Untitled Document
June 17, 2024 [GMT]
ரொறன்ரோ வூட்பைன் கடற்பகுதியில் படகு விபத்து: இலங்கையை சேர்ந்த ஒருவர் பலி!
[Friday 2020-09-04 17:00]

ரொறன்ரோ- வூட்பைன் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததோடு 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகொன் பல்லவநம்பி என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

ரொறன்ரோ- வூட்பைன் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததோடு 6பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர் வல்வெட்டித்துறை தீருவிலையைச் சேர்ந்த 46 வயதான இலங்கைகொன் பல்லவநம்பி என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

  

இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் அறியப்படுகிறது. இச்சம்பவத்தின் போது படகில் இருந்த 7 பேருமே தமிழர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. படகு விபத்துக்கு காரணம் என்ன என்பதைக் கண்டுபிடிக்க பொலிஸார் இன்னும் முயன்று வருகின்றனர். ஆனால் படகு அதிவேகமாக 90 மீட்டர் தொலைவில் உள்ள பாறைகளை நோக்கி அதிவேகமாக பயணித்ததாகக் காணொளியொன்றில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு 12:35 மணியளவில் விபத்து நடப்பதற்கு சற்று முன்னர் இந்த காணொளி எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விபத்துக்குள்ளான கப்பல் 20 அடி பவுரைடர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர் மருத்துவமனையில் இறந்தார். மேலும் மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த மூவரில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர். ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக ரொறன்ரோ துணை மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், மூன்று பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



உக்ரைன் போர் நிறுத்தம்: நிராகரித்த சவுதி அரேபியா, இந்தியா!
[Monday 2024-06-17 06:00]

உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டின் அறிக்கையை ஏற்க பிரேசில், இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் மறுத்துள்ள தகவல் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. உக்ரைன் அமைதி உச்சிமாநாட்டில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள், அந்த நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொண்டு அதன் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது.



'300 ஆசனங்களை இழக்கும்' - பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரிஷி சுனக்!
[Monday 2024-06-17 06:00]

கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தும் புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில், அந்த கட்சி 300 ஆசனங்களை இழக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 4ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தல் முன்னெடுக்கப்படுகிறது. இதில் லேபர் கட்சி 456 ஆசனங்களை வெல்லும் என்றே புதிய ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஜேர்மனியில் களைகட்டும் யூரோ கிண்ணம்: கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபர்!
[Monday 2024-06-17 06:00]

ஜேர்மனியின் ஹாம்பர்க் பகுதியில் கோடாரியுடன் பொலிசாருக்கு மிரட்டல் விடுத்த நபரை, பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடாரியுடன் மிரட்டல் விடுத்த நபரை சுட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளதுடன், அந்த நபர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



லண்டனில் தமது கதையை நாடகமாக்கிய நிறுவனம் மீது வழக்குத் தொடரும் கொலைகாரன்!
[Sunday 2024-06-16 08:00]

பிரித்தானியாவில் தமது மருமகளை கௌரவக் கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் நபர் ITV நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். தொடர்புடைய நிறுவனம் உருவாக்கியுள்ள நாடகத்தால் தமது பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். தெற்கு லண்டனை சேர்ந்த 20 வயது பனாஸ் மஹ்மோத் என்பவர் தமது கணவரால் அனுபவித்த சித்திரவதைகளை தாங்கிக்கொள்ள முடியாமல், ஒருகட்டத்தில் கணவரிடம் இருந்து பிரிந்துள்ளார்.



ஈரானின் புதிய நகர்வு: முன்னணி நாடுகள் கடும் கண்டனம்!
[Sunday 2024-06-16 08:00]

ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.



கடல் மட்டத்தில் இருந்து 400 அடி: நூலிழையில் தப்பிய பயணிகள் விமானம்!
[Sunday 2024-06-16 08:00]

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தின் ஹொனலுலுவில் இருந்து லிஹூ பகுதிக்கு புறப்பட்ட Southwest ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த இச்சம்பவம் தொடர்பில் சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகியுள்ளது. மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் நடவடிக்கைகள் வலுக்கட்டாயமாக கைவிடப்பட்ட நிலையில், சில நொடிகளுக்குள் அந்த விமானம் பல நூறு அடிகள் கீழிறங்கியதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.



பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரித்தார் இஸ்ரேல் அமைச்சர்!
[Saturday 2024-06-15 17:00]

இஸ்ரேல் லெபனான் நாடுகளுக்கிடையில் நிலைவும் பதற்றத்தைக் குறைக்க பிரான்ஸ் முன்வைத்த திட்டத்தை நிராகரிப்பதாக இஸ்ரேல் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். லெபனான் இஸ்ரேல் எல்லையில் நீண்ட நாட்களாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்னுவேல் மேக்ரான் பதற்றத்தைக் குறைக்கும் வகையில் திட்டம் ஒன்றை முன்வைத்தார். லெபனானுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் ஒரு திட்டத்தை முன்வைக்க முயன்றது.



மேக்ரானை சந்தித்த பிரதமர் ட்ரூடோ!
[Saturday 2024-06-15 17:00]

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார். இத்தாலியில் ஜி7 மாநாடு இன்றுடன் முடிவடைகிறது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.



நான் ஜனாதிபதியானால் வருமான வரியை ஒழிப்பேன்: டிரம்ப் வாக்குறுதி!
[Saturday 2024-06-15 17:00]

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறும் நோக்கில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் மக்கள் மீது வாக்குறுதிகளை பொழிந்து வருகிறார். இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்கர்களை வருமான வரி செலுத்துவதில் இருந்து விடுவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.



கனேடிய இந்திய பிரதமர்கள் திடீர் சந்திப்பு!
[Saturday 2024-06-15 17:00]

கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்ட பின், தற்போது நடைபெற்றுவரும் G7 உச்சி மாநாட்டில் கனடா பிரதமரும் இந்திய பிரதமரும் சந்தித்துக்கொண்டார்கள். கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.



34 பெண்கள்: காணொளி பதிவு செய்த வழக்கில் கைதான கனேடியர்!
[Saturday 2024-06-15 06:00]

கனடாவின் கியூபெக் பகுதியை சேர்ந்த நபர், பெண்களுடன் நெருக்கமாக இருந்து, அந்த காட்சிகளை படம் பிடித்து, அவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சிக்கியுள்ளார். கியூபெக் பகுதியை சேர்ந்த 43 வயது மார்ட்டின் பிள்ளை என்பவரே செவ்வாய்க்கிழமை பகல் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில்,



போர் நிறுத்தத்திற்கு தயார்: ஜனாதிபதி புடின் அறிவிப்பு!
[Saturday 2024-06-15 06:00]

உக்ரைன் மீதான போரை கைவிட தாம் தயாரென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஏற்க முடியாத கடும் நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விளாடிமிர் புடின், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து உக்ரைன் துருப்புகள் வெளியேற வேண்டும் என்றும், நேட்டோவில் இணையும் கனவை கைவிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.



ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆபத்து!
[Saturday 2024-06-15 06:00]

ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வரலாற்றுப் பின்னடைவை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவரை மாற்றும் நடவடிக்கைகளை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் தங்களுக்கு விருப்பமான தலைவர்களை ஆதரிக்கத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.



பிரதமர் ரிஷி சுனக் - பிரதமர் மோடி சந்திப்பு!
[Friday 2024-06-14 18:00]

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி7 கூட்டமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியா பிராந்தியத்தில் நேற்று முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.



பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு!
[Friday 2024-06-14 18:00]

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா மக்களிடையே ஆதரவு குறைந்துவருவதைக் காட்டியுள்ளன.



தொலைபேசியில் ஜெலன்ஸ்கியிடம் சீன ஜனாதிபதி கூறிய முக்கிய தகவல்!
[Friday 2024-06-14 18:00]

"சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு எந்த ஆயுதங்களையும் விற்பனை செய்யமாட்டோம் என தெரிவத்துள்ளார் என உன்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் மூலம் பேசியதாகவும், அப்போது இதனை தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.



இத்தாலி நாடாளுமன்றத்தில் கைகலப்பு!
[Friday 2024-06-14 18:00]

இத்தாலியில் ஜி7 மாநாடு இன்று (14) நடைபெற உள்ளதால் இந்தியப் பிரதமர் மோடி உட்பட ஜி20 நாடுகளின் தலைவர்கள் இத்தாலியில் குழுமத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் இத்தாலி நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று முன் தினம் (12) நாடாளுன்ற சபையில் இத்தாலியில் உள்ள பிராந்தியங்களுக்கு அதிக சுயாட்சி அளிக்கும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.



முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதியுதவி!
[Friday 2024-06-14 06:00]

முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க G7 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. உக்ரைனை நாங்கள் கைவிடவில்லை என்பதை ரஷ்யாவுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் G7 நாடுகளின் இந்த முடிவானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.



புகலிடக் கொள்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தில் சிக்கிய ஹங்கேரி!
[Friday 2024-06-14 06:00]

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கொள்கைகளை பின்பற்ற மறுப்பதாக குறிப்பிட்டு, ஒன்றியத்தின் முதன்மை நீதிமன்றம் ஹங்கேரிக்கு 200 மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. அத்துடன் ஹங்கேரி தற்போது பின்பற்றும் கொள்கைகளை மாற்றும் வரையில் நாளுக்கு 1 மில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ 8 கோடி) தண்டம் விதிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.



துஸ்பிரயோகம், போதை மருந்து: அம்பலமாகும் எலோன் மஸ்க்கின் உண்மை முகம்!
[Friday 2024-06-14 06:00]

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் உலக பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலோன் மஸ்க் மீது அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் தொடர்பில் புயலைக்கிளப்பும் 5 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. அதில், தமது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பலருடன் நெருக்கமான உறவில் இருந்துள்ளார் என அறிக்கை ஒன்றில் அம்பலமாகியுள்ளது.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா