Untitled Document
November 2, 2026 [GMT]
மோட்டார் சைக்கிளை அணுக முயன்ற பொலிஸார்: பிரித்தானியாவில் 18 வயது இளைஞர் பலி!
[Monday 2026-11-02 07:00]

பிரித்தானியாவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் உள்ள ஷீர்னஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அணுக முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். ஷெப்பி லீஷர் சென்டர் அருகே பீச் ஸ்ட்ரீட் மற்றும் ராயல் ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பிரித்தானியாவில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிரித்தானியாவின் கென்ட் மாகாணத்தில் உள்ள ஷீர்னஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை அணுக முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். ஷெப்பி லீஷர் சென்டர் அருகே பீச் ஸ்ட்ரீட் மற்றும் ராயல் ரோடு பகுதியில் காவல்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  

அப்போது அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை காவல் அதிகாரி கால்நடையாக சென்று அணுக முயன்றுள்ளார். அப்போது காவலர் நெருங்கி வருவதால் பதறிய அந்த இளைஞர் வாகனத்தை சிறிய சந்து பகுதிக்குள் வேகமாக இயக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 18 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் 18 வயது இளைஞருடன் பயணித்த 16 வயது சிறுவன் பலத்த காயமடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக லண்டன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் அணுகலைத் தொடர்ந்து இந்த விபத்து நடைபெற்றுள்ளதால்,காவல்துறை நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்தின்(IOPC) விசாரணைக்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்திற்கான முழுமையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம்: ஈரான் சபாநாயகர் அதிரடி!
[Monday 2026-11-02 07:00]

அணுசக்தி திட்டத்தில் எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டோம் என்று ஈரான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே மோதலானது தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், எத்தகைய சூழ்நிலையிலும் அல்லது எந்தவொரு அழுத்தத்திற்கு மத்தியிலும் ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தையானது நடத்தப்படாது என ஈரானின் நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகர் அலி நிக்சாத்(Ali Nikzad)திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
[Monday 2026-11-02 07:00]

ஜேர்மனியில் சிறுவர்கள் சேகரித்த ஹாலோவீன் மிட்டாய்களில் கூர்மையான ஊசிகள் மற்றும் திருகுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்காக சிறுவர்கள் சேகரித்த மீட்டாய்களுக்குள் கூர்மையான ஊசிகள் மற்றும் சிறிய திருகுகள் போன்ற ஆபத்தான உலோகப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜேர்மன் காவல்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



பிரித்தானியாவில் இடமொன்றை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றிய புலம்பெயர்ந்தோர்!
[Sunday 2026-11-01 18:00]

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பிரித்தானியாவில் வீடற்ற புலம்பெயர்ந்தோரும், போதைக்கு அடிமையானவர்களும் நகர மையத்தில் வாகன நிறுத்துமிடத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக மாற்றியுள்ளனர். பெர்க்ஷயர் நகரத்தின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு நேர் கீழே அமைந்துள்ள ரீடிங்கின் சிவிக் பி வாகன நிறுத்துமிடத்தில், குறைந்தது பன்னிரண்டு ஆண்கள் தற்காலிக வீடுகளை அமைத்துள்ளனர்.



கனடாவில் கௌரவிக்கப்பட்ட 5 வயது இந்திய வம்சாவளி கணித மேதை!
[Sunday 2026-11-01 18:00]

கனடாவின் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் 2026 அக்டோபர் 29 அன்று, 5 வயது இந்திய வம்சாவளி சிறுவன் அர்ஜுன் விஷால் ப்ரஜாபதி தனது அபாரமான அறிவாற்றலுக்காக சிறப்பாக கௌரவிக்கப்பட்டார். அர்ஜுன், ஸ்டான்ஃபோர்ட்-பினேட் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல்ஸ் (SB5) மூலம் நடத்தப்பட்ட சோதனையில் IQ 141 மதிப்பெண் பெற்று, உலகளவில் 99.7 சதவீதம் உயர்ந்த அறிவாற்றல் கொண்டவர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.



"நெதன்யாகு வேண்டாம்" - யூத-அரபு கூட்டணிக்கு ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்!
[Sunday 2026-11-01 18:00]

இஸ்ரேலில் யூத-அரபு கூட்டணியை வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக அரபு கட்சிகளுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய எதிர்க்கட்சியை வலியுறுத்தி, டெல் அவிவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். சனிக்கிழமை பேரணியில் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உண்மையான மாற்றத்திற்கான கடைசி வாய்ப்பு இதுவாக இருக்கலாம் என்றும், இஸ்ரேலின் நீண்டகாலப் பிரதமரான நெதன்யாகு ஒரு சிறந்த சூழ்ச்சிக்காரர் என்றும் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.



மொஜ்தபா கமேனியின் அதிர வைக்கும் எச்சரிக்கையால் அமெரிக்காவிற்கு காத்திருக்கும் சிக்கல்!
[Sunday 2026-11-01 18:00]

அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த வகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், புவியியல் எல்லைகளைக் கடந்து உடனடியாகப் பதிலடி கொடுக்கப்படும்’ என்று ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி எச்சரித்துள்ளாா். ராணுவ அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சாத்தியமான இலக்குகளின் பட்டியலைப் புதுப்பிக்குமாறும் ராணுவத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.



பிரித்தானியாவில் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மர்ம ஆயுதங்கள்!
[Sunday 2026-11-01 07:00]

பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த சோதனையை தொடர்ந்து வெடிபொருள் மற்றும் ஆயுத வழக்கில் 35 வயது நபர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு பெல்ஃபாஸ்ட் பகுதியில் ஷான்கில் சாலை மற்றும் எட்வினா சாலை அமைந்துள்ள பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த அக்டோபர் 30 மற்றும் அக்டோபர் 31ம் திகதிகளில் இலக்கு வைக்கப்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சந்தேகத்திற்குரிய பல பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு விரிவான தடயவியல் ஆய்வுக்காக பொலிஸார் அனுப்பி வைத்தனர்.



ஜேர்மனியில் Gen Z இளைஞர்கள் போராட்டம்!
[Sunday 2026-11-01 07:00]

அரசியல் மாற்றம் மற்றும் பல்வேறு உரிமைகளை கோரி ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் ஜேர்மன் நகரங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஜேர்மனியின் அரசியலில் இளைஞர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உறுதியளிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஜென் ஜி(Gen Z) இளைஞர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள்!
[Sunday 2026-11-01 07:00]

பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட பாலஸ்தீன ஆக்சன் அமைப்புக்கு ஆதரவாக திரண்ட மக்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லண்டனின் நைன் எல்ம்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே பாலஸ்தீன ஆக்சன்(Palestine Action) என்ற அமைப்பிற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இந்த பாலஸ்தீன ஆக்சன் அமைப்பானது பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.



உடலிலும் மனதிலும் வலி: மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் தப்பிய பெண்!
[Saturday 2026-10-31 16:00]

அமெரிக்காவில், மரண தண்டனை நிறைவேற்றும்போது உயிர் பிழைத்த கிறிஸ்டா பைக் என்னும் பெண், தான் கடுமையான வலியில் கண் விழித்ததாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், ஊசி மூலம் பெண்ணொருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றும் முயற்சியில் அவர் உயிரிழக்காமல் பிழைத்துக்கொண்ட விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட அனுபவம் மற்றும் தனது தற்போதைய நிலை குறித்து அந்தப் பெண் பகிர்ந்துகொண்டுள்ளார்.



இஸ்ரேலை ஆளப்போவது யார்? - ஓரம் கட்டப்பட்ட நெதன்யாகு!
[Saturday 2026-10-31 16:00]

இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளன. இஸ்ரேல் பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்தநிலையில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த சாதனை என கூறப்படும் நிலையில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது. 99 சதவீத வாக்குப்பெட்டிகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட் டணி 54 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.



விடாப்பிடியாக சாதித்த ஜெலென்ஸ்கி: பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல்!
[Saturday 2026-10-31 16:00]

உக்ரைனுக்கான 2.1 பில்லியன் டொலர் மதிப்பிலான பேட்ரியாட் ஏவுகணை ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரேனின் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, அந்த நாட்டிற்கு 500 பேட்ரியாட் PAC-3 ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.



உலகளவில் வீடின்றி வாடும் 340 கோடி மக்கள்!
[Saturday 2026-10-31 16:00]

உலகளவில் சுமார் 340 கோடி மக்கள் பாதுகாப்பானதும், போதிய வசதிகளைக் கொண்டதுமான வீடுகள் இன்றி வாழ்வதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



மெலனியா டிரம்பின் அமைதி முயற்சி: ஒலேஷ்கியிலிருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள்!
[Saturday 2026-10-31 05:00]

அமெரிக்காவின் அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக ஓலேஷ்கியில் இருந்து நூற்றுக்கணக்கான உக்ரைனியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். உக்ரைன் உடனான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து ஒலேஷ்கி(Oleshky) நகரம் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்பின் முயற்சியால் உக்ரைன் - ரஷ்யா இடையே தற்காலிக மனிதநேய போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.



ஈரான் அருகே பயணித்த வணிக கப்பல் மீது வீசப்பட்ட மர்ம பொருள்!
[Saturday 2026-10-31 05:00]

ஈரானின் கடலோர பகுதியில் அருகே பயணித்த கப்பல் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை ஈரானின் லாவான் தீவுக்கு தெற்கே சுமார் 40 நாட்டிக்கல் மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த வணிக கப்பல் ஒன்றின் மீது மர்ம பொருள் தாக்கியதாக பிரித்தானிய கடற்படை வர்த்தக அமைப்பு (UKMTO) தகவல் தெரிவித்துள்ளது.



ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்து: பதவி விலக அமைச்சர் மறுப்பு!
[Saturday 2026-10-31 05:00]

ஸ்பெயினில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ய போக்குவரத்து அமைச்சர் மறுத்துள்ளார். கடந்த புதன்கிழமை காலை டோலிடோ மாகாணத்தின் உர்தா பகுதிக்கு அருகே அரசுக்குச் சொந்தமான 'ரென்ஃபே' (Renfe) நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு ரயிலும், தனியார் ரயில் நிறுவனமான 'ஐரியோ' (Iryo)-விற்குச் சொந்தமான மற்றொரு ரயிலும் மோதிக் கொண்டு பெரும் விபத்து நிகழ்ந்தது.



ஜேர்மனியில் வீடொன்றில் மோதி உள்ளே நுழைந்த பள்ளிப் பேருந்து!
[Friday 2026-10-30 16:00]

ஜேர்மனியில் பள்ளிப் பேருந்து ஒன்று வீடொன்றில் மோதி உள்ளே நுழைந்ததில் 20 பேர் வரை காயமடைந்துள்ளார்கள். வடக்கு ஜேர்மனியில், பள்ளிப்பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் வரை காயமடைந்துள்ளார்கள். இன்று காலை, வடக்கு ஜேர்மனியின் Schleswig-Holstein மாகாணத்திலுள்ள Bad Oldesloe என்னுமிடத்தில், பள்ளிப்பேருந்து ஒன்று மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்திருக்கிறது.



ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டு தாக்குதல் - பதற்றம் அதிகரிப்பு!
[Friday 2026-10-30 16:00]

ஓமன் கடற்கரைக்கு அருகில் உள்ள ஹார்முஸ் நீரிணையில் பயணம் செய்த ஒரு எண்ணெய் கப்பல் மீது வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 10.12 மணிக்கு (UTC) 25 கடல் மைல் தொலைவில் நடந்ததாக UK Maritime Trade Operations (UKMTO) தெரிவித்துள்ளது. சிறிய படகு ஒன்று எண்ணெய் கப்பலில் இடது பக்கத்தில் அணுகி, நீர்மட்டத்திற்கு மேல் இரண்டு வெடிகுண்டுகளை பொருத்தியது. அதனால் ஏற்பட்ட வெடிப்பு இயந்திர அறையில் தீப்பற்றச் செய்தது.



வாக்கு திருட்டு நடந்ததால் தான் தோல்வி: நெதன்யாகு சினம்!
[Friday 2026-10-30 16:00]

2026 இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் அந் நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், "அரபு அடிப்படையிலான கட்சிகள் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றியை திருடிவிட்டன என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகூட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.



மோசடி செய்து புலம்பெயர்தலுக்கு உதவுவோருக்கு கடும் அபராதம்: கனடா அரசின் புதிய விதிகள்!
[Friday 2026-10-30 16:00]

புலம்பெயர்தல் மோசடிகளுக்கு 1.5 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதிக்கும் வகையிலான விதிகளை கனடா அரசு அறிமுகம் செய்துள்ளது. கனடா அரசாங்கம் தனது புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமை அமைப்புகளின் நேர்மையைப் பேணுவதற்கும், விண்ணப்பதாரர்களை மோசடி மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது. அவ்வகையில், விண்ணப்பதாரர்களைச் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க உதவும் வகையில், கட்டணம் பெற்றுக்கொண்டு புலம்பெயர்தல் அல்லது குடியுரிமை தொடர்பான ஆலோசனையோ அல்லது பிரதிநிதித்துவமோ வழங்கும் போது சட்டத்தை மீறுபவர்களுக்கு 1.5 மில்லியன் கனேடிய டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா