Untitled Document
November 25, 2026 [GMT]
புலம்பெயர்தல் எண்ணிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு: கனேடிய புலம்பெயர்தல் அமைச்சர் விளக்கம்!
[Wednesday 2026-11-25 15:00]

2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகுக்கக்கூடிய அரசாங்கத்தின் திட்டத்தைத் தடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சி தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது. கனடா அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 380,000 தற்கால குடியிருப்பு அனுமதிகளை மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்று ஃபெடரல் அரசிடம் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகுக்கக்கூடிய அரசாங்கத்தின் திட்டத்தைத் தடுப்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சி தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளது. கனடா அரசு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 380,000 தற்கால குடியிருப்பு அனுமதிகளை மட்டுமே வழங்குவது என முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்று ஃபெடரல் அரசிடம் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  

2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஃபெடரல் அரசிடம் இருப்பதாகவும், அதனால் வீடுகள் தட்டுப்பாடு மற்றும் வேலை கிடைப்பது போன்ற விடயங்களில் பிரச்சினை ஏற்படும் என்றும் கூறி, கன்சர்வேட்டிவ் கட்சியினர் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்.

தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மிஷெல் ரெம்பெல் கார்னர் (Michelle Rempel Garner), கனடா சுமார் 662,000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கினால், கனடாவுக்கு கூடுதல் சுமை ஏற்படாமல் அத்தனை பேரை ஏற்றுக்கொள்ள இயலாது என்று கூறியுள்ளார்.

அரசு, நம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு வேகமாக புலம்பெயர்தல் மூலம் மக்கள்தொகையை பெருக அனுமதித்துள்ளது என்று கூறியுள்ளார் கார்னர்.

இப்படி, மிக அதிகமான மக்கள் மிக வேகமாகப் பெருகுவதால், மருத்துவமனைப் படுக்கைகள், நோயறிதல் கருவிகள், மற்றும் மருத்துவர்களால் சமாளிக்க முடியாது, அதனால் மக்கள் இறக்க நேரிடும், இதுதான் இந்தச் சூழ்நிலையின் யதார்த்தம் என்றும் கூறியுள்ளார் அவர்.

விடயம் என்னவென்றால், கனடா அரசு ஏற்கனவே அறிவித்தபடி 2027ஆம் ஆண்டுக்கான புலம்பெயர்தல் மட்டம், 380,000 பேர்தான். அதுபோக, 2027ஆம் ஆண்டில் மட்டும், கூடுதலாக 282,000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்க ஃபெடரல் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த இரண்டு எண்ணிக்கைகளையும் சேர்த்துத்தான் கன்சர்வேட்டிவ் கட்சியினர், ஃபெடரல் அரசு 2027ஆம் ஆண்டில் 662,000 பேர் வரை நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் .

ஆனால், கன்சர்வேட்டில் கட்சியினர் குறிப்பிடும் அந்த கூடுதல் 282,000 பேரில் பெரும்பாலானோர், ஏற்கனவே தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று கனடாவில் வாழ்ந்துவருபவர்கள்தான் என்கிறார் கனடா புலம்பெயர்தல் அமைச்சரான லினா டியாப் (Lena Metlege Diab).

ஏற்கனவே கனடாவில் வாழ்பவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதி வழங்கும்போது, அவர்களை புதிதாக புலம்பெயர்ந்தவர்களாக கருத முடியாது என்கிறார் அவர்.

அந்த 282,000 பேரில், 200,000 பேர் ஏற்கனவே பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவருபவர்கள். 50,000 பேர் சிறப்பு திட்டங்களின் கீழ் உக்ரைன் மற்றும் ஹொங்ஹொங்கிலிருந்து வந்தவர்கள்.

இதுபோக, நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்காக சுமார் 45,000 இடங்கள் மனிதாபிமான அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் மட்டுமே கனடாவுக்குப் புதிதாக வருபவர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவில் கடலில் விழுந்த விமானம்: பயணித்த 6 பேரும் உயிரிழப்பு!
[Wednesday 2026-11-25 15:00]

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் விமானம் கடலில் விழுந்ததில் அதில் பயணித்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸிலிருந்து நேற்று மதியம் Cessna 210 எனும் சிறிய ரகவிமானம் 2 குழந்தைகள் உட்பட 6 பேருடன் புளோரிடாவை நோக்கி புறப்பட்டது.



ரியாத் வர்த்தக மைய கோபுர தாக்குதலில் 12 காயம்!
[Wednesday 2026-11-25 15:00]

சவூதி தலைநகர் ரியாத் வர்த்தக மைய கோபுரம் மீது ஹவுதி தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர். ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று டிரோன் மூலம் தாக்கியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர்.



கனடா - கட்டார் இடையே புதிய ஒப்பந்தம் கைச்சாத்து!
[Wednesday 2026-11-25 15:00]

கட்டாரின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான பரவலான விமர்சனங்களுக்கு மத்தியிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கலாநிதி அஹமட் பின் மொஹமட் அல்-சயீத் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஒட்டாவாவில் 'கனடா-கட்டார் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்' கைச்சாத்திட்டனர்.



கொலம்பியாவில் 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஆயுத கும்பல்!
[Wednesday 2026-11-25 07:00]

கொலம்பியாவில் ஆயுத கும்பல் ஒன்று 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் வடக்கு கடற்கரை நகரமான கார்த்தகேனா-வில்(Cartagena) உள்ள பல்பொருள் அங்காடி கடையில் ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த 25 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் கொண்டு செல்லும் கவச வாகனத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த முகமூடி அணிந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள், அந்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அருகிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து பதுங்கி கொண்டுள்ளனர்.



பிரித்தானிய ரயில் நிலையத்தில் அதிகாலையில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!
[Wednesday 2026-11-25 07:00]

பிரித்தானியாவில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அதிகாலையில் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Dorset பகுதியில் அமைந்துள்ள Christchurch ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவிட்-19 தடுப்பூசியால் பறிபோன 3 இளம் பெண்கள் உயிர்!
[Wednesday 2026-11-25 07:00]

கோவிட் தடுப்பூசி காரணமாக 3 இளம்பெண்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு இரண்டாவது தவணை mRNA கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொண்ட மூன்று இளம் பெண்கள் இதயப் பாதிப்புகளால் உயிரிழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ரகசிய அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.



சீனாவின் ஒத்துழைப்பில் முதல் முறையாக விண்வெளிக்கு செல்லும் பாகிஸ்தான் வீரர்!
[Tuesday 2026-11-24 16:00]

நாளை சீனாவிலிருந்து ஏவப்படும் ஷென்சோ-24 என்ற விண்கலத்தில் செல்லும் முகமது ஜீஷான் அலி, விண்வெளிக்கு செல்லும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையை பெறுகிறார். வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து நவம்பர் 25 ஆம் திகதி காலை லாங் மார்ச்-2F என்ற ராக்கெட் மூலம், ஷென்சோ-24 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவ உள்ளது. இதில், ஒரு பாகிஸ்தானியர் மற்றும் 2 சீனர்கள் என 3 விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, தியாங்காங் விண்வெளி நிலையத்தில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சி மற்றும் சோதனை திட்டங்களில் ஈடுபட உள்ளனர்.



ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்!
[Tuesday 2026-11-24 16:00]

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.



சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்!
[Tuesday 2026-11-24 16:00]

வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.



யேர்மனி முழுவதும் பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
[Tuesday 2026-11-24 16:00]

யேர்மனியின் பல்வேறு மாநிலங்களில் நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு யேர்மனியில் உள்ள பேடன்-வூர்ட்டெம்பர்க் மாநிலத்தில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும், சாக்சோனி-அன்ஹால்ட் மாநிலத்தில் 250-க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Express Entry மூலம் நிரந்தர வதிவிடத்திற்கான அழைப்புகளை மீண்டும் தொடங்கிய கனடா!
[Tuesday 2026-11-24 07:00]

கனடாவில் நிரந்தர வதிவிடத்தை (Permanent Residence) பெற விரும்பும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக கருதப்படும் Express Entry திட்டத்தின் கீழ், புதிய அழைப்புகளை கனடா அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளது. கனடாவின் குடியேற்றத் துறையான Immigration, Refugees and Citizenship Canada (IRCC), நவம்பர் 23 அன்று நடைபெற்ற புதிய தேர்வில் 1,999 பேருக்கு விண்ணப்பிக்க அழைப்புகளை (ITA) வழங்கியுள்ளது.



5 மணி நேரத்திற்கு ஒரு ஏவுகணை: ரஷ்யா உற்பத்தியை அதிகரித்துள்ளதாக உக்ரைன் தகவல்!
[Tuesday 2026-11-24 07:00]

ரஷ்யா தனது பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரஷ்யா சுமார் 5 மணி நேரத்திற்கு ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை தயாரிக்கும் அளவுக்கு தனது பாதுகாப்புத் தொழில்துறையை விரிவுபடுத்தியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வளர்ச்சி, உக்ரைன் போரின் நீடித்த தாக்கத்தையும் ரஷ்யாவின் இராணுவ உற்பத்தி திறனையும் வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.



மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய AI உதவி!
[Tuesday 2026-11-24 07:00]

மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே துல்லியமாகக் கண்டறிவதில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஆய்வு செய்வதற்காக, உலகின் மிகப்பெரிய மருத்துவ ஆய்வை பிரித்தானியா தொடங்கியுள்ளது. EDITH எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பெண்கள் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். இந்த ஆய்வின் கீழ், பிரித்தானியாவின் தேசிய மார்பகப் பரிசோதனைத் திட்டத்தில் சேகரிக்கப்படும் மாமோகிராம் (Mammogram) ஸ்கேன் படங்களை AI தொழில்நுட்பம் ஆய்வு செய்யும்.



35 ஆண்டுகளாக தேடுவாரற்று கிடந்த சதாம் உசேன் விமானங்கள் விற்பனைக்கு!
[Monday 2026-11-23 16:00]

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய விஐபி போயிங் 747SP (Boeing 747SP) ரக விமானம் உட்பட இரண்டு விமானங்களை ஈராக் ஏர்வேஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிவித்துள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு வளைகுடா போரின்போது குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாப்பதற்காகத் தென்மேற்கு துனிசியாவில் உள்ள டோசியர்-நெஃப்டா (Tozeur-Nefta) சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட இந்த விமானங்கள், சுமார் 35 ஆண்டுகளாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.



நியூயோர்க் செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனிய பெண்!
[Monday 2026-11-23 16:00]

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பாலஸ்தீனியர் மற்றும் முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் படைத்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், வடமேற்கு குயின்ஸில் உள்ள 12-வது மாவட்டத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹான் கோன் டோவை எதிர்த்து 74.5 சதவீத வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார்.



கனடாவில் நேரம் தாமதித்த விமானம்: நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2026-11-23 16:00]

கனடாவில் திட்டமிட்ட நேரத்தை விட சுமார் 16 மணிநேரம் தாமதமாக வான்கூவர் வந்தடைந்த பயணிகள் இருவருக்கு, பிரபல விமான நிறுவனமான வெஸ்ட்ஜெட் மொத்தமாக 2,226.92 டொலர்களை நஷ்டஈடாக வழங்க வேண்டும் என பிரிட்டிஷ் கொலம்பியா சிவில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் திகதி, கெவின் மற்றும் மேரி ஐசோபல் ஃப்ரேசர் ஆகிய இருவரும் அமெரிக்காவின் மினியாபோலிஸிலிருந்து கனடாவின் ரெஜினா ஊடாக வான்கூவர் நோக்கிப் பயணித்துள்ளனர்.



சூடுபிடிக்கும் இஸ்ரேல் அரசியல் களம்: நெதன்யாகு அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்!
[Monday 2026-11-23 16:00]

புதிய அரசை அமைப்பதற்கு இஸ்ரேல் எதிர்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள காலக்கெடு எதிர்வரும் டிசம்பர் 6 திகதியுடன் முடிவடைகிற நிலையில் நெதன்யாகு பிரதமராகத் தொடர வாய்ப்பில்லை என சர்வதேச தகவ்லகாள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இஸ்ரேலில் நெதன்யாகு இல்லாத ஆளுங்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட் வியூகம் வகுத்துள்ளார்.இதற்காக அவர் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



டைட்டானிக் கப்பலில் உயிர் தப்பிய பெண் அணிந்த வைர மோதிரம் - ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!
[Monday 2026-11-23 07:00]

டைட்டானிக் கப்பலில் உயிர் தப்பிய பெண் அணிந்த வைர மோதிரம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. 1912-ஆம் ஆண்டு மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான லூசி, லேடி டஃப் கார்டன் (Lady Duff Gordon) அணிந்திருந்த அரிய வைர மோதிரம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 150,000 பவுண்டு (சுமார் ரூ.1.7 கோடி) தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இந்த தொகை, ஏலத்திற்கு முன்பு கணிக்கப்பட்ட 80,000 பவுண்டு மதிப்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.



பெலாரஸ் எல்லைக்கு அருகில் Kamikaze ட்ரோன்ககளை சோதனை செய்யும் ஜேர்மனி!
[Monday 2026-11-23 07:00]

ஜேர்மனியின் ஆயுதப் படையான Bundeswehr, Kamikaze ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் செயல்படும் இலக்கு கண்டறிதல் தொழில்நுட்பங்களை லிதுவேனியாவில் சோதனை செய்து வருகிறது. நேட்டோ கூட்டணியின் கிழக்கு எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. பெலாரஸ் எல்லைக்கு அருகிலுள்ள லிதுவேனியாவின் ருட்னின்காய் (Rūdninkai) இராணுவ பயிற்சி மையத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.



ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம்: பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை!
[Monday 2026-11-23 07:00]

ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் என பிரித்தானிய உளவுத்துறை எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக கடுமையான மற்றும் ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றி வருவது, பெரிய தவறான கணிப்பிற்கு வழிவகுத்து உலகளாவிய மோதலை ஏற்படுத்தக்கூடும் என்று பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் மேத்யூ ஜோன்ஸ் (Matthew Jones) எச்சரித்துள்ளார்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா