Untitled Document
November 15, 2026 [GMT]
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டினர் நாடுகடத்தல்!
[Sunday 2022-02-06 08:00]

மலேசியாவின் Sarawak பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த 7 இந்தோனேசியர்களை நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  Op Benteng எனும் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் Sarawak பகுதியில் சட்டவிரோதமாக நுழைந்த 7 இந்தோனேசியர்களை நாடுகடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. Op Benteng எனும் நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட 7 பேரில் 2 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

மலேசியா- இந்தோனேசியா எல்லைக்கு மிக அருகாமையில் இருக்கும் Kampung Stass எனும் பகுதியில் உள்ள பாமாயில் தோட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த அவர்களை கைது செய்ததாக மலேசிய படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து வேலைத் தேடி மலேசியாவுக்கு வந்த அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாததைத் தொடர்ந்து அனைவரும் நாடுகடத்தப்படுகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



ஈரானின் ட்ரோன் தாக்குதல்: பஹ்ரைனில் ஒலித்த அபாய எச்சரிக்கை சைரன்கள்!
[Sunday 2026-11-15 15:00]

மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பஹ்ரைனில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவசர எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன. அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மக்கள் அனைவரும் அமைதியாக இருந்து அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியது. அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் வரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.



புகைப்படங்களை அனுமதியின்றி அணுகிய பேஸ்புக்: மெட்டாவிற்கு €805 மில்லியன் அபராதம்!
[Sunday 2026-11-15 15:00]

அனுமதியின்றி புகைப்படங்களை அணுகிய விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு €805 மில்லியன் அபராதமாக இத்தாலி விதித்துள்ளது. மெட்டா நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களின் புகைப்பட தொகுப்புகளை அனுமதியின்றி அணுகியதாக குற்றம்சாட்டி இத்தாலியின் தரவுப் பாதுகாப்பு ஆணையம் மெட்ட நிறுவனத்திற்கு 805 மில்லியன் யூரோ அபராதமாக விதித்துள்ளது.



பிரான்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கிய புலம்பெயர்ந்த ஒருவரின் உடல்!
[Sunday 2026-11-15 15:00]

சிறிய படகில் ஏற முயன்ற புலம்பெயர்ந்த ஒருவரின் உடல் பிரான்ஸ் கடற்கரையில் கரை ஒதுங்கியது. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குச் செல்வதற்காக ரப்பர் படகில் ஏற முயன்றபோது ஏற்பட்ட நெருக்கடியில், 20 வயது கடந்த ஒரு ஆணின் சடலம் பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை லெ டூக்கெட் (Le Touquet) நகருக்கு அருகிலுள்ள செயின்ட்-செசில் (Sainte-Cecile) கடற்கரையில் அந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!
[Sunday 2026-11-15 15:00]

யேமனில் பல்வேறு முனைகளில் சண்டை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்கை குறிவைத்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் மற்றும் இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்களை) இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபிய தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், கூட்டுப் படையின் செய்தித் தொடர்பாளர் துர்க்கி அல்-மால்கி கூறுகையில், "ரியாத்கை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்துள்ளன" என்றார்.



வாடகைத் தாய் முறை கிரிமினல் குற்றம்: சீன அரசின் அதிரடி!
[Sunday 2026-11-15 15:00]

சட்டவிரோதமாகச் செயல்படும் இனப்பெருக்க உதவி மையங்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து, வாடகைத் தாய் முறையை கிரிமினல் குற்றமாகச் சீன அரசு அறிவித்துள்ளது. அனைத்து வகையான வாடகைத் தாய் முறைகளுக்கும் சீனா கடுமையான தடை விதித்துள்ளதாகவும், இத்தகைய ஏற்பாடுகளைச் செய்வது நெறிமுறைகளை மீறும் குற்றவியல் செயலாகக் கருதப்பட்டுக் கடுமையான சட்டத் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் யாங் ஜின்ருய் தெரிவித்துள்ளார்.



பிரான்ஸ் ஜனாதிபதி போட்டிக்கு தயாராகும் விளையாட்டு வீரர்!
[Saturday 2026-11-14 16:00]

ஜூடோ சேம்பியனான டெடி ரைனர் பிரான்சில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ள நிலையில், அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். ஒலிம்பிக் போட்டிகளில், ஜூடோ விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவரான டெடி ரைனர் (Teddy Riner, 37), என்பவர், பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஆனால், அவர் கடுமையான சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்!



குளிர் சாதன அமைப்புகள் தொடர்பில் ஜேர்மன் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை!
[Saturday 2026-11-14 16:00]

ஜேர்மனியிலுள்ள குளிர் சாதன அமைப்புகள் தொடர்பில் பாதுகாப்பு அமைப்பொன்று எச்சரிக்கை செய்தி ஒன்றைத் தெரிவித்துள்ளது. ஜேர்மனியிலுள்ள குளிர் சாதன அமைப்புகளும் ஹேக் செய்யப்படலாம் என ஜேர்மன் ஃபெடரல் தகவல் பாதுகாப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது. பிரான்சில் குளிர் சாதன அமைப்புகள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.



சிறார்களை ஏமாற்றி வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய மாணவருக்கு 30 ஆண்டுகள் சிறை!
[Saturday 2026-11-14 16:00]

இங்கிலாந்தில் சமூக வலைதளங்கள் மூலம் சிறார்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 27 வயது இந்திய மாணவர் பிலால் காஜிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. சிறுவர்கள் பயன்படுத்தும் கேமிங் மற்றும் சமூக ஊடத் தளங்களில் தன்னை ஒரு டீன் ஏஜ் சிறுவனாக உருமாற்றி கொண்டு, 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுமிகளை குறிவைத்து அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று, பின்னர் அவற்றைக் காட்டி மிரட்டித் தொடர்ந்து பிளாக்மெயில் செய்துள்ளார்.



எலான் மஸ்க்கின் புதிய சாதனை!
[Saturday 2026-11-14 16:00]

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் 15ஆவது ஸ்டார்ஷிப் ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. எனினும், தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக அதன் சூப்பர் ஹெவி பூஸ்டரை (Super Heavy Booster) ஏவுதளத்திலுள்ள மெகஸில்லா இயந்திரக் கரங்கள் மூலம் மீண்டும் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டதையடுத்து, அது கடலில் இறக்கப்பட்டுள்ளது.



நெதன்யாகுவின் இனவெறி பிரச்சாரம்: கடுமையாகச் சாடிய ஐசென்கோட்!
[Saturday 2026-11-14 07:00]

நெதன்யாகுவின் இனவெறிப் பிரச்சாரத்தை ஐசென்கோட் கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல்களின் போது, ​​இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிராக இனவெறி மற்றும் வன்முறை சார்ந்த பிரச்சாரத்தைத் தூண்டியதாக, இடைக்காலப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது காடி ஐசென்கோட் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் புதிய அரசாங்கத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐசென்கோட், வெள்ளிக்கிழமை இஸ்ரேலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து நீண்ட சமூக ஊடகப் பதிவொன்றை வெளியிட்டார்.



அசாதாரண சூழ்நிலை: அமெரிக்காவில் நாடு தழுவிய விமான சேவைகள் நிறுத்தம்!
[Saturday 2026-11-14 07:00]

அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களிலும் விமானப் போக்குவரத்தை நிறுத்தி வைக்குமாறு, அரிதானதொரு உத்தரவை FAA பிறப்பித்துள்ளது. அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, அமெரிக்காவின் அனைத்து விமானங்களுக்கும் நாடு தழுவிய அளவில் தரையிறங்கும் உத்தரவை (ground stop) ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) பிறப்பித்துள்ளது. வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், அதிக போக்குவரத்து கொண்ட பல பகுதிகளில் ரேடியோ அலைவரிசைச் செயல்பாட்டில் வழக்கத்திற்கு மாறான தடங்கல் ஏற்பட்டுள்ளது; இதன் விளைவாக அனைத்து விமான நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



புடின் விடுத்த மிரட்டல்: ரஷ்ய பகுதியை கண்காணிக்கும் பிரித்தானிய உளவு விமானங்கள்!
[Saturday 2026-11-14 07:00]

பிரித்தானிய உளவு விமானங்கள் ஒரு மாத கால அசாதாரணப் பணி ஒன்றிற்காக ஈடுபடுத்தப்பட்டன. விளாடிமிர் புடின் ஐரோப்பா மீது அணுகுண்டு வீசுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவைக் கண்காணிப்பதற்காக பிரித்தானிய உளவு விமானங்கள் ஒரு அசாதாரணமான ஒரு மாத காலப் பணியை மேற்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, RAF தளபதிகள் அக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவின் செயல்பாட்டில் உள்ள இரண்டு ரிவெட் ஜாயின்ட் கண்காணிப்பு விமானங்களை 17 முறை அனுப்பியுள்ளனர்.



ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணி வெடிகளில் சிக்கிய சரக்கு கப்பல்: ஈரான் விடுத்த எச்சரிக்கை!
[Friday 2026-11-13 16:00]

LPG வாயுவை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் ஒன்று கண்ணி வெடிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. திரவ மயமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு(LPG) டேங்கர்களை ஏற்றிக் கொண்டு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த சரக்கு கப்பல் ஒன்று கடல் கண்ணி வெடிகளில் சிக்கி வெடிப்பு விபத்துக்குள்ளானதாக ஈரான் ராணுவம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.



கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இருவருக்கு சிறைத்தண்டனை!
[Friday 2026-11-13 16:00]

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள ஸ்பிராக் எல்லைக் கடவையினூடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 7 ஆம் திகதி, மினி வேன் ஒன்றின் சாரதி வழங்கிய வாக்குமூலத்தில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கனடா எல்லைச் சேவைகள் முகவரக அதிகாரிகள் குறித்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.



பிரான்சில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடையில் கொள்ளை!
[Friday 2026-11-13 16:00]

பாரீஸிலுள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் நுழைந்து பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில், கொள்ளையர்கள் பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. வைர வியாபாரத்துக்குப் புகழ் பெற்ற நிறுவனம் De Beers நிறுவனம்.



வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கும் விடயம்: அரசு முன்வைத்துள்ள திட்டம்!
[Friday 2026-11-13 16:00]

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டிக்க அரசு திட்டம். கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு தடை விதிக்கும் சட்டம், 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இந்நிலையில், கனேடியர்கள் அல்லாதவர்கள் கனடாவில் வீடு வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, 2029ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



ஐக்கிய அமீரகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லொறி: 23 வாகனங்களில் மோதி கோர விபத்து!
[Friday 2026-11-13 07:00]

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரில், லொறி சாரதி கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியதில் பதினான்கு பேர் மரணமடைந்ததாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து லொறிகள் உட்பட 23 வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்து, நள்ளிரவுக்குச் சற்று முன்பு கிழக்கு அமீரகத்தின் நுழைவாயிலில், போக்குவரத்து மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வேளையில் நிகழ்ந்தது என்று உள்விவகார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



பாரிஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இஸ்ரேலியர்: நாட்டில் நுழைய அனுமதி மறுப்பு!
[Friday 2026-11-13 07:00]

பிரபல இஸ்ரேலிய குடியேறி ஒருவருக்கு பிரான்சில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் தலைவருக்கு, பிரான்சுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு அதிகாரிகள் கடந்த வாரம் பாரிஸ் விமான நிலையத்திற்கு வந்த தன்னைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இஸ்ரேலியக் குடியேறிகளில் ஒருவரான யோசி டகன் தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை இஸ்ரேல் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்துள்ளது.



பெரும் கோடீஸ்வரர் Nvidia தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் ராஜினாமா!
[Friday 2026-11-13 07:00]

இரண்டாவது முறையற்ற உறவு அம்பலமானதை அடுத்து ஜென்சன் ஹுவாங் ராஜினாமா செய்தார். Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜென்சன் ஹுவாங், அந்நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக அம்பலமானதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 63 வயதான அந்தப் பெரும் கோடீஸ்வரர், சீன உளவாளியாகச் செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பெண் தொழிலதிபருடன் தனக்கு இருந்த மற்றொரு ரகசிய உறவு குறித்து அண்மையில் ஒப்புக்கொண்டார்.



தலை வழுக்கையை விமர்சித்த நபர்: பழிக்குப் பழி வாங்கிய ஹரி!
[Thursday 2026-11-12 18:00]

ராஜ குடும்ப புகைப்படக் கலைஞரான ஆர்தர் எட்வர்ட்ஸ், இளவரசர் ஹரி தன்னை பழிக்குப் பழி வாங்கிய ஒரு விடயம் குறித்து பகிர்ந்துள்ளார். ஐம்பது ஆண்டுகளாக ராஜ குடும்ப உறுப்பினர்களை புகைப்படம் எடுத்து வருபவர் புகைப்படக் கலைஞரான ஆர்தர் எட்வர்ட்ஸ். இந்நிலையில், இளவரசர் ஹரி தன்னை பழிக்குப் பழி வாங்கிய ஒரு விடயம் குறித்து பகிர்ந்துள்ளார் எட்வர்ட்ஸ். ஒருமுறை இளவரசர் ஹரி, நியூசிலாந்துக்கு சென்றிருந்தபோது, சிறுபிள்ளைகளுடன், கையில் பெயிண்ட் தொட்டு காகிதத்தில் பதிக்கும் விளையாட்டில் கலந்துகொண்டுள்ளார்.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா