Untitled Document
June 22, 2026 [GMT]
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடும் மன்னர்!
[Monday 2026-06-22 07:00]

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடும் முதல் மன்னராக வரலாற்றில் இடம்பிடிக்கிறார். 2024-25 ஆண்டுக்கான அவரது வரி கட்டணங்கள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இந்த முடிவு, மன்னரின் தனிப்பட்ட விருப்பத்தினால் எடுக்கப்பட்டதாகவும், அரச குடும்ப நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சியாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், தனது தனிப்பட்ட வரி விவரங்களை வெளியிடும் முதல் மன்னராக வரலாற்றில் இடம்பிடிக்கிறார். 2024-25 ஆண்டுக்கான அவரது வரி கட்டணங்கள் விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இந்த முடிவு, மன்னரின் தனிப்பட்ட விருப்பத்தினால் எடுக்கப்பட்டதாகவும், அரச குடும்ப நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முயற்சியாகவும் கூறப்படுகிறது.

  

இதன் மூலம், டச்சி ஆஃப் லாங்காஸ்டர் (Duchy of Lancaster) மூலம் கிடைக்கும் லாபம், தனிப்பட்ட முதலீடுகள், சாண்ட்ரிங்ஹாம் மற்றும் பால்மோரல் போன்ற தனியார் எஸ்டேட்டுகளிலிருந்து வரும் வருமானம் ஆகியவற்றின் மீதான வரி கட்டணங்கள் வெளிப்படையாக வெளியிடப்படுகின்றன.

மன்னர்களுக்கு சட்டப்படி வருமான வரி, மூலதன வரி, மரபுரிமை வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சார்ல்ஸ் தன்னார்வமாக வருமான வரி மற்றும் மூலதன வரி செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு டச்சி ஆஃப் லாங்காஸ்டர் லாபம் சுமார் 24 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது.

இந்த நடவடிக்கை, அரச குடும்ப நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும் பொதுமக்களின் கோரிக்கைக்கு பதிலளிப்பதாகும்.

குறிப்பாக, ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்-வின்சர் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு, அரச குடும்ப நிதி விவரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட அதிக திறந்த வெளிப்படைத்தன்மையை கோரியிருந்தனர்.

அரச குடும்ப செலவுகளுக்கான Sovereign Grant (அரச நிதி உதவி) விவரங்களுடன், மன்னரின் தனிப்பட்ட வரி விவரங்களும் வெளியிடப்படவுள்ளன. தற்போது இந்த நிதி 137.9 மில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.

இந்த வெளிப்படைத்தன்மை நடவடிக்கை, அரச குடும்பம் பொதுமக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது.

  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானிய அரசியலில் அதிர்ச்சி: ஸ்டார்மர் ராஜினாமா செய்வதாக அறிவித்த ட்ரம்ப்!
[Monday 2026-06-22 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் விரைவில் பதவி விலகுவார் என்று தெரிவித்துள்ளார். அவர் தனது Truth Social கணக்கில், “ஸ்டார்மர், குடியேற்றம் மற்றும் எரிசக்தி (வட கடல் எண்ணெய்) தொடர்பான முக்கிய பிரச்சினைகளில் தோல்வியடைந்தார். அவர் விரைவில் ராஜினாமா செய்வார்” என்று பதிவிட்டார்.



ஈரானை மீண்டும் கடுமையாக தாக்குவோம்: எச்சரித்துள்ள ட்ரம்ப்!
[Monday 2026-06-22 07:00]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானை மீண்டும் கடுமையாக தாக்க தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் பூர்கென்ஸ்டாக் மலைப்பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான், கத்தார் ஆகியவை மத்தியஸ்த நாடுகளாக பங்கேற்றன.



டெக்சாஸில் பயங்கரம்: இரண்டு குழந்தைக்கு உட்பட 6 பேர் உயிரிழப்பு!
[Sunday 2026-06-21 17:00]

அமெரிக்காவின் டெக்சாஸில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸில் Bynum மற்றும் Malone ஆகிய பகுதிகளுக்கு இடையே, வேன் மற்றும் கார் வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளன. இதில் அந்த இரண்டு வாகனங்களும் முழுமையாக தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட நான்கு பேர் நிகழ்விடத்தியிலேயே உயிரிழந்தனர்.



4000 பேர் உயிரிழப்பு: நாடொன்றின் அரசு அறிவிப்பு!
[Sunday 2026-06-21 17:00]

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான போரில் உயிரிழப்புகள் 4,000-ஐத் தாண்டியது என லெபனான் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையேயான சண்டையை நிறுத்த மத்தியஸ்தர்கள் தீவிரமாக முயன்று வரும் சூழலில், வெள்ளைக்கிழமை அன்று குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டனர்.



ரஷ்ய ட்ரோன் விவகாரம்: பெலாரஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த உக்ரைன்!
[Sunday 2026-06-21 17:00]

உக்ரைன் மீதான ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை, தனது நாட்டிலிருந்து அகற்றுவதற்கு பெலாரஸ் ஜனாதிபதிக்குஉக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒரு வார கால அவகாசம் அளித்துள்ளார். தனது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் உக்ரேனியத் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்து வரும் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, பெலாரஸால் உக்ரைனுக்கு ஆபத்தில்லை என்றும் அஞ்சத் தேவையில்லை என்றும், தனது நாடு போரில் ஈடுபடும் என்ற எந்தக் கருத்தையும் நிராகரிப்பதாகவும் சமீபத்தில் கூறியுள்ளார்.



அகதிகளுடன் நடுக்கடலில் கவிழ்ந்த படகு!
[Sunday 2026-06-21 17:00]

லிபியா அகதிகளுடன் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்ததில் 51 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. லிபியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த படகில் 61 பேர் பயணித்து உள்ளனர். அந்த படகு கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் வந்தபோது திடீரென நடுக்கடலில் கவிழ்ந்தது.



மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்!
[Sunday 2026-06-21 07:00]

ஈரான் இராணுவம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முதல் விதியை அமெரிக்கா மீறியதாகவும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.



மெலோனி-ட்ரம்ப் இடையே வெடித்துள்ள மோதல்!
[Sunday 2026-06-21 07:00]

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையே அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக கடும் வார்த்தை மோதல் உருவாகியுள்ளது. பிரான்சில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் இருவரும் சந்தித்த பின்னர், ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களில் மெலோனி தன்னுடன் “புகைப்படம் எடுக்க வேண்டி பலமுறை கெஞ்சி கேட்டார்” என்று தெரிவித்தார். மேலும், அவர் இத்தாலியில் தனது பிரபலத்தன்மை குறைந்து வருவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.



கிழக்கு உக்ரைனில் வான்வழித் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
[Sunday 2026-06-21 07:00]

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். ரஷ்யாவும், உக்ரைனும் சமீபத்திய வாரங்களில் ஒருவருக்கொருவர் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன. கிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 9 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடிய ஈரானிய பாடகி: 74 கசையடிகள் வழங்க உத்தரவு!
[Saturday 2026-06-20 15:00]

ஹிஜாப் அணியாமல் பாட்டு பாடியதற்காக ஈரானிய பாடகிக்கு 74 கசையடிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் அஹ்மதி என்ற பாடகி அவருடைய யூடியூப் சேனலில் தலைமுடி தெரியும்படி ஹிஜாப் அணியாமல் கையில் இல்லாத ஆடையுடன் 4 ஆண்களுடன் இணைந்து பாடல் பாடியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.



அவுஸ்திரேலியாவில் முதல் H5 வகை பறவை வைரஸ் காய்ச்சல் உறுதி!
[Saturday 2026-06-20 15:00]

அவுஸ்திரேலியாவில் முதல் H5 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கேப் லெ கிராண்ட் தேசிய பூங்காவின் கடற்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து செல்லும்(migratory) பிரவுன் ஸ்குவா(Brown Skua) என்ற பறவையிடம் H5 வகை பறவை காய்ச்சலுக்கான வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.



ட்ரம்பிற்கு பரிசாக சொகுசு விமானம் வழங்கிய கட்டார் அரச குடும்பம்!
[Saturday 2026-06-20 15:00]

கட்டார் அரச குடும்பம் சார்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, சொகுசு விமானம் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது. எயார் போர்ஸ் ஒன் என்ற இந்த புதுப்பிக்கப்பட்ட போயிங் 747-8 விமா னத்தின் ஆரம்ப நிகழ்ச்சி மேரிலேண்டில் உள்ள கூட்டு இராணுவ தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.



ஜப்பானின் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் தீ விபத்து: பல மாணவர்கள் பாதிப்பு!
[Saturday 2026-06-20 15:00]

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தீயினால் வெளிக்கிளம்பிய புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், பாடசாலையில் இருந்த அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



பிரித்தானியாவில் அடிப்படை மாற்றம் தேவை: புதிய எம்.பி. பெர்ன்ஹாம் கருத்து!
[Saturday 2026-06-20 07:00]

பிரித்தானியாவின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டி பெர்ன்ஹாம் (Andy Burnham), தனது முதல் உரையில் நாட்டில் “அடிப்படை மாற்றம்” தேவை என்று தெரிவித்துள்ளார். “பிரித்தானிய மக்கள் அரசியலில் நம்பிக்கை இழந்துள்ளனர். சமூகத்தில் சமத்துவம் குறைந்து, பொருளாதார சவால்கள் அதிகரித்துள்ளன. இதை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று அவர் தெரிவித்துள்ளார்.



லண்டன் அருகே இரண்டு ரயில்கள் மோதி பெரும் விபத்து!
[Saturday 2026-06-20 07:00]

பிரித்தானியாவில், லண்டன் அருகே 60 மைல் தொலைவில், பெட்ஃபோர்டு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதியதில் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 89 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 11 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணியளவில் எல்ஸ்டோவ் அருகே நடந்தது.



பாடசாலைகளில் AI பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதித்த ஐரோப்பிய நாடு!
[Saturday 2026-06-20 07:00]

நோர்வே அரசு, தொடக்கப்பள்ளி மாணவர்கள் (வயது 6013) செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரே, “பள்ளிகளில் குழந்தைகள் முதலில் வாசிக்க, எழுத, கணிதம் கற்றுக்கொள்ள வேண்டும். AI கருவிகள் இவற்றை புறக்கணிக்கச் செய்யும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.



குழந்தையை தூக்கி முதலைக்கூண்டுக்குள் வீசிய நபர்: காப்பாற்ற பாய்ந்த பெண்!
[Friday 2026-06-19 16:00]

இங்கிலாந்தில், தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில், நபர் ஒருவர் குழந்தை ஒன்றைத் தூக்கி முதலை இருந்த குழிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இங்கிலாந்திலுள்ள Huntingdon என்னுமிடத்தில், ஆன்டி ஜான்சன் என்பவரும் அவரது மனைவியான ட்ரேசி ஜான்சனும் இணைந்து உயிரியல் பூங்கா ஒன்றை நடத்திவருகிறார்கள். நேற்று மதியம், சிலர் அந்த உயிரியல் பூங்காவிலிருந்த முதலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.



அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து!
[Friday 2026-06-19 16:00]

அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே சுவிட்சர்லாந்தில் இன்று (19) இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. குறித்த பேச்சுவார்த்தை பர்கன்ஸ்டாக் மலை உச்சியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



வெளிநாடு சுற்றுலா சென்ற கனேடியருக்கு நேர்ந்த துயர முடிவு!
[Friday 2026-06-19 16:00]

வெளிநாடு சுற்றுலா சென்ற கனேடியர் ஒருவர், எதிர்பாராத வகையில் துயர முடிவை சந்தித்துள்ளார். 69 வயதுடைய கனேடியர் ஒருவர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், புதன்கிழமை மாலை, Kruger தேசிய பூங்கா என்னும் சுற்றுலாத்தலத்துக்குச் சென்றுள்ளார்.



பல நாடுகளை அச்சுறுத்தும் எபோலா தொற்று: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
[Friday 2026-06-19 16:00]

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா தொற்றின் பரவலால் 200-க்கும் அதிகமானோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா பரவல் காங்கோ, சூடான் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலகின் கொடிய தொற்றுகளில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பரவலைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா