Untitled Document
November 26, 2026 [GMT]
பாராளுமன்றத்தில் கைக்குழந்தையுடன் உரையாற்றிய செனட்டர்!
[Thursday 2026-11-26 16:00]

அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில், 6 மாதக் கைக்குழந்தை அலியாவை கையில் ஏந்தியபடி செனட்டர் பாத்திமா பேமன் உரையாற்றிய காட்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது ஒரு கையில் குழந்தையை அணைத்தபடி, மற்றொரு கையில் மக்கள் குரலை அவர் முன்வைத்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

அவுஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில், 6 மாதக் கைக்குழந்தை அலியாவை கையில் ஏந்தியபடி செனட்டர் பாத்திமா பேமன் உரையாற்றிய காட்சி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது ஒரு கையில் குழந்தையை அணைத்தபடி, மற்றொரு கையில் மக்கள் குரலை அவர் முன்வைத்த விதம் பேசுபொருளாகியுள்ளது.

  

அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த செனட்டர் லிடியா தோர்ப் குழந்தையுடன் விளையாடி சிரித்த காட்சி, கடுமையான அரசியல் விவாதங்களுக்கு நடுவிலும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பிறந்து, எட்டு வயதில் அகதியாகக் குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பாத்திமா பேமனின் வாழ்க்கைப் பயணம் எளிமையானதல்ல.

புதிய மொழி, புதிய நாடு, அடையாளச் சவால்கள் எனப் பல தடைகளைத் தாண்டி முன்னேறிய அவர், 2022-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய கூட்டாட்சி பாராளுமன்றத்திற்குத் தேர்வான முதல் ஹிஜாப் அணிந்த பெண் செனட்டர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

2024-ஆம் ஆண்டில் ஆளும் லேபர் கட்சியிலிருந்து விலகி, 'அவுஸ்திரேலிய வாய்ஸ்' என்ற சொந்தக் கட்சியைத் தொடங்கிய பாத்திமா, பணிபுரியும் குடும்பங்கள், மலிவு விலை குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதி போன்ற அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து பேசி வருகிறார்.

அதேசமயம் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த முதல் மேற்கு அவுஸ்திரேலிய செனட்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அகதியாக வந்த சிறிய தொடக்கத்திலிருந்து பாராளுமன்றத்தின் முக்கியக் குரலாக உயர்ந்த பாத்திமா பேமனின் கதை, கனவு காணும் ஒவ்வொரு இளம் பெண்ணுக்கும் "எந்தச் சூழலிலும் உன் அடையாளத்தையும் இலட்சியத்தையும் விட்டுக்கொடுக்காதே" என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகிறதாக சர்வதேச ஊடகங்க்கள் புகழ்ந்துள்ளன.

  
   Bookmark and Share Seithy.com



அனைத்து விமானங்களையும் நிறுத்திய பிரபல ஐரோப்பிய விமான சேவை நிறுவனம்!
[Thursday 2026-11-26 16:00]

ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்று அனைத்து விமானச் சேவைகளையும் நிறுத்தியது. நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் தனது அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி, செயல்பாடுகளை முடக்கியுள்ளது. ஐரோப்பிய விமான நிறுவனமான நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ், தனது பங்குகள் 54 சதவீதம் சரிந்ததையடுத்து, கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதையும், இதனால் நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதையும் எச்சரித்தது. இந்த நிலையில், கூடுதல் நிதியுதவியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று அது உறுதிப்படுத்தியுள்ளது.



"வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன" - நாடொன்றின் பக்கம் கவனத்தைத் திருப்பும் ஜேர்மனி!
[Thursday 2026-11-26 16:00]

பாரம்பரிய சந்தைகள் ஏமாற்றமளித்துவருவதால் புதிதாக ஒரு நாட்டின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பத் துவங்கியுள்ளது ஜேர்மனி. அமெரிக்கா, வரி மேல் வரியாக போட்டுக்கொண்டே இருக்கிறது, பாரம்பரிய சந்தைகளான சீனா போன்ற நாடுகளில் போதுமான வளர்ச்சி இல்லை, உக்ரைன், ஈரான் போரால் எரிபொருள் விலைகள் அதிகரித்துவருகின்றன. ஆக, இந்த நாடுகள் எதுவும் வேண்டாம், புதிதாக ஏதாவது ஒரு நாட்டுடன் வர்த்தகம் செய்யலாம் என்னும் நிலையை ஜேர்மனி எட்டி விட்டதுபோல் உள்ளது.



கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில் 29,468 பேர் உயிரிழப்பு!
[Thursday 2026-11-26 16:00]

கனடாவில் மருத்துவ காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்களில், கடந்த ஆண்டில், குறைந்தபட்சம் 29,000 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், மருத்துவரை சந்தித்துவிட்டு, பின்னர் அறுவை சிகிச்சை அல்லது ஸ்கேனுக்கான அப்பாயிண்ட்மென்டுக்காக காத்திருக்கும் காலகட்டத்தில், ஆண்டுக்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக ஆய்வமைப்பு ஒன்று தெரிவித்துள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.



கோதுமை ஏற்றுமதியில் உலகின் 2-வது பெரிய நாடாக கனடா உருவாகும் - புதிய அறிக்கை தகவல்!
[Thursday 2026-11-26 07:00]

கடினமான காலநிலை சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ள கனடா, 2026-27 சந்தைப்படுத்தல் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய கோதுமை ஏற்றுமதி நாடாக உருவாகும் என்று Cereals Canada அமைப்பு வெளியிட்டுள்ள புதிய New Wheat Crop Report அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, கனடாவின் 2026 கோதுமை உற்பத்தி 36.1 மில்லியன் டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 5 ஆண்டுகளின் சராசரியை விட 8 சதவீதம் அதிகமாகும்.



குவாண்டம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 50 பில்லியன் யூரோ நிதி - ஐரோப்பிய ஒன்றியத்தின் மெகா திட்டம்!
[Thursday 2026-11-26 07:00]

குவாண்டம் கணினி, குவாண்டம் தொடர்பு மற்றும் அடுத்த தலைமுறை ஆழ்ந்த தொழில்நுட்பங்களில் உலகளாவிய போட்டி அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) 50 பில்லியன் யூரோ மதிப்பிலான புதிய அரச ஆதரவு தொழில்நுட்ப முதலீட்டு நிதியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிதி, ஐரோப்பிய நிறுவனங்கள் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிட உதவும் முக்கிய முயற்சியாக கருதப்படுகிறது. இந்த திட்டம் "Sovereign Tech Equity Fund" என்ற பெயரில் உருவாக்கப்பட உள்ளது.



டிசம்பரில் கனடாவின் மேற்கு பகுதியில் கடும் குளிர் சாத்தியம்!
[Thursday 2026-11-26 07:00]

கோடைக்கால புயல்கள், காட்டுத்தீ, கனமழை மற்றும் வரலாறு காணாத அளவிலான வெப்பநிலை மாற்றங்களுக்குப் பிறகு, வரும் டிசம்பர் மாத வானிலை குறித்த புதிய கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சக்திவாய்ந்த“சூப்பர் எல் நினோ” (Super El Niño) மற்றும் பலவீனமடைந்த துருவச் சுழல் (Polar Vortex) ஆகிய இரண்டு முக்கிய காலநிலை காரணிகள் கனடாவின் வானிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.



அமெரிக்காவில் கடலில் விழுந்த விமானம்: பயணித்த 6 பேரும் உயிரிழப்பு!
[Wednesday 2026-11-25 15:00]

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸிலிருந்து நேற்று மதியம் Cessna 210 எனும் சிறிய ரகவிமானம் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் புளோரிடாவை நோக்கி புறப்பட்டது.



புலம்பெயர்தல் எண்ணிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு: கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் விளக்கம்!
[Wednesday 2026-11-25 15:00]

2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகுக்கக்கூடிய அரசாங்கத்தின் திட்டத்தைத் தடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சி தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது. கனடா அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 380,000 தற்கால குடியிருப்பு அனுமதிகளை மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்று ஃபெடரல் அரசிடம் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.



ரியாத் வர்த்தக மைய கோபுர தாக்குதலில் 12 காயம்!
[Wednesday 2026-11-25 15:00]

சவூதி தலைநகர் ரியாத் வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் மூலம் தாக்கியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.



கனடா - கட்டார் இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
[Wednesday 2026-11-25 15:00]

கட்டாரின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான பரவலான விமர்சனங்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி அஹமட் பின் மொஹமட் அல்-சயீத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் 'கனடா-கட்டார் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கைச்சாத்திட்டனர்.



கொலம்பியாவில் 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஆயுத கும்பல்!
[Wednesday 2026-11-25 07:00]

கொலம்பியாவில் ஆயுத கும்பல் ஒன்று 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் வடக்கு கடற்கரை நகரமான கார்த்தகேனா-வில்(Cartagena) உள்ள பல்பொருள் அங்காடி கடையில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொண்டு செல்லும் கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து பதுங்கி கொண்டுள்ளனர்.



பிரித்தானிய ரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
[Wednesday 2026-11-25 07:00]

பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அதிகாலையில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Dorset பகுதியில் அமைந்துள்ள Christchurch ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவிட்-19 தடுப்பூசியால் பறிபோன 3 இளம் பெண்கள் உயிர்!
[Wednesday 2026-11-25 07:00]

கோவிட் தடுப்பூசி காரணமாக 3 இளம்பெண்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இரண்டாவது தவணை mRNA கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொண்ட மூன்று இளம் பெண்கள் இதயப் பாதிப்புகளால் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.



சீனாவின் ஒத்துழைப்பில் முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்!
[Tuesday 2026-11-24 16:00]

நாளை சீனாவிலிருந்து ஏவப்படும் ஷென்சோ-24 என்ற விண்கலத்தில் செல்லும் முகமது ஜீஷான் அலி, விண்வெளிக்கு செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை பெறுகிறார். வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து நவம்பர் 25 ஆம் திகதி காலை லாங் மார்ச்-2F என்ற ராக்கெட் மூலம், ஷென்சோ-24 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. இதில், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் 2 சீனர்கள் என 3 விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சோதனை திட்டங்களில் ஈடுபட உள்ளனர்.



ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்!
[Tuesday 2026-11-24 16:00]

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்!
[Tuesday 2026-11-24 16:00]

வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.



யேர்மனி முழுவதும் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Tuesday 2026-11-24 16:00]

யேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு யேர்மனியில் உள்ள பேடன்-வூர்ட்டெம்பர்க் மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத்தில் 250-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் தொடங்கிய கனடா!
[Tuesday 2026-11-24 07:00]

கனடாவில் நிரந்தர வதிவிடத்தை (Permanent Residence) பெற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக கருதப்படும் Express Entry திட்டத்தின் கீழ், புதிய அழைப்புகளை கனடா அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. கனடாவின் குடியேற்றத் துறையான Immigration, Refugees and Citizenship Canada (IRCC), நவம்பர் 23 அன்று நடைபெற்ற புதிய தேர்வில் 1,999 பேருக்கு விண்ணப்பிக்க அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.



5 மணி நேரத்திற்கு ஒரு ஏவுகணை: ரஷ்யா உற்பத்தியை அதிகரித்துள்ளதாக உக்ரைன் தகவல்!
[Tuesday 2026-11-24 07:00]

ரஷ்யா தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரஷ்யா சுமார் 5 மணி நேரத்திற்கு ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்கும் அளவுக்கு தனது பாதுகாப்புத் தொழில்துறையை விரிவுபடுத்தியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி, உக்ரைன் போரின் நீடித்த தாக்கத்தையும் ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி திறனையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.



மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய AI உதவி!
[Tuesday 2026-11-24 07:00]

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக, உலகின் மிகப்பெரிய மருத்துவ ஆய்வை பிரித்தானியா தொடங்கியுள்ளது. EDITH எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பெண்கள் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். இந்த ஆய்வின் கீழ், பிரித்தானியாவின் தேசிய மார்பகப் பரிசோதனைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் மாமோகிராம் (Mammogram) ஸ்கேன் படங்களை AI தொழில்நுட்பம் ஆய்வு செய்யும்.


Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா