Untitled Document
November 22, 2026 [GMT]
அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: அதிர வைக்கும் ஈரான்!
[Sunday 2026-11-22 18:00]

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. நேற்று (21) இரவு அல்-ரிஃபா மற்றும் அவாலி இராணுவத் தளங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அமெரிக்காவின் 2 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. நேற்று (21) இரவு அல்-ரிஃபா மற்றும் அவாலி இராணுவத் தளங்களில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அமெரிக்காவின் 2 பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் அழிக்கப்பட்டதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.

  

ஈரானிய வான்வழியில் அமெரிக்க ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்ததற்கு பதிலடியாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தாக்குதல்கள் பொதுமக்களின் பயன்பாட்டிலுள்ள தொழிற்சாலைக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டதாகவும், ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை இடைமறித்துள்ளதாகவும் பஹ்ரைன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளவாடங்களை இலக்காகக் கொண்டு ஈரான் கடந்த நவம்பர் 18ஆம் திகதி முதல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



நாணயம் சுண்டி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்: அமெரிக்க உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்யம்!
[Sunday 2026-11-22 18:00]

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் நாணயம் சுண்டும் முறை மூலம் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். புளோரிடாவின் அட்லாண்டிக் பீச் நகரின் ஆணையத்திற்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது ஜெனிபர் லாக்னர்(Jennifer Lagner) என்ற வேட்பாளரும், அவரை எதிர்த்து போட்டியிட்ட லிசா ஹெரால்ட்(Lisa herrold) என்ற வேட்பாளரும் தலா 3,162 வாக்குகள் பெற்று சம நிலையில் இருந்துள்ளனர்.



AI காரணமாக பதவியை இழந்த தென் கொரிய கல்வி அமைச்சர்!
[Sunday 2026-11-22 18:00]

தென் கொரியாவில் தேர்வுக் குளறுபடி தொடர்பான முறைகேடு விவகாரம் அந்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அந்நாட்டின் கல்வி அமைச்சர் சோய் கியோ-ஜின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற சுனுங் (Suneung) எனப்படும் வருடாந்திரக் கல்லூரி நுழைவுத் தேர்வின் போது, ​​செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் மேற்கொள்ளப்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகக் கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட குழப்பத்திற்குத் தான் முழுப் பொறுப்பேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.



FBI-யின் முக்கிய மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது!
[Sunday 2026-11-22 18:00]

அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகத்தின் 'மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்' பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஃபௌஸ்டோ இசிட்ரோ மெசா ஃப்ளோரஸ் எனப்படும் 'சாப்போ இசிட்ரோ', மெக்சிகோ விசேட படையினரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (20) இரவு மெக்சிகோவின் சினலோவா மாநிலத்தின் குவாசாவே நகரில் அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களின் அடிப்படையில் மெக்சிகோ விசேட படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.



42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை!
[Sunday 2026-11-22 07:00]

பிரித்தானியாவில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, வேலை செய்து, குடும்பத்தை உருவாக்கிய Nelson Shardey என்ற ஓய்வுபெற்ற கடைக்காரர், நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு 76 வயதில் இறுதியாக பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இந்த சம்பவம் பிரித்தானியாவின் குடியேற்ற நடைமுறைகள் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா நாட்டைச் சேர்ந்த Nelson Shardey, 1977-ஆம் ஆண்டு கல்வியைத் தொடருவதற்காக பிரித்தானியாவிற்கு வந்தார்.



குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கை!
[Sunday 2026-11-22 07:00]

சூப்பர் மார்க்கெட் குளிர்சாதன பெட்டிகளை ஹேக்கர்களிடமிருந்து காக்க பிரித்தானிய அரசு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் உணவு சேமிப்பு மையங்களின் குளிர்சாதன அமைப்புகள் மீது சைபர் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குளிர்சாதன பெட்டிகள் மற்றும் உறைபதன கருவிகளை (Freezers) பாதுகாக்க பிரித்தானிய அரசு ரகசிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.



பின்லாந்து கடல் எல்லையில் பற்றி எரியும் ரஷ்ய சரக்கு கப்பல்: ட்ரோன் தாக்குதலால் பரபரப்பு!
[Sunday 2026-11-22 07:00]

ரஷ்யாவின் கலினின்கிராட் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த Sparta II சரக்கு கப்பல், பின்லாந்து வளைகுடா பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பால்டிக் கடல் பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய அதிகாரிகளின் தகவலின்படி, சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த அந்த கப்பல் மீது 2 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 3 கடல் மைல் தொலைவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை: தவிக்கும் 40,000 மக்கள்!
[Saturday 2026-11-21 18:00]

ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமொன்றில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் உடைந்தது. ரஷ்யாவின் Khabarovsk நகரில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்ததால், சுமார் 40,000 மக்கள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான Khabarovsk-யில் சனிக்கிழமையன்று வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்துள்ளது. அப்போது அந்நகரின் தொழித்துறை மாவட்டத்தில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்துள்ளது.



நாட்டையே உலுக்கிய காட்டுத்தீ: லாஸ் ஏஞ்சல்ஸ் ஊபர் சாரதி குற்றவாளி என தீர்ப்பு!
[Saturday 2026-11-21 18:00]

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறங்களை எரித்து, 12 பேர்களின் உயிரைப் பறித்த பேரழிவு தரும் பாலிசேட்ஸ் தீயை மூட்டியதற்காக, முன்னாள் ஊபர் சாரதி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 30 வயதான ஜொனாதன் ரிண்டர்கெனெக்ட், 2025 புத்தாண்டு தினத்தன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மொத்தமாக தீக்காடாக்கிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மாலிபு பகுதிகளில் ஏற்பட்ட தீ, முழு குடியிருப்புப் பகுதிகளையும் எரித்துச் சாம்பலாக்கியது; இதில் 12 பேர் மரணமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஈரான் எச்சரிக்கை!
[Saturday 2026-11-21 18:00]

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல், கடல் கண்ணிவெடியில் மோதியதில் இன்று(21) தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. அந்த கப்பல் எச்சரிக்கைகளையும் மீறி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், தனது அடையாளம் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளை (identification and navigation systems) அணைத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



கனடாவில் முதியவர்களை ஏமாற்றி கொள்ளையிட்டவர்கள்!
[Saturday 2026-11-21 18:00]

கனடாவின் டொராண்டோ நகரில் முதியவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இடம்பெற்ற நூதன நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கும் நவம்பர் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



கனடா அரசு Ford நிறுவனத்திற்கு 324 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவிப்பு!
[Saturday 2026-11-21 07:00]

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள Ford நிறுவனத்தின் Oakville வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்கவும், ஆயிரக்கணக்கான வாகனத் துறை வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் கனடா அரசு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கனடா மத்திய அரசு Ford Motor நிறுவனத்திற்கு 464.5 மில்லியன் கனேடிய டொலர் (சுமார் 324 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி வழங்கவுள்ளது. மேலும், ஒன்ராறியோ மாகாண அரசும் இதே அளவிலான நிதியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இ-சிகரெட்டுகளுக்கு வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டம்!
[Saturday 2026-11-21 07:00]

சுவிட்சர்லாந்தில் பயன்பாடு அதிகரித்து வரும் இ-சிகரெட்டுகள் (Vapes) மீதும் கூடுதல் கட்டணம் விதிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்வைத்துள்ளது. புகைப்பிடித்தலைக் குறைக்கும் மற்றும் நிகோட்டின் அடிமைத்தனத்தைத் தடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான நிதியை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது சுவிட்சர்லாந்தில் சிகரெட் விற்பனையில் இருந்து வசூலிக்கப்படும் ஒரு சிறப்பு கட்டணம், நாட்டின் புகையிலை தடுப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்படுகின்றன.



போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணைகள்: ஐரோப்பாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள உக்ரைன் போர்!
[Saturday 2026-11-21 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான் தாக்குதலின்போது, இரண்டு ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ஜெட் இயக்க ட்ரோன் அண்டை நாடான போலந்தின் எல்லைக்குள் நுழைந்து விழுந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை போலந்து அரசு "ரஷ்யாவின் திட்டமிட்ட தூண்டுதல் நடவடிக்கை" என்று குற்றம் சாட்டியுள்ளது.



பிரான்ஸில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
[Friday 2026-11-20 16:00]

பிரான்ஸின் வால்-துவாஸ் (Val-d'Oise) பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதுடைய தமிழ் பெண் உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அவர், அன்றைய தினம் கார் ஒன்றை வாங்குவது தொடர்பாகப் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னுவ் (La Courneuve) நகரிலுள்ள வாகனத் திருத்த நிலையமொன்றிற்குச் (Garage) சென்றிருந்ததாக அவரது பிள்ளைகள் காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.



குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் ஜேர்மன் கட்சிகள்!
[Friday 2026-11-20 16:00]

ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஜேர்மனியின் ஆளும் கூட்டணியிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஜேர்மனியை ஆளும் கூட்டணியில் Christian Democratic Union (CDU), Christian Social Union (CSU) மற்றும் Social Democratic Party (SPD) என்னும் மூன்று கட்சிகள் உள்ளன.



10,000 ரோஹிங்கியா மக்களைக் கொன்ற மியான்மர் படைகள்!
[Friday 2026-11-20 16:00]

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று (19) தெரிவித்துள்ளது. ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.



கனடாவில் எளிதாக ஜாமீன் பெற்றுவிடலாம் என்று கூறிய குற்றவாளி: நீதிபதியின் பதிலடி!
[Friday 2026-11-20 16:00]

கனடாவில் வழக்கொன்றில் தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர், புதிய சட்டம் ஒன்றை மேற்கோள் காட்டி குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த கனேடியர் ஒருவர், தன் முன்னாள் காதலியை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார். கனடாவின் Newfoundlandஇல் வாழும் ஸாக்கரி டன்பி (Zachary Dunphy) என்பவர், உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்த தன் முன்னாள் காதலியை, முடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்ததுடன், கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளார்.



170 மில்லியன் டொலர் மதிப்பில் பிரம்மாண்ட மாளிகை வாங்கிய மார்க் சுக்கர்பெர்க்!
[Friday 2026-11-20 07:00]

மார்க் சுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதி 170 மில்லியன் டொலர் மதிப்பில் பிரம்மாண்ட மாளிகையை வாங்கியுள்ளது. உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டாவின் (Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மயாமியில் உள்ள மிகப் பிரபலமான "பில்லியனர்கள் தீவு" என அழைக்கப்படும் இந்தியன் க்ரீக் தீவில் 170 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட மாளிகையை வாங்கியுள்ளனர்.



கனடாவின் Most Wanted பட்டியல்: கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு!
[Friday 2026-11-20 07:00]

கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடத்தில் கோல்டி பிரார் பெயர் உள்ளது. கனடாவில் தேடப்பட்டுவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவுடி கும்பல் தலைவரான (gangster) கோல்டி பிரார் (Goldy Brar) குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 2.5 லட்சம் கனேடிய டொலர் (சுமார் ரூ.1.63 கோடி) வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் 25 மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.



ஜேர்மனியில் AI உதவியுடன் சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு!
[Friday 2026-11-20 07:00]

ஜேர்மனியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஜேர்மனியின் கூட்டாட்சி தகவல் பாதுகாப்பு அலுவலகம் (BSI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், AI தொழில்நுட்பம் தாக்குதலாளர்களுக்கு புதிய சக்தியை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா