Untitled Document
November 21, 2026 [GMT]
கனடாவில் முதியவர்களை ஏமாற்றி கொள்ளையிட்டவர்கள்!
[Saturday 2026-11-21 18:00]

கனடாவின் டொராண்டோ நகரில் முதியவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இடம்பெற்ற நூதன நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கும் நவம்பர் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் டொராண்டோ நகரில் முதியவர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக இடம்பெற்ற நூதன நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் குறித்த மேலதிக தகவல்களை டொராண்டோ காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதிக்கும் நவம்பர் 2 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  

சந்தேகநபர்கள் முதியவர்களை அணுகி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்துக் கவனத்தைத் திசைதிருப்பியவாறு, அவர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருடியுள்ளனர்.

நகைகளை இலகுவாகக் கழற்ற முடியாத சில சந்தர்ப்பங்களில், சந்தேகநபர்கள் பலப்பிரயோகத்தைப் பயன்படுத்தி நகைகளைப் பறித்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்று அடையாளம் காணப்பட்டதுடன், நவம்பர் 3 ஆம் திகதி அவ்வாகனத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே தினத்தில், 'பார்மசி அவென்யூ' மற்றும் 'செயின்ட் கிளேயர் அவென்யூ ஈஸ்ட்' ஆகிய பகுதிகளுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையின்போது, மேலும் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பெருமளவான தங்க நகைகளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை டொராண்டோ காவல்துறையினர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கமைய, அலெக்ஸ் ஸ்டோயன் (21), கிறிஸ்டினா மிக்லெஸ்கு (21), பெர்மொண்டோ-மெக்சிகானோ அலெக்ஸாண்ட்ரு (28), பீட்ரைஸ் டுட்டு (23), ரவுல் அலெக்ஸாண்ட்ரு (21), லுமினிடா பவுன் (40) மற்றும் அயன் ஸ்டோயன் (42) ஆகியோரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டாவது சந்தேகநபர் 17 வயதுடைய சிறுமி என்பதால், இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் அவரது அடையாளத்தை வெளியிட முடியாது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட எட்டுப் பேருக்கும் எதிராக மொத்தமாக 32 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை: தவிக்கும் 40,000 மக்கள்!
[Saturday 2026-11-21 18:00]

ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமொன்றில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் உடைந்தது. ரஷ்யாவின் Khabarovsk நகரில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்ததால், சுமார் 40,000 மக்கள் தவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான Khabarovsk-யில் சனிக்கிழமையன்று வெப்பநிலை மைனஸ் 15 டிகிரி செல்ஸியஸ் ஆக இருந்துள்ளது. அப்போது அந்நகரின் தொழித்துறை மாவட்டத்தில் வெப்பமூட்டும் முதன்மைக் குழாய் ஒன்று உடைந்துள்ளது.



நாட்டையே உலுக்கிய காட்டுத்தீ: லாஸ் ஏஞ்சல்ஸ் ஊபர் சாரதி குற்றவாளி என தீர்ப்பு!
[Saturday 2026-11-21 18:00]

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறங்களை எரித்து, 12 பேர்களின் உயிரைப் பறித்த பேரழிவு தரும் பாலிசேட்ஸ் தீயை மூட்டியதற்காக, முன்னாள் ஊபர் சாரதி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 30 வயதான ஜொனாதன் ரிண்டர்கெனெக்ட், 2025 புத்தாண்டு தினத்தன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மொத்தமாக தீக்காடாக்கிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மாலிபு பகுதிகளில் ஏற்பட்ட தீ, முழு குடியிருப்புப் பகுதிகளையும் எரித்துச் சாம்பலாக்கியது; இதில் 12 பேர் மரணமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.



ஹோர்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்: ஈரான் எச்சரிக்கை!
[Saturday 2026-11-21 18:00]

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே சென்றுகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பல், கடல் கண்ணிவெடியில் மோதியதில் இன்று(21) தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. அந்த கப்பல் எச்சரிக்கைகளையும் மீறி தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததாகவும், தனது அடையாளம் மற்றும் வழிசெலுத்தல் அமைப்புகளை (identification and navigation systems) அணைத்து வைத்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



கனடா அரசு Ford நிறுவனத்திற்கு 324 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவிப்பு!
[Saturday 2026-11-21 07:00]

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள Ford நிறுவனத்தின் Oakville வாகன உற்பத்தி ஆலையை நவீனமயமாக்கவும், ஆயிரக்கணக்கான வாகனத் துறை வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் கனடா அரசு நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், கனடா மத்திய அரசு Ford Motor நிறுவனத்திற்கு 464.5 மில்லியன் கனேடிய டொலர் (சுமார் 324 மில்லியன் அமெரிக்க டொலர்) நிதியுதவி வழங்கவுள்ளது. மேலும், ஒன்ராறியோ மாகாண அரசும் இதே அளவிலான நிதியை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இ-சிகரெட்டுகளுக்கு வரி விதிக்க சுவிட்சர்லாந்து திட்டம்!
[Saturday 2026-11-21 07:00]

சுவிட்சர்லாந்தில் பயன்பாடு அதிகரித்து வரும் இ-சிகரெட்டுகள் (Vapes) மீதும் கூடுதல் கட்டணம் விதிக்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு முன்வைத்துள்ளது. புகைப்பிடித்தலைக் குறைக்கும் மற்றும் நிகோட்டின் அடிமைத்தனத்தைத் தடுக்கும் முயற்சிகளுக்கு தேவையான நிதியை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது சுவிட்சர்லாந்தில் சிகரெட் விற்பனையில் இருந்து வசூலிக்கப்படும் ஒரு சிறப்பு கட்டணம், நாட்டின் புகையிலை தடுப்பு நிதிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியின் மூலம் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்படுகின்றன.



போலந்தில் விழுந்த ரஷ்ய ஏவுகணைகள்: ஐரோப்பாவில் பதற்றத்தை அதிகரித்துள்ள உக்ரைன் போர்!
[Saturday 2026-11-21 07:00]

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான் தாக்குதலின்போது, இரண்டு ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ஜெட் இயக்க ட்ரோன் அண்டை நாடான போலந்தின் எல்லைக்குள் நுழைந்து விழுந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை போலந்து அரசு "ரஷ்யாவின் திட்டமிட்ட தூண்டுதல் நடவடிக்கை" என்று குற்றம் சாட்டியுள்ளது.



பிரான்ஸில் யாழ்ப்பாணப் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
[Friday 2026-11-20 16:00]

பிரான்ஸின் வால்-துவாஸ் (Val-d'Oise) பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதுடைய தமிழ் பெண் உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த அவர், அன்றைய தினம் கார் ஒன்றை வாங்குவது தொடர்பாகப் பாரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னுவ் (La Courneuve) நகரிலுள்ள வாகனத் திருத்த நிலையமொன்றிற்குச் (Garage) சென்றிருந்ததாக அவரது பிள்ளைகள் காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தனர்.



குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் ஜேர்மன் கட்சிகள்!
[Friday 2026-11-20 16:00]

ஜேர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஜேர்மனியின் ஆளும் கூட்டணியிலுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியினர், குடியுரிமை விதிகளை மீண்டும் கடுமையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஜேர்மனியை ஆளும் கூட்டணியில் Christian Democratic Union (CDU), Christian Social Union (CSU) மற்றும் Social Democratic Party (SPD) என்னும் மூன்று கட்சிகள் உள்ளன.



10,000 ரோஹிங்கியா மக்களைக் கொன்ற மியான்மர் படைகள்!
[Friday 2026-11-20 16:00]

முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்களின் பெரும் பகுதியை அழிக்கும் நோக்கில், 2017ஆம் ஆண்டு மியன்மார் இராணுவம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சுமார் 10,000 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) இன்று (19) தெரிவித்துள்ளது. ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.



கனடாவில் எளிதாக ஜாமீன் பெற்றுவிடலாம் என்று கூறிய குற்றவாளி: நீதிபதியின் பதிலடி!
[Friday 2026-11-20 16:00]

கனடாவில் வழக்கொன்றில் தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர், புதிய சட்டம் ஒன்றை மேற்கோள் காட்டி குற்றவாளிக்கு ஜாமீன் கொடுக்க மறுத்துள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த கனேடியர் ஒருவர், தன் முன்னாள் காதலியை கத்தியைக் காட்டி மிரட்டிய வழக்கில் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார். கனடாவின் Newfoundlandஇல் வாழும் ஸாக்கரி டன்பி (Zachary Dunphy) என்பவர், உணவகம் ஒன்றிற்குச் சென்றிருந்த தன் முன்னாள் காதலியை, முடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்ததுடன், கத்தியைக் காட்டியும் மிரட்டியுள்ளார்.



170 மில்லியன் டொலர் மதிப்பில் பிரம்மாண்ட மாளிகை வாங்கிய மார்க் சுக்கர்பெர்க்!
[Friday 2026-11-20 07:00]

மார்க் சுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதி 170 மில்லியன் டொலர் மதிப்பில் பிரம்மாண்ட மாளிகையை வாங்கியுள்ளது. உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான மெட்டாவின் (Meta) தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா சான் அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் மயாமியில் உள்ள மிகப் பிரபலமான "பில்லியனர்கள் தீவு" என அழைக்கப்படும் இந்தியன் க்ரீக் தீவில் 170 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட மாளிகையை வாங்கியுள்ளனர்.



கனடாவின் Most Wanted பட்டியல்: கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு!
[Friday 2026-11-20 07:00]

கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடத்தில் கோல்டி பிரார் பெயர் உள்ளது. கனடாவில் தேடப்பட்டுவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவுடி கும்பல் தலைவரான (gangster) கோல்டி பிரார் (Goldy Brar) குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரை கைது செய்ய உதவும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 2.5 லட்சம் கனேடிய டொலர் (சுமார் ரூ.1.63 கோடி) வரை பரிசுத்தொகை வழங்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் 25 மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்திலும் அவர் இடம்பெற்றுள்ளார்.



ஜேர்மனியில் AI உதவியுடன் சைபர் தாக்குதல்கள் அதிகரிப்பு!
[Friday 2026-11-20 07:00]

ஜேர்மனியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் சைபர் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளதால், அந்த நாட்டின் இணைய பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. ஜேர்மனியின் கூட்டாட்சி தகவல் பாதுகாப்பு அலுவலகம் (BSI) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், AI தொழில்நுட்பம் தாக்குதலாளர்களுக்கு புதிய சக்தியை வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



கிரிமியா பாலத்தின் மீது 3வது முறையாக தாக்குதல்!
[Thursday 2026-11-19 16:00]

ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக கிரிமியாவில் பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தின் முக்கிய பாலத்தின் மீது உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வியாழக்கிழமை அதிகாலை டெலிகிராம் பக்கத்தில் ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட கிரிமியா தலைவர் செர்கெய் அக்சியோனோவ் தெரிவித்த தகவலில், இரவில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்.



1,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும்: உக்ரைனுக்கு பிரித்தானிய ட்ரோன்கள்!
[Thursday 2026-11-19 16:00]

பிரித்தானியா உக்ரைனுக்கு 1,000-க்கும் மேற்பட்ட நீண்ட தூரத் தாக்குதல் ட்ரோன்களை வழங்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களும் அடங்கும் என்றே கூறப்படுகிறது. உக்ரைன் தொடர்பிலான கூட்டணியின் கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குவதற்காக வியாழக்கிழமை பெர்லின் வந்தடையும் ஆன்டி பர்னாம், உக்ரைனின் ஆயுதக் களஞ்சியத்திற்கு 260 மில்லியன் பவுண்டுகள் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிப்பார்.



உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதியின் உரையின் போது தூங்கி வழிந்த ட்ரம்ப்!
[Thursday 2026-11-19 16:00]

னாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்களை மூடியபடி தூங்கக் கலக்கத்தில் இருப்பது போன்ற காணொளிக் காட்சிகள் இன்று வியாழக்கிழமை (19) சர்வதேச ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.



சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த வல்லரசு தலைவர்களின் சந்திப்பு!
[Thursday 2026-11-19 16:00]

உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் சர்வதேச கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை இதுவரை எட்டு முறை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது, ஷி ஜின்பிங்குடன் தனக்கு மிகச் சிறந்த நட்புறவு இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.



ரஷ்ய பில்லியனரின் முன்னாள் மனைவி ரூ.7,382 கோடி கோரி பிரித்தானியாவில் வழக்கு!
[Thursday 2026-11-19 07:00]

ரஷ்யாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான விளாடிமிர் போட்டானின் (Vladimir Potanin) மற்றும் அவரது முன்னாள் மனைவி நடாலியா போட்டானினா (Natalia Potanina) இடையிலான விவாகரத்து ஜீவனாம்ச வழக்கு தற்போது பிரித்தானியாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகின் மிகப்பெரிய விவாகரத்து ஜீவனாம்ச வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த வழக்கு லண்டன் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.



ரஷ்யாவின் உதவியுடன் அணுமின் உற்பத்தி நாடாக மாறிய வங்காளதேசம்!
[Thursday 2026-11-19 07:00]

வங்காளதேசம் தனது வரலாற்றில் முதன்முறையாக அணுமின் உற்பத்தி செய்து தேசிய மின்வலையில் இணைத்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் தெற்காசியாவின் இளம் நாடுகளில் ஒன்றான வங்கதேசம், அணுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரூப்பூர் அணுமின் நிலையத்தின் முதல் அலகு தேசிய மின்வலையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.



குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்: வளைகுடா பகுதியில் பதற்றம் தீவிரம்!
[Thursday 2026-11-19 07:00]

அமெரிக்கா ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதையடுத்து, ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. குவைத் அரசு வெளியிட்ட தகவலின்படி, ஈரான் அனுப்பிய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்றன. இதையடுத்து குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு தாக்குதல்கள் தடுக்கப்பட்டன.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா