Untitled Document
November 4, 2026 [GMT]
ஸ்பெயினில் நிகழ்ந்த கோர ரயில் விபத்து: பதவியை ராஜினாமா செய்த போக்குவரத்து துறை அமைச்சர்!
[Wednesday 2026-11-04 07:00]

ஸ்பெயின் ரயில் விபத்தில் 96 பேர் வரை உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த வார புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்கு சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில் சுமார் 96 பேர் வரை உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஸ்பெயின் ரயில் விபத்தில் 96 பேர் வரை உயிரிழந்த நிலையில், அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த வார புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்கு சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது. இதில் சுமார் 96 பேர் வரை உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

  

இதையடுத்து நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், ரயில்வே தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் போக்குவரத்து துறை அமைச்சர் உடனடியாக இந்த விபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று போராட்டங்களை தீவிரப்படுத்தி இருந்தனர்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் நிலையான நகர்வுக்கான அமைச்சர் ஆஸ்கர் புவென்டே, விபத்துக்கான காரணத்தை கண்டறிய அரசு தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும், நான் பதவியில் நீடிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து பேசிவது என்னுடைய கடமை இல்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிந்திப்பது மட்டுமே என்னுடைய முதன்மையான பணி என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை உலுக்கிய ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் ஆஸ்கர் புவென்டே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொதுமக்களிடையே உரையாற்றிய அமைச்சர் புவென்டே, நாட்டில் ஒரே ஆண்டில் இரண்டு பெரும் ரயில் விபத்துகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த பதவியில் நான் நீடிப்பது நியாயமானதாக இருக்காது என்று தெரிவித்தார்.

அத்துடன் விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே நான் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து விட்டதாகவும், ஆனால் அந்த முடிவை இதுவரை வெளியிடாமல் இருந்ததாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், இது அரசியல் நாகரிகம், பொறுப்புக்கூறல் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அளிக்கும் மரியாதை என்று குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



இடைக்கால தேர்தலுக்கு சற்றுமுன் ஈரானிய தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல்!
[Wednesday 2026-11-04 07:00]

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் தொடங்குவதற்கு முன்னதாக ஈரானிய தீவு மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஈரானிய தீவை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. வெளியான தகவல் படி, அமெரிக்க படைகள் ஈரானின் கெஷ்ம்(Qeshm) தீவின் மீது வரம்பிற்குட்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது.



ஹாலோவீன் பார்ட்டியில் நடந்த கத்திக்குத்து: மூன்றாவது சிறுவனை கைது செய்த பொலிஸார்!
[Wednesday 2026-11-04 07:00]

ஹாலோவின் கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயரில் Chandlers Ford பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில் 5 சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தனர். வெளியான தகவலின் படி, கடந்த சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் அடையாளம் தெரியாத சில இளைஞர்கள் அனுமதி இல்லாமல் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.



ஏழு நாடுகளில் பல்பொருள் அங்காடிகள் மீது சைபர் தாக்குதல்!
[Tuesday 2026-11-03 16:00]

ஏழு ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரீஸர்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. சென்ற மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள ஃப்ரிட்ஜ்கள் சைபர் தாக்குதலுக்குள்ளான விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், ஏழு ஐரோப்பிய நாடுகளில், கடைகளிலுள்ள ஃப்ரிட்ஜ் மற்றும் ஃப்ரீஸர்கள் தற்போது சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. சென்ற மாதம், பிரான்சிலுள்ள பல்வேறு பல்பொருள் அங்காடிகளிலுள்ள ஃப்ரிட்ஜ்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகின.



பிரான்சில் சிவப்பாக மாறிய கடல்: அறிவியலாளர்கள் விளக்கம்!
[Tuesday 2026-11-03 16:00]

பிரான்சின் பிரிட்டனி பகுதியில், கடல் சிவப்பு நிறமாக மாறியதால் மக்கள் வியப்பிலாழ்ந்துள்ளனர். கடந்த மாதத்தின் சில நாட்களில் பிரிட்டனி பகுதியில் கடல் நீர் சிவப்பாக மாறியிருப்பதைக் கண்ட மக்கள், அது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அறிவியலாளர்கள் அந்த பகுதியிலிருந்து தண்ணீரை சேகரித்து ஆய்வுக்குட்படுத்தினர்.



ஜெர்மனியில் ஹிட்லரின் ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ கட்டடம் தீக்கிரை!
[Tuesday 2026-11-03 16:00]

ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள கெல்ஸ்டீன் மலையில் அமைந்துள்ள, நாஜி சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் ‘ஈகிள்ஸ் நெஸ்ட்’ (Kehlsteinhaus) உணவகம் மற்றும் வரலாற்றுத் தளம் தீ விபத்தில் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி இரவு ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலாக இருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.



கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: சட்டத்தரணிகள் முன்வைத்துள்ள புதிய வாதம்!
[Tuesday 2026-11-03 16:00]

கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தங்கள் கட்சிக்காரர் பலிகடா ஆக்கப்பட்டதாக சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள். கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சட்டத்தரணிகள் புதிய வாதம் ஒன்றை முன்வைத்துள்ளார்கள். 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.



ஐரோப்பாவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்: பிடித்து தந்தால் 2 மில்லியன் யூரோக்கள் வெகுமதி!
[Tuesday 2026-11-03 07:00]

ஐரோப்பாவின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் நபரான போலே ஜோஸ் குறித்த தகவல் தந்தால் 2 மில்லியன் யூரோக்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று நெதர்லாந்து அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு குற்றங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜோஸ் லீஜ்டெக்கர்ஸை(jos Leijdekkers) கைது செய்வதற்கான தீவிர முயற்சியில் நெதர்லாந்து காவல்துறை களமிறங்கியுள்ளது.



கொத்து குண்டுகளை கையில் எடுத்த வட கொரியா!
[Tuesday 2026-11-03 07:00]

பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்பட்ட கொத்து குண்டுகளை வட கொரியா சோதனை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை மற்றும் நவீன ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை வட கொரியா சோதித்துள்ளது.



சவுதி ராணுவ விமானம் மீது ஹவுதி படையினர் தாக்குதல்!
[Tuesday 2026-11-03 07:00]

சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சவுதி அரேபியாவின் முக்கிய உள்கட்டமைப்புகளான விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்தில் தொடர்ச்சியான பல தாக்குதல்களை நடத்தி இருப்பதாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படை தகவல் தெரிவித்துள்ளது.



தரையில் மோத போகிறோம்: விமானியின் கடைசி வார்த்தைகள்!
[Monday 2026-11-02 16:00]

அமெரிக்காவின் புளோரிடாவின் கிரீன் ஏக்ரஸில் குடியிருப்பு பகுதியில் Learjet 60 விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர். விமான விபத்துக்கு சற்று நேரத்திற்கு முன்பாக விமானிக்கும் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே நடந்த இறுதி தகவல் தொடர்பு பரிமாற்ற ஆடியோ வெளியாகியுள்ளது. மோசமான வானிலை மற்றும் பனி காரணமாக விபத்து நிகழப்போவதாக விமானி கூறுகிறார், அதில் விமானம் வேகமாக கீழிறங்குவதாக குறிப்பிடுகிறார்.



கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு மொபைலில் வந்த எச்சரிக்கை!
[Monday 2026-11-02 16:00]

கோடிக்கணக்கான ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்கு அச்சுறுத்தும் வகையிலான போலி அவசர எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை அமைப்பு ஹேக்கர்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அஞ்சப்படுகிறது. கோடிக்கணக்கான ரஷ்யர்களுக்கு, அணு ஆயுத தாக்குதல் தொடர்பில் அவசர எச்சரிக்கை செய்திகள் வந்ததால் பெரும் பரபரப்பு உருவானது.



இங்கிலாந்தில் குடியேறிகள் காத்திருப்பு காலம் நீடிப்பு!
[Monday 2026-11-02 16:00]

இங்கிலாந்தில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான புதிய குடியேற்றக் கொள்கை மாற்றங்களை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சில குடியேற்றப் பிரிவுகளுக்கான ஐந்து ஆண்டு காத்திருப்புக் காலத்தைப் பத்து ஆண்டுகளாக அதிகரிப்பது தொடர்பில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



அமெரிக்கா - கனடா வர்த்தக உடன்படிக்கை பேச்சுவார்த்தை!
[Monday 2026-11-02 16:00]

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக உறவுகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடன் சுமுகமான மற்றும் பயனுள்ள உரையாடலை மேற்கொண்டதாக கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட பிரதமர் கார்னி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கைக்கான வரைவு குறித்து சமீபத்தில் இடம்பெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே இந்த உரையாடல் அமைந்ததாகக் குறிப்பிட்டார்.



அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் சபாநாயகர் அதிரடி!
[Monday 2026-11-02 07:00]

அணுசக்தி திட்டத்தில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே மோதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் அல்லது எந்தவொரு அழுத்தத்திற்கு மத்தியிலும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தையானது நடத்தப்படாது என ஈரானின் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் அலி நிக்சாத்(Ali Nikzad)திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2026-11-02 07:00]

ஜேர்மனியில் சிறுவர்கள் சேகரித்த ஹாலோவீன் மிட்டாய்களில் கூர்மையான ஊசிகள் மற்றும் திருகுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காக சிறுவர்கள் சேகரித்த மீட்டாய்களுக்குள் கூர்மையான ஊசிகள் மற்றும் சிறிய திருகுகள் போன்ற ஆபத்தான உலோகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜேர்மன் காவல்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



மோட்டார் சைக்கிளை அணுக முயன்ற பொலிஸார்: பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் பலி!
[Monday 2026-11-02 07:00]

பிரித்தானியாவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் உள்ள ஷீர்னஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அணுக முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். ஷெப்பி லீஷர் சென்டர் அருகே பீச் ஸ்ட்ரீட் மற்றும் ராயல் ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.



பிரித்தானியாவில் இடமொன்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றிய புலம்பெயர்ந்தோர்!
[Sunday 2026-11-01 18:00]

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பிரித்தானியாவில் வீடற்ற புலம்பெயர்ந்தோரும், போதைக்கு அடிமையானவர்களும் நகர மையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பெர்க்ஷயர் நகரத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு நேர் கீழே அமைந்துள்ள ரீடிங்கின் சிவிக் பி வாகன நிறுத்துமிடத்தில், குறைந்தது பன்னிரண்டு ஆண்கள் தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர்.



கனடாவில் கௌரவிக்கப்பட்ட 5 வயது இந்திய வம்சாவளி கணித மேதை!
[Sunday 2026-11-01 18:00]

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2026 அக்டோபர் 29 அன்று, 5 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் விஷால் ப்ரஜாபதி தனது அபாரமான அறிவாற்றலுக்காக சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். அர்ஜுன், ஸ்டான்ஃபோர்ட்-பினேட் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல்ஸ் (SB5) மூலம் நடத்தப்பட்ட சோதனையில் IQ 141 மதிப்பெண் பெற்று, உலகளவில் 99.7 சதவீதம் உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.



"நெதன்யாகு வேண்டாம்" - யூத-அரபு கூட்டணிக்கு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்!
[Sunday 2026-11-01 18:00]

இஸ்ரேலில் யூத-அரபு கூட்டணியை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அரபு கட்சிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய எதிர்க்கட்சியை வலியுறுத்தி, டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். சனிக்கிழமை பேரணியில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உண்மையான மாற்றத்திற்கான கடைசி வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்றும், இஸ்ரேலின் நீண்டகாலப் பிரதமரான நெதன்யாகு ஒரு சிறந்த சூழ்ச்சிக்காரர் என்றும் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.



மொஜ்தபா கமேனியின் அதிர வைக்கும் எச்சரிக்கையால் அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்!
[Sunday 2026-11-01 18:00]

அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த வகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், புவியியல் எல்லைகளைக் கடந்து உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளாா். ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலைப் புதுப்பிக்குமாறும் ராணுவத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா