Untitled Document
November 29, 2026 [GMT]
மாவீரரை நினைவேந்த ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்! Top News
[Saturday 2026-11-28 08:00]
தமிழர் தாயகத்தின்  உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் கனத்த இதயங்களுடன் கண்ணீர் மல்க மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

தமிழர் தாயகத்தின் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் கனத்த இதயங்களுடன் கண்ணீர் மல்க மாவீரர் நாள் நினைவேந்தல்கள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

  

அத்துடன் பாராளுமன்றத்திலும், யாழ்ப்பாணம் மற்றும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழங்களிலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அமைதியான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து மாவீரர் துயிலுமில்லங்களும் நேற்றுக்காலை முதலே மஞ்சள், சிவப்பு கொடிகள் கட்டப்பட்டு ஒலிபெருக்கிகளில் மாவீரர்களைப் போற்றும் பாடல்கள் ஒலிபரப்பட்டவாறு நினைவேந்தலுக்கான விசேட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாலை 6.05மணிக்கு நினைவொலி எழுப்பபட்டு, 6.06மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு தொடர்ந்து 6.07இற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பட்டது. அதனைத்தொடர்ந்து விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களுக்கான அஞ்சலியை சிறுவர்கள் முதல் அனைத்து பொதுமக்களும் உணர்வுபூர்வமாகச் செலுத்தினர்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது.

மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக வித்தாக்கிய தாயான செல்லத்தம்பி சரோஜாதேவி பொதுச்சுடரை ஏற்றியதைத்தொடர்ந்து ஏனையோர் ஈகைச் சுடர்களை ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதில் மாவீரர்களின் உறவுகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், துயிலுமில்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் அஞ்சலி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் மற்றும் கல்லறைக் கல்வெட்டுக்களுடன் கூடிய நினைவிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நூற்றுக்கண்கான பொதுமக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

அதேபோன்று நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக்கல்வெட்டு வளாகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் அஞ்சலி செலுத்திப்பட்டது. தொடர்ந்து மூன்று பெண் மாவீரர்களின் தாயாரான இராசரத்தினம் புஸ்பராணியால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவீரர்களுக்கான சுடர்கள் பெற்றோர் உரித்துடையோரால் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை கடலில் காவியமானோர் நினைவாகவும் சம நேரத்தில் ஈகைச்சுடர் கடற்கரும்புலி மாவீரரின் தாயார் யேசுராசா அருளம்மாவால் ஏற்றப்பட்டுள்ளது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னாள் போராளிகள், மத குருமார்கள், அரசில்வாதிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவம் குடியிருப்பதனால் அதற்கு முன்னாள் உள்ள வளாகம் ஒன்றில் மாதிரி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னி அல்லது பாமா மற்றும் மாவீரர் யூட் ஆகியோரது தாயார் செல்வமாணிக்கம் வள்ளிப்பிள்ளை பொது ஈகைச் சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்வியங்காடு, வேளாதோப்பு பகுதியில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபி முன்பாக இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வலிகிழக்கு பிரதேசபை தவிசாளர் தி.நிரோஸ், யாழ்ப்பாண மாநகர சபை பிரதி முதல்வர் இமானுவேல் தயாளன், யாழ் மாநகரசபை உறுப்பினர் மயூரன் உள்ளிட்ட வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது சி.வி.கே சிவஞானம் பிரதான ஈகைச்சுடரை ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கலந்துகொண்டவர்கள் மலரஞ்சலி செலுத்தி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர்.

மேலும் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லம், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திலும் நூற்றுக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரதான மாவீரர்நள் நினைவேந்தல் நிகழ்வு ஆயிரக்கணக்கானவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இதன்போது, பிராதான சுடரை மூன்று மாவீரர்களின் தயாரான தம்பிப்பிள்ளை மனோன்மணி ஏற்றியதைத்தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அனைத்து உறவுகளும் ஈகைச்சுடரேற்றி மாவீரர்களுக்கு கண்ணீருடன் மலரஞ்சலி செலுத்தினர். இதில் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்ட அரசியல் தரப்பினரும் பங்கேற்றனர்.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் தேராவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மிகவும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. லெப்கேணல் முரளி, லெப்ரினன் நல்லரசன், லெப்ரினன் தமிழவன் ஆகிய மூன்று மாவீரர்களின் சகோதரியான அமலதாஸ் சர்மிளா பொதுச்சுடரினை ஏற்றிவைத்தார். அதனைதொடர்ந்து நினைவஞ்சலி இடம்பெற்றதோடு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் நான்கு மாவீரர்களின் தாயாரான சாமித்தம்பி வள்ளியம்மை கொடியினை ஏற்றி வைக்க இரு மாவீரரின் தாயாரான இராஜேந்திரம் பொன்ரோஸ் பொதுசுடர் ஏற்றி வைக்க அஞ்சலி நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

முல்லைத்தீவு கடற்கரை, இரட்டைவாய்க்கால், தேவிபுரம், களிக்காடு, கொக்குத்தொடுவாய், சுதந்திரபுரம், வன்னிவிளான்குளம், ஆலங்குளம், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் மக்களின் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன.

மன்னார்

ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சன், முள்ளிக்குளம் துயிலுமில்லங்களிலும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா

வவுனியா, குருமன்காடு கலைமகள் மைதானத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான கந்தையா தனலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து, மலர் வணக்கத்திற்கான பொது நினைவுக்கல்லிற்கு கரும்புலி கப்டன் நளாயினி அவர்களின் தாயாரான பழனியாண்டி காளியம்மா அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், போராளிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மட்டக்களப்பு

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன் மாவீரர்களுக்கான அஞ்சலி நடைபெற்றதோடு மாவீரர்களின் நினைவுகளைப் போற்றும் வகையில் நினைவுரையும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் இம்முறை மாவீரர்நாள் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்ரிக்கப்பட்டது. மாவீரர்களான மேஜர் அருந்தவகுமார், மேஜர் சத்திரபவன், அவர்களின் தாயார் அமரசிங்கம் சங்குபதி அவர் பிரதான சுடரை ஏற்றி ஆரம்பித்ததனை தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் கண்ணீர்மல்ல அஞ்சலிகளை செலுத்தினர் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

வவுனதீவு தாண்டியடி மாவீரர் துயிலுமில்லத்தில் உணர்வு பூர்வமாக மாவீரர்கள் நாள் அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று மாவீரர்களை மண்ணுக்கு வித்திட்ட தாய் சுப்ரமணியம் வெள்ளச்சியினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலியில் பங்கேற்றதோடு மாவீரர்களின் உறவினர்கள் முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதேநேரம் தரவை, வாகரை கண்டலடி ஆகிய மாவீரர் துயிலுமில்லங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

முன்னதாக ஆரையம்பதி பகுதியில் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருந்த மாவீரர்கள் நாள் பதாகைகளை பொலிஸார் அகற்றியிருந்தனர். எனினும் பின்னர் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளுக்கு அவர்கள் எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கவில்லை.

திருகோணமலை

மூதூர் கிழக்கு சம்பூர் – ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களை நினைவுகூர்ந்து ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருகோணமலை மாவட்ட மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாவீரர் குடும்பத்தினர், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அம்பாறை

கஞ்சிக்குடிச்சாறு துயிலுமில்லத்திலும் மாவீரர் நாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

தமிழகம்

தமிழகத்தில் மாவீரர்நாளை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.

இதேவேளை, நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் முன்னெடுக்கப்பட்டதோடு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தியதோடு பொதுக்கூட்டமும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்தேசங்களில்

இதேவேளை, தாயக மக்கள் புலம்பெயர்ந்துள்ள அவுஸ்திரேலியா, கடனா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகளில் புலம்பெயர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கோப்பாய்

முள்ளியவளை

துணுக்காய்- ஆலங்குளம்

மன்னார்- ஆட்காட்டிவெளி

முல்லைத்தீவு- ஆனந்தபுரம்

வடமராட்சி - எள்ளங்குளம்

முல்லைத்தீவு- இரணைப்பாலை

முல்லைத்தீவு- கடற்கரை

மன்னார் - பெரியபண்டிவிரிச்சான்

மட்டக்களப்பு - தாண்டியடி

மட்டக்களப்பு- தரவை

விசுவமடு- தேராவில்

  
   Bookmark and Share Seithy.com



தடை செய்யப்பட்ட சின்னங்களை பயன்படுத்தியவர்கள் கைது!
[Sunday 2026-11-29 06:00]

வடக்கில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வுகள் தொடர்பில் பொலிஸார் விசேட அவதானம் செலுத்தியுள்ளனர். இதன்போது விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் சின்னங்கள் மற்றும் அடையாளங்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



தமிழீழ காவல்துறையை வியந்த பாராட்டிய ரவிகரன்!
[Sunday 2026-11-29 06:00]

2009ஆம் ஆண்டுக்கு முன்னர் வடகிழக்கில் தமிழீழ காவல் துறையினர் நிலைகொண்டிருந்தனர். அவர்கள் நீலவண்ண ஆடைகளில் பணியாற்றியவர்கள். மிகுந்த ஒழுக்க சீலர்கள். குடிபோதையை முற்றுந் துறந்தவர்கள். வீதிப்போக்குவரத்திலும் சட்டம் ஒழுங்கிலும் மிகுந்த கரிசனையோடு செயற்பட்டவர்கள். அவர்களின் காலத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட எங்களுக்கு தற்போதைய பொலிஸாரின் அணுகுமுறை மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக தெரிகின்றது என வன்னிமாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.



வடக்கில் இராணுவத்தைக் குறைத்து நிலங்களை ஒப்படைத்தால் அரசுக்கு நன்மதிப்பு கிட்டும்!
[Sunday 2026-11-29 06:00]

வடக்கில் இராணுவத்தை குறைத்து, பொதுமக்களின் காணிகளை மீளக் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால் அந்த மக்களின் மனங்களில் நல்ல இடத்தை பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



பாதுகாப்பு அமைச்சின் செலவினங்களுக்கு ஒப்புதல்!
[Sunday 2026-11-29 06:00]

2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் (ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) குழுநிலை விவாதத்தின் ஆறாவது நாளான நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் செலவினத் தலைப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



முப்படையினரை பலப்படுத்த 2030ல் மறுசீரமைப்புத் திட்டம்!
[Sunday 2026-11-29 06:00]

அரசாங்கம் என்றவகையில் தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமே தவிர, பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. அதனால் எதிர்காலத்தில் நாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்கும் அடக்குவதற்கும் தேவையான முறையில் முப்படையினரை பலப்படுத்த, 2030ல் மறுசீரமைக்கும் திட்டம் ஒன்று எமக்கு இருக்கிறது. அதற்காக ஓய்வுபெற்ற ராணுவ தளபதிகளைக்கொண்ட குழுவொன்றை நியமிக்க இருக்கிறோம் என பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.



படகில் இருந்து வாகனத்தில் ஏற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகள் மீட்பு!
[Sunday 2026-11-29 06:00]

மிரிஸ்ஸ, தல்அரம்ப பகுதியில் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும், இலங்கை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 16 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.



கிழக்கில் காணிகள் விடுவிப்பில் திருப்தியில்லை!
[Sunday 2026-11-29 06:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் ராணுவ முகாம்கள் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு தொடர்பில் இதுவரையில் திருப்தியடையும் அளவுக்கு தீர்வு கிடைக்கவில்லை. பலாலி, வசாவிளான், மயிலிட்டி, கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக வீதியில் போராடுகின்றனர். அந்த காணிகளை விரைவாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக்கட்சி உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



நாளை ரயில்கள் வழமை போல இயங்கும்!
[Sunday 2026-11-29 06:00]

எதிர்வரும் 30ஆம் திகதி அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.



மோடியைச் சந்தித்தார் விஜித ஹேரத்!
[Sunday 2026-11-29 06:00]

இந்து சமுத்திர விளிம்பு நாடுகளின் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் மட்ட மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லி சென்றுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.



திருகோணமலை துறைமுகத்தில் எண்ணெய் கசிவு!
[Sunday 2026-11-29 06:00]

திருகோணமலைத் துறைமுகத்தின் 'பூம் கோவ்' (Boom Cove) பகுதியில் நேற்று முற்பகல் 7.30 மணியளவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவினால் உருவான எண்ணெய்ப் படலத்தை அகற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.



வடக்கு ,கிழக்கில் காணிகளைக் கைப்பற்றவில்லையாம்!
[Saturday 2026-11-28 16:00]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் எங்கும் காணிகளைக் கைப்பற்றவில்லை என்றும், மாறாகத் தேசிய பாதுகாப்புக் கருதி அவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர சபையில் தெரிவித்தார்.



ஊழல் ஒழிப்பைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கை இல்லை!
[Saturday 2026-11-28 16:00]

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அத்திட்டத்தைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை எனவும், மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தூண்டி வருவதை அவர்கள் இன்னும் சரிசெய்து கொள்ளவில்லை எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.



பஸ் மீது உருண்டு விழுந்த கற்பாறை- ஒருவர் பலி!
[Saturday 2026-11-28 16:00]

ஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் மீது மலையிலிருந்து உருண்டு விழுந்த பாரிய கற்பாறை மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.



ஆண்டுதோறும் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்!
[Saturday 2026-11-28 16:00]

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைகள் 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடைவதால், அதன் பின்னர் ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதற்கேற்ப நாட்டின் தேசிய உற்பத்தி, கைத்தொழில், சேவைகள் மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்தாவிடின் நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.



கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்க சரோஜா போல்ராஜ் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு!
[Saturday 2026-11-28 16:00]

1983 கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞனின் இதயம் 14 வயது சிறுவனுக்குப் பொருத்தப்பட்டது!
[Saturday 2026-11-28 16:00]

விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞனின் இதயத்தை, 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்குப் பொருத்தும் இதய மாற்று அறுவை சிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.



சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 43 குற்றக் கும்பல் உறுப்பினர்களின் இருப்பிடம் தெரிந்தது!
[Saturday 2026-11-28 16:00]

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 43 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினர்கள் தற்போது தங்கியிருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.



கடத்தப்பட்ட வான் மீது பொலிஸ் சூடு- ஒருவர் காயம்!
[Saturday 2026-11-28 16:00]

வான் ஒன்றைக் கடத்திச் சென்ற கும்பலொன்றின் மீது எஹலியகொடை, பரகடுவ அங்குருவங்குவ பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சாதாரண தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு நடத்த தடை!
[Saturday 2026-11-28 16:00]

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு டிசம்பர் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.



பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும்!
[Saturday 2026-11-28 08:00]

செம்மணி மனிதப்புதைகுழி இடைக்கால அறிக்கை தொடர்பில் தொல்லியல் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பாக ராஜ் சோமதேவ சமர்ப்பித்துள்ள 4ஆவது இடைக்கால அறிக்கை உள்நோக்கம்கொண்டது , செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை திட்டமிட்டு மறைக்கின்ற விதமாக குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.


Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா