி!
[Saturday 2024-05-11 05:00]

இலங்கையின் 9 ஆவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்யும் நபரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.பெரும்பாலான மக்கள் ராஜபக்ஷர்களுடனே உள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.



தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்!
[Saturday 2024-05-11 05:00]

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தலைமைகளும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வலுவான தீர்மானம் ஒன்றை எடுத்து தமிழ் மக்கள் முன் கொண்டு செல்லும்போது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.



அடுத்தடுத்து சிக்கிய ஐஸ் வியாபாரிகள்!
[Saturday 2024-05-11 05:00]

ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.



பரீட்சை இடைவேளையில் மோதிக்கொண்ட மாணவர்கள்! - வவுனியாவில் பரபரப்பு.
[Saturday 2024-05-11 05:00]

வவுனியா நகரப்பகுதியில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையத்திற்கு முன்பாக நேற்று மதியம் இடம்பெற்றது.



தலைவராக செயற்பட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மைத்திரி மேன்முறையீடு!
[Saturday 2024-05-11 05:00]

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளார்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா