Untitled Document
November 25, 2026 [GMT]
முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வுக்கு பொலிஸார் இடையூறு!
[Wednesday 2026-11-25 17:00]


முல்லைத்தீவு முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளையில் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வுக்கு பொலிஸார் இடையூறு விளைவித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  

முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்தில் இன்று (25) புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த மதிப்பளிப்பு நிகழ்வை நடத்துவதற்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன்போது, அங்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார், நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், நிகழ்வை முன்னெடுப்பவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன், நிகழ்வுக்காக மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த கார்த்திகை மலரை மறைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் தொடர்ந்து நின்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வருடாவருடம் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் நிகழ்வு இப்பகுதியில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை இவ்வாறான இடையூறுகள் ஏற்படுத்தப்படவில்லை என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வருடம் நிகழ்வுக்கான ஏற்பாடுகளின்போது பொலிஸார் தலையிட்டு கட்டுப்பாடுகளை விதித்தமை தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



சுரேஷ் சலேயும், அசாத் மௌலானாவும் ஒரே ஹோட்டலில் தங்கிய ஆதாரம் சிக்கியது!
[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலேயும், பிள்ளையானின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானாவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வன்னியில் வனவளத் திணைக்களத்தினால் மக்களின் காணிகள் அபகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00]

வனவளப் பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் வன்னியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.



பயணத்தடையை நீக்க கோரிய கோட்டாவின் மனு நிராகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00]

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையைக் கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று நிராகரித்துள்ளார்.



23 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!
[Wednesday 2026-11-25 17:00]

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.



ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு அபராதம்- ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!
[Wednesday 2026-11-25 17:00]

சட்டவிரோதமாக சொகுசு வாகனமொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.



அதிக மழைவீழ்ச்சியின் போது மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்!
[Wednesday 2026-11-25 17:00]

அதிக மழைவீழ்ச்சி நிலவும் காலப்பகுதியில் நாட்டின் மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.



கொலொன்ன பிரதேச சபையில் என்பிபி வரவுசெலவுத் திட்டம் தோல்வி!
[Wednesday 2026-11-25 17:00]

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள கொலொன்ன பிரதேச சபையின் 2027-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.



2026-ஆம் ஆண்டில் ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் டொலராக அதிகரிப்பு!
[Wednesday 2026-11-25 17:00]

2026-ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் (ஒக்டோபர் வரை) நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகிய இரு துறைகளினதும் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருமானம் 15.28 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது.



மனைவியை கொலை செய்து விட்டு பொலிசில் சரணடைந்த கணவன்!
[Wednesday 2026-11-25 17:00]

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரைக் கொலை செய்துவிட்டு 26 வயதுடைய கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். , இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை காலை வாகரை, பால்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.



மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது!
[Wednesday 2026-11-25 08:00]

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.



காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது!
[Wednesday 2026-11-25 08:00]

மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் மீது நம்பிக்கையில்லை. முன்வைக்கப்படும் சிறந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பில் குழு இதுவரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. காலத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் பங்காளியாக முடியாது என்பதால் குழு கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!
[Wednesday 2026-11-25 08:00]

தெற்காசியாவின் முதலாவது 'எயார் டோம்' (Air Dome) கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில் நிறுவப்பட்டுள்ளது. 4,000 பேர் வரை பங்கேற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விசேட உள்ளக நிகழ்வு வளாகம், டிசம்பர் மாத இறுதிக்குள் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இன்று 100 மி்.மீற்றருக்கும் அதிக மழை!
[Wednesday 2026-11-25 08:00]

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



இலங்கை பொலிசை மேம்படுத்த சீனா உதவி!
[Wednesday 2026-11-25 08:00]

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று கைச்சாத்திடப்பட்டது.



பணம் அச்சிடப்படாவிட்டால் பணவீக்கம் அதிகரிப்பது எப்படி?
[Wednesday 2026-11-25 08:00]

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.



முன்கூட்டியே ETA அனுமதி பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதி!
[Wednesday 2026-11-25 08:00]

இலங்கையின் மின்னணு பயண அங்கீகார (ETA) விண்ணப்பக் கட்டமைப்பு தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதால், பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த பயணிகள் முன்கூட்டியே ETA அனுமதியைப் பெறாமல் இலங்கைக்கு விமானப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்!
[Tuesday 2026-11-24 20:00]

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்து சமுத்திரத்தில் நிலநடுக்கம்- இலங்கைக்கு சுனாமி ஆபத்து இல்லை!
[Tuesday 2026-11-24 20:00]

இந்து சமுத்திரத்தில் மொறிசியஸ் - ரியூனியன் தீவுக்கு அண்மையில் உள்ள கடலில் ஏற்பட்ட 6.5 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.



வட்டுவாகல் விபத்தில் முதியவர் பலி!
[Tuesday 2026-11-24 20:00]

முல்லைத்தீவு – வட்டுவாகல் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



உரிய தீர்வை வழங்காவிட்டால் அடுத்த வாரம் கடும் தொழிற்சங்க நடவடிக்கை! - மருத்துவர்கள் எச்சரிக்கை.
[Tuesday 2026-11-24 20:00]

நாட்டின் இலவச சுகாதாரச் சேவையைப் பாதுகாக்கவும், மருத்துவர்களை நாட்டில் தக்கவைக்கவும் தமது ஐந்து பிரதான கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிட்டால், அடுத்த வாரத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் லசித்த தம்மிக எச்சரித்துள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா