Untitled Document
November 26, 2026 [GMT]
மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற அனுமதியோம்!
[Thursday 2026-11-26 06:00]


13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துப்போக மாட்டோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது சத்தியலிங்கம் எம்.பி. மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய மக்களுக்கு இந்த மாதம் முக்கியமான மாதமாக இருக்கின்றது. தங்களின் நம்பிக்கையில் உறுதியாக நின்று, உயிரைத் துச்சமாக மதித்து, உயரிய நோக்கத்திற்காகத் தமது இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் வாரமாக இது இருக்கின்றது. அவ்வாறு தமது உயிர்களைத் தியாகம் செய்த பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டோரை நினைத்து ஏங்கித் தவிக்கின்ற அனைவருடனும் இணைந்து, நானும் அவர்களுக்கான கௌரவத்தை இந்தச் சபையில் முன்வைக்கின்றேன்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கூறும்போது, சுகாதாரம் என்பது அனைத்து மக்களுக்குமான அடிப்படை உரிமையாக இருக்கின்றது. இலங்கையின் சுகாதாரக் குறிகாட்டி சிறந்த முறையில் இருக்கின்றது; ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதாரத் தேவைகள் வெறுமனே தேசிய சராசரிப் புள்ளிவிபரங்களுக்குள் மறைக்கப்படக் கூடாது. கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சமமானதும் தரமானதுமான சுகாதார சேவைகள் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, நீண்டகால யுத்தத்தினால் சமூக, பொருளாதார உட்கட்டமைப்பு ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய விசேட அபிவிருத்தி நிதியாக 1,250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதனை அதிகரித்து ஒதுக்குவதன் மூலம், மாகாண சுகாதார அமைச்சு மிகவும் முக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்குப் பேருதவியாக இருக்கும்.

இதேவேளை, புலம்பெயர் உறவுகள் சுகாதார சேவையை மேம்படுத்தப் பல உதவிகளைச் செய்துள்ளனர்; அவர்களின் நிதியையும் நாங்கள் பயன்படுத்த வேண்டும்.

அமெரிக்காவில் வசிக்கும் வேலணையைச் சேர்ந்த ஒருவர் அமைப்பொன்றின் ஊடாக 70,000 அமெரிக்க டொலர் நிதியை ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைப்பதற்காக வழங்க இணங்கியுள்ளார். இத்திட்டத்தை முன்னுரிமை வழங்கக்கூடிய திட்டமில்லை என்று கூறி தேசிய திட்டமிடல் திணைக்களம் நிராகரித்துள்ளதாக அறிகின்றோம். இவ்விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சர் கவனம் செலுத்தி, அந்தச் சத்திரசிகிச்சைக் கூடத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.

தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் மிகப்பெரிய தடையாக மனிதவளப் பற்றாக்குறை உள்ளது. நாடளாவிய ரீதியில் 18 வீத வெற்றிடங்கள் காணப்படுகின்றன; இதில் மொத்த வெற்றிடங்களில் 22 வீதம் வடக்கு மாகாணத்திலேயே நிலவுகின்றன. மருந்துக் கலவையாளர்கள், உயிரியல் மருத்துவப் பிரிவு, தாதியர் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரத் தாதியர் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட வைத்தியர்கள் எனப் பெருமளவிலான வெற்றிடங்கள் உள்ளன. இவ்வாறான சூழலில் மக்களுக்குச் சிறந்த சுகாதார சேவைகளை மாகாணங்கள் வழங்குவதில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.

மன்னார் முருங்கன் வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ள போதிலும், அடிப்படைக் கட்டுமானங்கள் கிடையாது; அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அத்துடன், செட்டிக்குளம் வைத்தியசாலை முழுமையாகச் செயற்பட முடியாத நிலையில் இருக்கின்றது. மேலும், முல்லைத்தீவு வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சி வைத்தியர்களுக்கான தங்குமிட வசதி இல்லாமல் இருக்கின்றது; இதனையும் தீர்க்க வேண்டும்.

மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய நிர்வாகத்தின் கீழ் எடுப்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. எமது கட்சியின் நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறுகின்றேன்; நாங்கள் இதனைக் கடுமையாக எதிர்ப்பதுடன், இது தொடர்பில் கவலையடைகின்றோம்.

இதேவேளை, 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். ஆகவே, இத்தகைய பாரிய குறைபாடுகளைக் கொண்டுள்ள மாகாண வைத்தியசாலைகள் சிறப்பாகச் செயற்பட வேண்டுமாயின் அவற்றுக்கான வளங்களை வழங்குங்கள். அவ்வாறு வழங்கி அவற்றைச் சிறப்பாகச் செயற்பட இடமளியுங்கள்; அதைவிடுத்து அந்த அதிகாரங்களைப் பிடுங்கி எடுக்கும் வேலைகளுக்குப் போக வேண்டாம் என்று கோருகின்றோம்.

இலங்கையில் முதலாவதாகச் சுகாதார மூலோபாயத் திட்டங்களை உருவாக்கிய மாகாணமாக வடக்கு உள்ளது. நாங்கள் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் 27 புதிய வைத்தியசாலைகளை அமைத்துள்ளோம். முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘வைகறை’ என்ற நிலையத்தை உருவாக்கினோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை நடமாடும் திட்டங்கள் மூலம் பரிசோதித்தோம்; இலவச நடமாடும் மருத்துவ சேவையை முன்னெடுத்தோம் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தினோம். எங்களுடைய ஆலோசனைகள் நல்லவையென்றால் அவற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். எதிர்க்கட்சியினரை இதில் ஒதுக்கி வைக்காமல் அவர்களின் யோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள்! Top News
[Thursday 2026-11-26 17:00]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் இன்று வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு, அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணி சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



இலங்கை அரசாங்கம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்!
[Thursday 2026-11-26 17:00]

ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.



ரஷ்யா- இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
[Thursday 2026-11-26 17:00]

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு ரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள நபர்களையும், அங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்களையும் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்க ரஷ்ய கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.



பூஸா துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ மேஜர் பலி!
[Thursday 2026-11-26 17:00]

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரே பூஸா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.



இந்தியா பயணமானார் விஜித ஹேரத்!
[Thursday 2026-11-26 17:00]

இந்து சமுத்திர கரையோர நாடுகள் சங்கத்தின் 25 ஆவது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கி, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் வியாழக்கிழமை இந்தியா சென்றுள்ளார்.



நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள்!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.



திருகுவலையால் கணவனை தாக்கி கொலை செய்த மனைவிக்கு மரணதண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.



குற்றத்தை ஒப்புக் கொண்ட டயானா- ஜனவரி 14இல் தண்டனை!
[Thursday 2026-11-26 17:00]

செல்லுபடியாகும் விசா அனுமதிப்பத்திரம் இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்குத் தண்டனை விதிப்பதற்காக, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ரோஹித ராஜபக்சவிடம் 4 மணிநேரம் விசாரணை!
[Thursday 2026-11-26 17:00]

சுப்ரீம்சாட் (SupremeSAT) செயற்கைக்கோள் ஒப்பந்தம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு வாக்குமூலம் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோஹித ராஜபக்சவை, நிதி மோசடி விசாரணைப் பிரிவு அழைத்திருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி விசாரணைப் பிரிவின் வளாகத்தில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த பின்னர், ரோஹித ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார்



திருகோணமலையை ஊடறுக்கப் போகும் கானி புயல்!
[Thursday 2026-11-26 06:00]

மலேசியாவின் பிந்துலு(Bintulu) பகுதிக்கு வடக்காக ஒரு காற்றுச் சுழற்சி புதன்கிழமை (25.11.2026) உருவாகியுள்ளது. இது வெள்ளிக்கிழமை (27.11.2026) மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து அந்தமான் தீவுகளுக்கு தெற்காக நகரும். அதன்பின் மத்திய வங்காள விரிகுடாவிற்கு வரும்போது அது புயலாக வலுப்பெறும். இந்த புயலுக்கு மாலைதீவு இட்ட 'கானி( Kaani)' என்ற பெயர் வழங்கப்படும்.



கைதடி வைத்தியசாலைக்கான புலம்பெயர் நிதியை தடுக்கிறது அரசாங்கம்!
[Thursday 2026-11-26 06:00]

“எம்மிடம் பிரதேச வேறுபாடு இல்லை, இனவாதமில்லை என்று குறிப்பிட்டுக்கொண்டு, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களையும் தமிழ் பிரதேசங்களையும் புறக்கணிக்கிறது எனத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.



ஊடக அடக்குமுறை வேண்டாம்!
[Thursday 2026-11-26 06:00]

ஊடகங்களுக்கு அரச ஒழுங்குமுறைப்படுத்தல் பொருத்தமானதல்ல; சுய ஒழுங்குமுறைப்படுத்தல் மட்டுமே முக்கியமானது. எனவே, ஊடக அடக்குமுறை பொருத்தமற்றது என்பதால் அவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



வெற்றியாளர்களால் எழுதப்பட்ட வரலாற்றை திருத்தி எழுத வேண்டும்!
[Thursday 2026-11-26 06:00]

கறுப்பு ஜூலை கலவரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமே திட்டமிட்டு உருவாக்கிவிட்டு, அந்தப் பழியை மக்கள் விடுதலை முன்னணி உள்ளடங்கலான இடதுசாரி அரசியல் கட்சிகள் மீது சுமத்தி கட்சிகளை தடை செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார்.



புதிய சட்டங்களால் இளைஞர்களுக்கு தடை போட முயற்சி!
[Thursday 2026-11-26 06:00]

அரசாங்கம் பழைய பயங்கரவாதச் சட்டத்திற்குக் கதவடைத்து, புதிய மூன்று சட்டங்களின் ஊடாக அந்தக் கதவுகளைத் திறக்கப்போகிறதா என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது; அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய சட்டங்களால் இளைஞர்களின் செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படவுள்ளது என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.



மாகாண அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்!
[Thursday 2026-11-26 06:00]

மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெறும் முயற்சியை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்.வடக்கு மாகாணங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளை மத்திய அரசுக்கு பொறுப்பாக்குவதை விடுத்து அந்த வைத்தியசாலைகளில் நிலவும் ஆளனி மற்றும் பௌதீகவளப் பற்றாக்குறைக்கு தீர்வளிக்க வேண்டும். அரசாங்கத்தின் அதிகார பகிர்வு கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



வாள்வெட்டுத் தாக்குதலுக்கு எதிராக பொலிஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
[Thursday 2026-11-26 06:00]

வவுணதீவு வாழைக்காலை பிரதேசத்தில் கோபு வாள்வெட்டு குழுவின் தாக்குதலை கண்டித்தும் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞனுக்கு நீதி கோரியும் இந்த காடையர் குழுவிற்கு எதிராக புதன்கிழமை (25) பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் அதிகரிப்பு!
[Thursday 2026-11-26 06:00]

20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோர் மத்தியில் எச்ஐவி தொற்றாளர்கள் பதிவாவது அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.



இன்றும் தொடரும் மழை!
[Thursday 2026-11-26 06:00]

வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!
[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00]

வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.


Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா