Untitled Document
May 13, 2024 [GMT]
தேசியக்கொடியினை ஏந்தி நிற்பது தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு! -உருத்திரகுமாரன்
[Tuesday 2022-11-22 08:00]





சுதந்திர மனிதன் ஒவ்வொருவருக்கும் தமது தேசத்தின் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை உண்டு. அவ்வாறு தமிழீழ மக்களுக்கும், தமிழீழ தேசத்தின் பிரிக்கப்படமுடியாத அடையாளமாகவுள்ள தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் , இலக்கில் நாம் முன்னோக்கி செல்வதற்கான உற்சாகத்தையும் உணர்வுகைளயும் தமிழீழத் தேசியக்கொடிநாள் புதுப்பித்து நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

சுதந்திர மனிதன் ஒவ்வொருவருக்கும் தமது தேசத்தின் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை உண்டு. அவ்வாறு தமிழீழ மக்களுக்கும், தமிழீழ தேசத்தின் பிரிக்கப்படமுடியாத அடையாளமாகவுள்ள தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் , இலக்கில் நாம் முன்னோக்கி செல்வதற்கான உற்சாகத்தையும் உணர்வுகைளயும் தமிழீழத் தேசியக்கொடிநாள் புதுப்பித்து நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

  

நொவெம்பர் 21 தமிழீழத் தேசியக் கொடி நாளினை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள கொடி நாள் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பேரினவாத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, உலகின் ஜனநாயக நாடுகள் சிலவற்றிலும் தமழீழத் தேசியக்கொடியினை ஏற்றும், ஏந்து உரிமை மறுக்கப்படுவதாகக் கிடைக்கும் தகவல்கள் வேதனை தருவதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை நடாத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தேசங்கள் எங்கும் கொண்டாடப்பட்டு வரும் தமிழீழத் தேசியக் கொடி நாள் செய்தியின் முழுவிபரம் :

இன்று தமிழீழத் தேசியக்கொடி நாள்.

கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் நொவெம்பர் மாதம் 21ம் நாளை, தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை பிரகடனம் செய்திருக்கிறது.

1990ம் ஆண்டு இரண்டாவது தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இத் தேசியக்கொடிக்கு மதிப்பளித்து அதனைக் கொண்டாடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை மேற்கொண்ட பிரகடனத்தின் அடிப்படையில் இவ் ஆண்டு இரண்டாவது தடவையாகத் தமிழீழத் தேசியக்கொடி நாள் கொண்டாடப்படுகிறது.

உலகில் சுதந்திரமடைந்த பல நாடுகள் தமது தேசியக்கொடிக்காக ஒரு நாளைப் பிரகடனம் செய்து கொண்டாடி வருவதனைப்போல, சுதந்திர வேட்கையுடன், தனக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்க வேண்டும் என்ற வேணவா கொண்ட தமிழீழத் தேசமும் தமிழீழத் தேசியக்கொடி நாளைக் கொண்டாடுவது சிறப்பு மிகுந்த நிகழ்வாகும்.

1990ம் ஆண்டு தமிழீழத் தேசியக்கொடி அறிமுகம் செய்யப்பட்ட போது தமிழீழத் தேசியக்கொடி குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விடுத்த உத்தியோகபூர்வப் பிரகடனத்தையும் நாம் இத் தருணத்தில் நோக்குதல் பொருத்தம் மிகுந்ததாகும்.

; «தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்துக்கு ஒரு தேசியக்கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக்கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக்கொடி அமைகிறது» எனத் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகம் செய்யப்பட்டமை குறித்து விடுதலைப்புலிகள் பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு முரசறைந்திருந்தது.

மேலும், தேசியக்கொடியின் நிறங்களாக மஞ்சள், சிவப்பு கறுப்பு, வெள்ளை நிறங்கள் அமைந்திருப்பதற்கான காரணங்கள் குறித்தும் விடுதலைப்புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் தனியானதொரு தேசிய இனம் என்பதால் அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு. இந்தத் தன்னாட்சி உரிமை அவர்களின் அடிப்பமையான அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து. தன்னாட்சி உரிமையினை நிலைநிறுத்தவதற்காக தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதனை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது எனவும்,

தேசிய சுதந்திரம் பெற்று தமிழீழத் தனியரசை அமைத்து விட்டாற்போல நாம் முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் கொள்ள முடியாது. தமிழீழ சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். வர்க்க சாதிய முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும. அதற்கு சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமத்துவமும் சமதர்மமும் சமூகநீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான மாற்றத்தை வேண்டிய அரசியல் இலட்சியத்தை சிவப்பு நிறம் குறியீடு செய்கிறது எனவும்,

விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மனஉறுதியினைக் குறித்துக் காட்டுகிறது எனவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களுக்கு விளக்கம் அளித்திருந்தது.

தமிழீழ மக்களுக்கு உரித்தான தாயகப்பூமியினையும், தமிழீழத்தில் சமூகநீதி நிலவுகின்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற விருப்பினையும், எத்தகைய துன்பம் வந்தாலும் விடுதலையில் உறுதியுடன் செயற்படும் உறுதியினையும் வெளிப்படுத்தும் வகையில் தேசியக்கொடியின் நிறங்கள் அமைந்துள்ளன.

தேசியக்கொடி என்பது ஒரு தேசத்தின் ஆன்மாவாக, அதன் உயிர் நாடியாக, அதன் குறியீடாக இருக்கிறது.

தேசியக்கொடி புனிதம் வாய்ந்த ஒன்று. அது வெறும் சீலைத் துணியல்ல. ஒரு தேசத்தின் கொள்கை, உரிமை, எண்ணம், வாழ்வு, விழுமியம் ஆகியவற்றை உள்ளடக்கி, அவற்றின் குறியீடாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதுதான் தேசியக்கொடி.

நமது தமிமீழத் தேசியக்கொடியானது, நமது தேசிய மாவீர்களின் ஈகத்தின் குறியீடாக,தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக,தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு அமைத்திருந்த தமிழீழ நடைமுறையரசின் நினைவின் நீட்சியாக,தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கை அறித்தின்பாற்பட்டது என்பதன் வெளிப்பாடாக, தேசிய விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையை எட்டியவர்களாய் தமிழீழ மக்கள் வாழ்வதற்கு சமத்துவமும் சமூகநீதியும் நிலவும் புரட்சிகர சமூகத்தை உருவாக்கும் அரசியல் இலக்கின் சாட்சியாக,எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு விடுதலைய அடைய வேண்டும் என்ற மக்களின் உறுதியின் குறியீடாகத் தமிழீழத் தேசியக்கொடி நிமிர்ந்து நிற்கிறது.

நமது தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ மக்கள் அனவரும் உணர்வோடும் எழுச்சியோடும், தமழீழத் தனியரசை அமைத்திடும் உறுதியோடும் நம் கைகளில் ஏந்தி நிற்க வேண்டும்.

அன்பான மக்களே,

தமிழர்கள் 70 ஆயிரம் ஆண்டு நீண்ட வரலாற்றைக் கொண்ட மக்கள்;. இவ் நீண்ட நெடும் வரலாற்றுக்காலத்தில் பல கொடிகள் பறந்தன. இதில் ஒன்று வரலாற்று முக்கியத்துவம் கொண்ட சோழப் பேரரசின் புலிக்கொடி. அப் புலிக்கொடியின் வரலாற்றுநீட்சியாகத்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியையும் தமிழீழத் தேசியக் கொடியையும் நாம் பார்க்க முடியும்.

தேசியக்கொடி என்பது தேசங்களின் கொடி. அந்தத் தேச மக்களின் கொடி. உலகில் உள்ள தேசங்களின் மக்கள் தமது தேசப்பற்றை வெளிப்படுத்தவும், தேசத்தை உலக அரங்கில் பிரதிநிதித்துவம் செய்யவும், தமது தேசங்களின பெருமையினைக் கொண்டுவவதற்கும் தேசியக்கொடியினை ஏந்தி நிற்பார்கள்.

உலகில் தேசங்கள் தமது சாதனைகளை வெளிப்படுத்தி முரசறையும் போதெல்லாம் தேசியக்காடியினை முன்னிறுத்துவார்கள். தேசங்களின் மகிழ்வின் போது தேசியக்கொடியினை தலைநிமிர்த்தியும் துயரத்தின் போது தலைதாழ்த்தியும் தமது உணர்வினை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

உலகில் அமைந்துள்ள தேசங்கள் எல்லாம் தமக்கானதொரு தனியரசை இதுவரை அமைத்துவிடவில்லை. அரசாக அமைந்த தேசங்கள் மட்டுமன்றி அரசற்ற தேசங்களும் தமது விடுதலையை அவாவி தமது தேசியக் கொடிகளை ஏந்தி நிற்கிறார்கள்.

தேசியக்கொடியினை ஏந்தி நிற்பது தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு. சுதந்திர மனிதன் ஒவ்வொருவதுக்கும் தமது தேசத்தின் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை உண்டு.

தமிழீழ மக்களுக்கும், தமிழீழ தேசத்தின் பிரிக்கப்படமுடியாத அடையாளமாக அமைந்துள்ள தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்பதற்கான உரிமையும் சுதந்திரமும் உண்டு.

தாயகத்தில் தமிழீழ மக்களுக்குத் தமது தேசியக்கொடியினை ஏந்தி நிற்கும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. 2009ம் ஆண்டு மே மாத்தில் இருந்து தமிழீழ தேசம் சிங்கள் பௌத்த பேரிகவாதப்பூதத்தின் முழுமையான ஆக்கரிமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கும் அரசியல் உரிமை எமது தாயக மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

சிங்களப் பேரினவாத்தின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகியுள்ள தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல உலகின் ஜனநாயக நாடுகள் சிலவற்றிலும் தமழீழத் தேசியக்கொடியினை ஏற்றும், ஏந்து உரிமை மறுக்கப்படுவதாகக் கிடைக்கும் தகவல்கள் வேதனை தருவதாக அமைகின்றன. இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தை நடாத்தும்.

தாயகத்திலும் உலகில் தமிழர் வாழும் நாடுகள் எங்கும்; தமிழீழத் தேசியக் கொடியினை ஏந்தி நிற்கும் உரிமையினை நாம் நிலைநிறத்த வேண்டும்.

தமிழீழத் தேசியக்கொடி தமிழீழ இலட்சியத்தை நாம் எந்தவித தளர்வுமின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கு ஊக்கம் தந்த வழிகாட்டிய நிற்கிறது. தமிழீழத் தேசியக்கொடிநாள் எமது இலக்கில் நாம் முன்னோக்கி செல்வதற்கான உற்சாகத்தையும் எமது உணர்வுகைளயும் புதுப்பித்து நிற்கிறது.

உலக வரலாறு கண்டிராத வீரத்தினதும் ஈகத்தினதும் குறியீடாக அமைந்திருக்கும் நமது தேசியக்கொடியினை,போர்க்களத்தில் நமது வீரர்கள் அடைந்த வெற்றிகளின்போது பட்டொளி வீசிப்பறந்த நமது தேசியக்கொடியினை,தமிழீழ தேசத்தின் தேசியநிகழ்வுகளில் எல்லாம் தேசியக்கொடிப் பாடலுடன் கம்பீரமாக ஏறிநின்ற நமது தேசியக்கொடியினை, புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தாம் வாழும் கொடிகளுக்கு நிகராக எற்றி மகிழ்ந்து கொண்டாடும் நமது தேசியக் கொடியினை, மாவீர்நாளின் நாம் வணங்கி நிற்கும் தேசியக் கொடியினை, நாம் இன்றைய தமிழீழத் தேசியக்கொடி நாளில் ஏந்தி நிற்கிறோம்.

எமது மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் நாம் உடைத்தெறிய நாம் உறுதி பூண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடாய் நாம் தமிழீழத் தேசியக்கொடியினை ஏந்தி நிற்கிறோம்.

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனயரசு அமையப்போவது காலத்தின் நியதி. இது தவிர்க்க முடியாத வரலாற்றுக் கட்டாயம். உலகின் புவிசார் அதிர்வுகளிள் விளைவாக, தமிழீழ மக்களின் சுதந்திரவேட்கையின் பயனாக ஒரு நாள் தமிழீழத் தனியரசு உதயமாகும்.அப்போது தமிழீழத் தேசத்தின் கொடி தமிழீழ நாட்டுக்கான கொடியாகவும் உலகப்பரப்பெங்கும் பட்டொளி வீசிப்பறக்கும்.

வாழ்க தமிழீழத் தேசியக்கொடி.

வாழ்க தமிழீழ மக்கள்-

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசியக் கொடி நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதாக 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் நள்ளிரவில் கைது!
[Monday 2024-05-13 17:00]

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.



இலங்கையில் தொற்று நோய் அபாயம் - வெசாக்கிற்கும் தடை வருமா?
[Monday 2024-05-13 17:00]

தொற்று நோய் அபாயத்தை காரணம் காட்டி கஞ்சி வழங்க தடையேற்படுத்திய பொலிஸார், அதேபோல் வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.



கஞ்சிக்கு விதித்த தடை வெசாக் தன்சல்களுக்கும் பொருந்துமா?
[Monday 2024-05-13 17:00]

நோய் பரவும் ஆபத்து என தெரிவித்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகத்தினை தடுத்த இலங்கை பொலிஸார் இதே காரணத்திற்காக வெசாக் தன்சல்களை தடை செய்யுமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுப்பார்களா என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.



நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் அருகதை இலங்கை அரசுக்கு இல்லை!
[Monday 2024-05-13 17:00]

நினைவேந்தலில் ஈடுபடும் தமிழர்களை துன்புறுத்தும், அச்சுறுத்தும் , கைதுசெய்யும் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவிக்க முடியாது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பான பேர்ள் தெரிவித்துள்ளது.



சாதாரண தர பரீட்சை விஞ்ஞானம், ஆங்கில பாட வினாத்தாள் சர்ச்சை! - அமைச்சர் விளக்கம்.
[Monday 2024-05-13 17:00]

க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார்.



கொழும்பு வந்தார் டொனால்ட் லூ!
[Monday 2024-05-13 17:00]

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் டொனால்ட் லூ உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வந்துள்ளார்.



தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே நல்லது!
[Monday 2024-05-13 17:00]

இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவது இலங்கையின் நலனுக்கே சிறந்தது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் சிறிதரன்!
[Monday 2024-05-13 17:00]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவு கூர்ந்து ''சிரட்டை ''ஒன்றை சபாபீடத்திற்கு சமர்ப்பித்து அதனைப் பாராளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் கோரிக்கை விடுத்தார்.



மோட்டார் சைக்கிள் மீது மோதிய ஜீப்! - இளைஞனின் கால்கள் முறிந்தன.
[Monday 2024-05-13 17:00]

யாழ்ப்பாணம் - இலுப்பையடிச் சந்திப் பகுதியில் நேற்று மாலை ஜீப் ரக வாகனமொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!
[Monday 2024-05-13 16:00]

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் தற்போது பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர். 08 வருடங்களாக நிலவி வரும் சம்பள பிரச்சினை, மாதாந்த கொடுப்பனவு போன்ற பல பிரச்சினைகளை அடிப்படையாக கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தனர்.



சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய மக்களுக்கு அச்சுறுத்தல் - பெண் கைது! Top News
[Monday 2024-05-13 05:00]

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்த பொதுமக்களை தடையுத்தரவை காண்பித்து பொலிசார் நேற்று மிரட்டியுள்ளனர்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - வேலணையில் அஞ்சலி! Top News
[Monday 2024-05-13 05:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வேலணை வங்களாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நிறைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.



முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு!
[Monday 2024-05-13 05:00]

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.



குடும்பம் ஒன்றின் மாதாந்த நுகர்வு செலவு ஒரு இலட்சத்தைத் தாண்டியது!
[Monday 2024-05-13 05:00]

இலங்கையில் பணவீக்கம் காரணமாக குடும்பமொன்றின் மாதாந்த நுகர்வு செலவு 2023ஆம் ஆண்டில் 103,283 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 16.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கெஹலியவுக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டு!
[Monday 2024-05-13 05:00]

தரம் குறைந்த மருந்துகளை அப்பாவி நோயாளர்களுக்கு வழங்கி அவர்களின் உயிரை ஆபத்தான நிலைக்குத் தள்ளிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது கொலை குற்றச்சாட்டில் வழக்குத் தொடரவுள்ளதாக தெரியவந்துள்ளது.



விஞ்ஞான பாட வினாத்தாளில் பாடத்திட்டத்துக்கு அப்பால் கேள்விகள்! - மதுர விதானகே குற்றச்சாட்டு
[Monday 2024-05-13 05:00]

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.



இடைக்கால அரசுக்கு சொத்துக்களை விற்கும் அதிகாரம் இல்லை!
[Monday 2024-05-13 05:00]

அரசாங்கத்திற்குச் சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்!
[Monday 2024-05-13 05:00]

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் இவ்வாரம் இலங்கைக்ஊ வரவுள்ளார்.



வவுனியாவில் நுங்குத் திருவிழா! Top News
[Monday 2024-05-13 04:00]

வவுனியா - மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா நேற்று நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!
[Monday 2024-05-13 04:00]

கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா