Untitled Document
October 23, 2026 [GMT]
100 நாட்களாக முடக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி: CENTCOM வெளியிட்ட தகவல்!
[Friday 2026-10-23 07:00]

கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றிகையை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு(CENTCOM) தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி தடுத்து நிறுத்தப்பட்டு இருப்பதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படையின் முற்றிகையை தொடர்ந்து கடந்த 100 நாட்களாக ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கி இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு(CENTCOM) தகவல் தெரிவித்துள்ளது.

  

மேலும் இதன் மூலம் கிட்டத்தட்ட 25 பில்லியன் டொலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

X-யில் இது குறித்து CENTCOM வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க படைகளின் இந்த முற்றுகை நடவடிக்கையின் மூலம் ஈரானின் ஆயுதக் குழுக்கள், குற்றவியல் வலையமைப்புகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படையின் திறன் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கடற்படையால் அனுமதிக்கப்பட்ட சில மனிதாபிமான உதவிகளை தவிர ஈரானுக்கு இந்த காலகட்டத்தில் வேறு எந்தவொரு கடல்வழி ஏற்றுமதியோ அல்லது இறக்குமதியோ நடைபெறவில்லை என CENTCOM சுட்டிக்காட்டியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பிரான்சில் முதல் முறையாக மனிதரை பாதித்த ஷாமொண்டா வைரஸ்!
[Friday 2026-10-23 07:00]

பிரான்சில் முதல் முறையாக மனிதரை ஷாமொண்டா வைரஸ் பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கால்நடைகளை மட்டுமே பாதித்து வந்த ஷாமொண்டா வைரஸ், முதல் முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை பாதித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சின் லியோன் நகரில் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர், கடந்த அக்டோபர் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.



பிரித்தானியாவை அடுத்தடுத்து தாக்கும் புயல்கள்!
[Friday 2026-10-23 07:00]

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் இரண்டு புயல்கள் அடுத்தடுத்து வீசக்கூடும் என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பலத்த வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை ஆஸ்டன் புயல்(Storm Austen) இந்த வார இறுதியில் தாக்கக்கூடும் என அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்தில் இரண்டாவது புயல் குறித்த அறிவிப்பும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை முதல் நாட்டின் வடக்கு பகுதிகளை இரண்டாவது புயலான போலோ(Storm Boelo) கடுமையாக தாக்கக்கூடும் என்று பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



பிரான்சை போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டம்!
[Thursday 2026-10-22 16:00]

பிரான்சைப் போல ஜேர்மனியிலும் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களை நடத்த ஜேர்மன் இளைஞர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். ஜேர்மனியின், Gen Z regelt அல்லது Gen Z's Got It என்னும் இளைஞர் அமைப்பு, அக்டோபர் மாதம் 31ஆம் திகதி, ஜேர்மனியிலுள்ள 21 நகரங்களில், பிரம்மாண்ட பேரணிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.



தேர்தலில் தலையிடும் கனடா: அமெரிக்கா குற்றச்சாட்டு!
[Thursday 2026-10-22 16:00]

கனேடிய அரசியல்வாதிகள், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிடுவதாக அமெரிக்க தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவில், நவம்பர் மாதம் 3ஆம் திகதி, நாடாளுமன்றத்தை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு செய்யும் வகையிலான இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல்களில் தலையிட கனேடிய அரசியல்வாதிகள் திட்டமிடுவதாக கனடாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.



சவுதி விமான நிலையம் மீது தாக்குதல்: தூதரகத்தை விட்டு வெளியேறும் அமெரிக்கா!
[Thursday 2026-10-22 16:00]

சவுதி அரேபியாவின் கிழக்கே உள்ள தம்மாம் நகரில் அமைந்துள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று (21) மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை தீவிரமாக உள்ளது என்றும், விமான நிலையத்திற்கு ஏற்பட்ட சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.



ஈரானில் சமூக ஊடகக் கருத்தால் 23 வயது மாணவிக்கு மரண தண்டனை!
[Thursday 2026-10-22 16:00]

ஈரானில் சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 23 வயது மாணவி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. நஜ்மா அமினி என அடையாளப்படுத்தப்படும் குறித்த மாணவி, சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறி கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.



போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம்!
[Thursday 2026-10-22 07:00]

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.



பிரித்தானியாவில் பல இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை!
[Thursday 2026-10-22 07:00]

ஆஸ்டென்(Storm Austen) என்று பெயரிடப்பட்ட புயலானது வெள்ளிக்கிழமை பிரித்தானியாவை நோக்கி வேகமாக நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று, கனமழை மற்றும் திடீர் பனிப்பொழிவுகள் போன்ற கடுமையான வானிலை மாற்றங்கள் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.



பிரித்தானியாவில் குப்பை தொட்டியில் கிடந்த மனித உடல்: குற்றவாளிக்கு பொலிஸார் வலைவீச்சு!
[Thursday 2026-10-22 07:00]

பிரித்தானியாவின் ப்ளைமவுத் நகரில் குப்பை தொட்டியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ளைமவுத் நகரில் உள்ள வெஸ்ட் ஹோ(West Hoe) பகுதியில் இன்று காலை 6.30 மணிக்கு நபர் ஒருவரின் கவலைக்கிடமான நிலை குறித்து அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால உதவிக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் குப்பை தொட்டியில் படுகாயங்களுடன் கிடந்த நபரை கண்டுபிடித்து முதலுதவி சிகிச்சைகள் அளித்தனர்.



கொடிய ரஷ்ய தாக்குதல்கள்: கருங்கடலில் படைக் குவிப்பை அதிகரிக்கும் நேட்டோ!
[Wednesday 2026-10-21 16:00]

வணிகக் கப்பல்கள் மீதான ரஷ்யத் தாக்குதல்கள் அண்மைக் காலமாக மிக மோசமாக தீவிரமடைந்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பு கருங்கடல் பகுதிக்குக் கூடுதல் இராணுவ பலத்தை அனுப்பி வருகிறது. உக்ரைனின் ரெனி துறைமுகத்தில் இருந்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீதும், ஒடெசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மேலும் இரண்டு சரக்குக் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைனின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான, அந்நாட்டின் துறைமுகங்களிலிருந்து தானியங்கள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ரஷ்யா குறிவைப்பது, இந்த மோதலை நேட்டோ அமைப்பின் எல்லைகள் வரை கொண்டு வந்துள்ளது.



பாரிஸ் நகரம் விரைவில் முஸ்லிம் நகரமாக மாறும்: டிரம்ப் எச்சரிக்கை!
[Wednesday 2026-10-21 16:00]

பிரான்ஸ் நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறிவரும் வன்முறைகள் மற்றும் கட்டுப்பாடற்ற குடியேற்ற விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். பிரான்ஸ் முழுவதும் கடந்த சில நாட்களாக பொதுச்சொத்துக்கள் மீது வன்முறைகள் வெடித்துள்ளதுடன், சுமார் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.



பல் ஆடியதற்காக மருத்துவரை சுட்டுக்கொன்ற நபர்!
[Wednesday 2026-10-21 16:00]

பல் சிகிச்சைக்குப் பின்பும் பல் ஆடியதால், கோபத்தில் பல் மருத்துவரை சுட்டுக் கொன்றுள்ளார் ஒருவர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் எர்னெஸ்டோ (Ernesto Rascón, 30). எர்னெஸ்டோ, பல் சிகிச்சைக்காக மெக்சிகோவிலிருக்கும் Sonora என்னுமிடத்துக்குச் சென்றுள்ளார். மெக்சிகோவின் Sonora என்னுமிடத்தில் கிளினிக் வைத்துள்ள Dr. அமெத் (Dr Amed de Jesús Preciado Hernández, 42) என்பவரிடம் எர்னெஸ்டோ பல் சிகிச்சைக்காக சென்ற நிலையில், சிகிச்சைக்குப் பின்பும் அவரது பல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறது.



இனி பணம் என்பதே இருக்காதா? - உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு!
[Wednesday 2026-10-21 16:00]

உலகில் அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், நிதி மற்றும் சட்ட அமைப்புகளில் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான யுவால் நோவா ஹராரி எச்சரித்துள்ளார். எதிர்காலத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகளவில் கிடைக்கும் சூழல் உருவாகும்போது, வழக்கமான பணத்தின் முக்கியத்துவம் குறையக்கூடும் என்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கணிப்புக்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.



பிரான்சில் வார இறுதியில் மீண்டும் போராட்டங்கள்: களமிறங்கும் ராணுவம்!
[Wednesday 2026-10-21 07:00]

நாடு முழுவதும் வெடிக்கும் வன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் தினசரி வாழ்க்கை செலவினங்கள் குறித்து பிரான்ஸில் உருவான பொதுமக்கள் போராட்டம் பல இடங்களில் வன்முறையாக வெடித்துள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த பாரிஸ் நகரின் முக்கிய சில இடங்கள் மற்றும் வடக்கு பிரான்சின் சில பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.



ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி: விடுக்க ஒப்புக்கொண்ட அமெரிக்கா!
[Wednesday 2026-10-21 07:00]

ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலை முடித்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் முதல் கட்ட முன்னேற்றமாக கத்தார் வங்கியில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 6 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை விடுவிக்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாக செவ்வாய்க்கிழமை இஸ்ரேலின் “சேனல் 12” செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.



RAF ஃபேர்போர்ட் சதித்திட்டம்: ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இருவர் மீண்டும் கைது!
[Wednesday 2026-10-21 07:00]

பிரித்தானியாவின் RAF விமானப்படை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள RAF ஃபேர்போர்ட் அமெரிக்க ராணுவ விமான தளத்திற்கு அருகே செப்டம்பர் 27ம் திகதி அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பெரிய பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு சந்தேகத்திற்குரிய 5 ஆண்கள் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.



கனடாவிலிருந்து பிரிய விரும்பாத அல்பெர்ட்டா மக்கள்!
[Tuesday 2026-10-20 17:00]

கனடாவின் வளமான எண்ணெய்க் வளங்களைக் கொண்ட அல்பெர்ட்டா மாகாணம், நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து பிரிந்து செல்வது குறித்து மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பெரும்பான்மையான மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இருக்கவே ஆதரவு தெரிவித்துள்ளதாக முன்னணி ஊடகமொன்று எதிர்வுகூறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வாக்கெடுப்பில், அல்பெர்ட்டா கனடாவுடன் தான் தொடர வேண்டும் என்று 76.4 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.



ஜெலென்ஸ்கியின் கண்டனம்: ட்ரம்ப் - ஜின்பிங்குடன் முத்தரப்பு சந்திப்பை கோரிய ரஷ்யா!
[Tuesday 2026-10-20 17:00]

புடின், ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் முத்தரப்பு சந்திப்பு நடத்த ரஷ்யா முன்மொழிந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடியதைத் தொடர்ந்து, ரஷ்யா ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங்குடன் புடின் முத்தரப்பு சந்திப்பை நடத்த முன்மொழிந்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் குறித்து முன்கூட்டியே நட்பு நாடுகள் எச்சரிக்கவில்லை என்று ட்ரம்பை சாடினார்.



இளவரசர் வில்லியமைப்போல எங்களுக்கும் உரிமை உள்ளது: ஹரி, மேகன் தம்பதி!
[Tuesday 2026-10-20 17:00]

இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரைப்போல, தங்கள் விருப்பப்படி செய்ய தங்களுக்கும் உரிமை உள்ளது என ஹரி, மேகன் நம்புவதாக அவர்களுடைய நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாட்டிங்காம் சென்றிருந்த இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு, யாரும் எதிர்பாராத வகையில் அமோக வரவேற்பு கிடைத்தது. ஹரியும் மேகனும் 2020ஆம் ஆண்டு ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகினார்கள். அமெரிக்காவிலும் குடியேறினார்கள்.



டொராண்டோ மேயர் தேர்தல்: ஒலிவியா சௌ - பிராட் பிராட்போர்ட் இடையே கடும் போட்டி!
[Tuesday 2026-10-20 17:00]

கனடாவின் டொராண்டோ மாநகராட்சித் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ள நிலையில், மேயர் தேர்தலில் தற்போதைய மேயர் ஒலிவியா சௌ மற்றும் பிராட் பிராட்போர்ட் ஆகிய இருவருக்கும் இடையிலான வாக்கு இடைவெளி மிகவும் குறைந்து, கடும் போட்டி நிலவி வருவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா