Untitled Document
November 10, 2026 [GMT]
ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ள பாகிஸ்தான் விவசாயிகள்!
[Tuesday 2026-11-10 16:00]

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்காக, பாகிஸ்தான் விவசாயிகள் ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தான் விவசாயிகள் சிலர், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இரண்டு ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹஃபீஸ் கோசோ (43) என்பவரும், அவருடன் இணைந்து 38 விவசாயிகளும் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

பெருவெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புக்காக, பாகிஸ்தான் விவசாயிகள் ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தான் விவசாயிகள் சிலர், தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இரண்டு ஜேர்மன் நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அப்துல் ஹஃபீஸ் கோசோ (43) என்பவரும், அவருடன் இணைந்து 38 விவசாயிகளும் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன.

  

ஜேர்மன் எரிசக்தி ஜாம்பவானான RWE மற்றும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான Heidelberg Materials ஆகிய நிறுவனங்கள் மீதுதான் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதாவது, 2022ஆம் ஆண்டு, சிந்து மாகாணம் ஒரு பெருவெள்ளத்தை எதிர்கொண்டது. அந்த பெருவெள்ளத்தில், தங்கள் பயிர்கள், கால்நடைகள் மற்றும் வீடுகள் என அனைத்தையும் தாங்கள் இழந்துவிட்டதாக தெரிவிக்கும் விவசாயிகள், இந்த நிறுவனங்கள் ஏற்படுத்தும் மாசு காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, அதன் காரணமாக பயங்கர மழை வந்ததாலேயே தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக வாதம் முன்வைத்துள்ளார்கள்.

இது உலகளாவிய பிரச்சினை, ஆகவே, அது உலக அளவில்தான் தீர்க்கப்படவேண்டும் என்கிறார்கள் அவர்கள். இந்த வழக்குக்கு பாகிஸ்தான் மட்டுமின்றி பல ஐரோப்பிய நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன

ஏனென்றால், இந்த வழக்கு வெற்றி பெறுமானால், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இதுபோன்ற பெரு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோர முயன்றுவரும் பல அமைப்புகளுக்கு அது ஒரு பெரும் வெற்றியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட 39 மூதாதையர் மண்டை ஓடுகள்: பிரித்தானிய அருங்காட்சியகம் நடவடிக்கை!
[Tuesday 2026-11-10 16:00]

நாகாலாந்து மக்களின் 39 மூதாதையர்களின் மண்டையோடுகளை பிரித்தானிய அருங்காட்சியகம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. பிரிட்டிஷ் காலனி வாத ஆட்சியின் போது நாகாலாந்து மக்களிடம் இருந்து கொண்டு செல்லப்பட்ட 39 மூதாதையர்களின் உடல் எச்சங்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Pitt Rivers அருங்காட்சியகம் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.



ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது: டொனால்ட் ட்ரம்ப்!
[Tuesday 2026-11-10 16:00]

ஈரானுக்கு எதிரான போர் "இராணுவ ரீதியாகப் பார்க்கையில் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது" என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்கள்கிழமை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஈரானிய பொருளாதாரம் மற்றும் சர்வதேச சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய தொடர் தாக்குதலை தற்போதைக்கு மீண்டும் தொடங்குவதற்குத் தாம் ஆயத்தமாக இல்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.



விமானக் கேடட்களின் மேற்பார்வையாளர் மீது கொடூரத் தாக்குதல் – டக் ஃபோர்ட் கடும் கண்டனம்!
[Tuesday 2026-11-10 16:00]

ஹாமில்டனில் விமானக் கேடட்களின் மேற்பார்வையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஒன்டாரியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது நீங்கள் செய்யக்கூடிய மிகவும் அருவருப்பான செயலாகும்" என்று அவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் 1 ஆம் திகதி, கனடிய ஆயுதப்படையின் 59 வயதான கென்னத் குன்கெல் என்பவர், கேடட்கள் நினைவூட்டல் பூக்களை விநியோகிப்பதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.



புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து பதினான்கு பேர் உயிரிழப்பு!
[Tuesday 2026-11-10 16:00]

கிரீஸ் தீவின் கடற்பகுதியில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் பதினான்கு பேர் உயிரிழந்தனர். கிரீஸ் தீவிலிருந்து சுமார் 15 கடல் மைல் தெற்கே மத்திய தரைக்கடலில் இன்று காலை (09) அந்தப் படகு கண்டெடுக்கப்பட்டதாக கிரேக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.



அதீத வெப்பத்தைத் தொடர்ந்து கடும் குளிர் தாக்கலாம்: எரிசக்தி நிறுவனத்தின் பரிந்துரை!
[Monday 2026-11-09 17:00]

பிரித்தானியர்கள், மோசமான வானிலையை எதிர்கொள்வதற்காக ஆறு உணவுப்பொருட்களை சேமித்துவைக்குமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. பிரித்தானியா, உட்பட பல நாடுகள், எல் நினோ என்னும் இயற்கை நிகழ்வின் காரணமாக அதீத வெப்பத்தை எதிர்கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், அதீத வெப்பத்தைத் தொடர்ந்து கடும் குளிர் தாக்கலாம் பருவநிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.



ஒரே நாளில் 500 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்த உக்ரைன்!
[Monday 2026-11-09 17:00]

போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உக்ரைனிய படைகள் கடுமையான இழப்புகளை சந்தித்து இருப்பதாகவும், ரஷ்ய படைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.



260 அமெரிக்க விமானங்களை வீழ்த்திய ஈரான் - IRGC தகவல்!
[Monday 2026-11-09 17:00]

260 அமெரிக்க விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ஈரானின் IRGC தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல்களின் போது 260 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஏழு MQM-170 கண்காணிப்பு ட்ரோன்களை சேதமின்றி கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை IRGC விண்வெளி மற்றும் ஏவுகணைப் பிரிவு செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.



கணவர் வாயில் தன் மலத்தைத் திணித்து தாக்குதல் நடத்திய பெண்!
[Monday 2026-11-09 17:00]

இங்கிலாந்து ஹாம்ப்ஷயரில் (Hampshire) பிரதேசத்தில் 63 வயதுடைய அலிசன் மூர் (Alison Moore), போதையில் தனது கணவர் ரோப் மூர் (Rob Moore) மீது தாக்குதல் நடத்தி, அவரது வாயில் மலத்தைத் திணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது அலிசன் மூர் (Alison Moore) கணவரைத் துடைப்பக் குச்சியால் முதுகில் அடித்தது, திருமண மோதிரம் அணிந்த கையால் முகத்தில் குத்தியது (மார்ச் 2024 மற்றும் ஆகஸ்ட் 2026) உள்ளிட்ட முந்தைய தாக்குதல்களுக்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.



மின்சார வாகன விற்பனை இலக்கை தளர்த்தும் பிரித்தானியா!
[Monday 2026-11-09 17:00]

பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் புதிய கார் விற்பனையில் 80 சதவீதத்தை மின்சார வாகனங்களாக மாற்றும் இலக்கைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாகன உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சவால்கள் மற்றும் சந்தை நிலவரங்களைக் கருத்திற்கொண்டு இந்த மாற்றம் பரிசீலிக்கப்படுகிறதாக கூறப்படுகின்றது.



ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம்: 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
[Sunday 2026-11-08 16:00]

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.



இங்கிலாந்தில் அடர் பனிமூட்டம்: வாகன ஓட்டிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
[Sunday 2026-11-08 16:00]

பிரித்தானியாவின் பல பகுதியில் நிலவி வரும் தீவிர பனிமூட்டம் காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் நிலவி வரும் கடுமையான பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பொது போக்குவரத்து சேவை பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையமான மெட் ஆபீஸ்(Met Office) மோசமான வானிலையை கருத்தில் கொண்டு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.



இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைக்க காடி ஐசன்கோட்டிற்கு அழைப்பு!
[Sunday 2026-11-08 16:00]

இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிய ஆட்சியை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான காடி ஐசன்கோட்டிடம் (Gadi Eisenkot) ஒப்படைக்கவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸொக் (Isaac Herzog) அறிவித்துள்ளார். 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலியப் நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களையும், காடி ஐசன்கோட் தலைமையிலான மையவாத 'யாஷார்' (Yashar) கட்சி மற்றும் கூட்டணிப் பங்காளிகள் 48 இடங்களையும் பெற்றன.



கனடிய முன்னாள் பிரதமர் ட்ரூடோவிற்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் புதிய பொறுப்பு!
[Sunday 2026-11-08 16:00]

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் புதிய முக்கியப் பொறுப்பு ஒன்றை ஏற்றுள்ளார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பிளவாட்னிக் அரசுப் பள்ளியில் ‘சிறப்பு உறுப்பினராகவும்’, ‘உலகத் தலைவர்கள் வட்டத்தின்’ உறுப்பினராகவும் ஜஸ்டின் ட்ரூடோ இணைந்துள்ளதாக அப்பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



ட்ரம்ப்-புடின் ஒப்பந்தம்: ரஷ்ய டீசலை வாங்க மறுக்கும் எண்ணெய் வர்த்தகர்கள்!
[Sunday 2026-11-08 06:00]

ட்ரம்ப்-புடின் ஒப்பந்தத்திற்குப் பிறகு ரஷ்ய டீசலை வாங்க எண்ணெய் வர்த்தகர்கள் மறுப்பு. அமெரிக்காவிற்கு ரஷ்ய டீசலை ஏற்றிச் சென்ற குறைந்தது மூன்று கப்பல்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே அக்டோபரில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ரஷ்யா தனது டீசல் இருப்புகளை அமெரிக்க மற்றும் உலகச் சந்தைகளுக்கு வழங்கலாம் என்று ட்ரம்ப் ஒப்புக்கொண்டு ஏறக்குறைய ஒரு மாதம் ஆகியும், நடைமுறையில் உள்ள தடைகளை மீறி இதுவரை ஒரு சொட்டு டீசல் கூட அமெரிக்காவை வந்தடையவில்லை.



முடிவுக்கு வரும் நெதன்யாகுவின் ஆட்சி!
[Sunday 2026-11-08 06:00]

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசென்கோட்டைத் தெரிவு செய்தார். இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் புறக்கணித்து, நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை அவரது போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைத்துள்ளார். ஜனாதிபதி ஹெர்சாக் தனது முடிவை சனிக்கிழமை மாலை ஐசென்கோட்டிடம் தெரிவித்தார் என்றும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் அவரிடம் இதற்கான உத்தியோகப்பூர்வ ஆணையை வழங்கவுள்ளார் என்றும் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



குற்றம் நிரூபிக்கப்பட்டால் தாமஸ் மெர்க்கலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு!
[Sunday 2026-11-08 06:00]

தாமஸ் மெர்க்கல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஃபெடரல் சிறார் ஆபாசக் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தாமஸ் மெர்க்கல் சீனியர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம். அவரது மனநிலையையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசப் படங்களில் உள்ள சிறுமிகளின் வயதையும் பொறுத்து அவருக்கான தண்டனைக் காலம் இறுதி செய்யப்படலாம்.



191பேரை உயிரிழக்கத் தூண்டிய மத போதகருக்கு 200 ஆண்டுகள் சிறை!
[Saturday 2026-11-07 17:00]

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின் தலைவரான பால் மெக்கென்சி, 191 பேரின் கொலைக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) அன்று 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கபப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன. பட்டினி கிடந்து உயிரிழந்தோரில் 191 பேரில் 190 பேர் குழந்தைகள் ஆவர். மொம்பாசா உயர் நீதிமன்றத்தில், அவருடன் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருபத்தி நான்கு பேருக்கும் தண்டனை வழங்கப்பட்டது.



கனடாவில் புதிய குடிவரவுத் திட்டம்: 2 இலட்சம் பேருக்கு நிரந்தர வதிவிட வாய்ப்பு!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக் குறைத்து, ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வரும் திறமையான பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



மெலனியா ட்ரம்புக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்த உக்ரைன்!
[Saturday 2026-11-07 17:00]

ரஷ்யா - உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட உக்ரைனியக் குழந்தைகளை மீட்டதற்கும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்கும் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா ட்ரம்புக்கு உக்ரைன் அரசு உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



கனடாவில் கரையொதுங்கிய அமெரிக்க ராணுவ பீப்பாய்!
[Saturday 2026-11-07 17:00]

கனடாவின் கியூபெக்கில், அமெரிக்க ராணுவ பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சென்ற மாதம் 27ஆம் திகதி, கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள Île aux Canards என்னும் சிறு தீவில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான பீப்பாய் ஒன்று கரையொதுங்கியுள்ளது. உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள், அபாயகரமான ரசாயனங்கள் முதலான விடயங்களைக் கையாளும் hazmat குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்களுடன் பொலிசார் அந்த தீவுக்கு விரைந்துள்ளனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா