Untitled Document
November 23, 2026 [GMT]
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்கள் இருவர் உள்ளடங்கலாக மூவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

  

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, காத்தான்குடியில் வைத்து ரி.எம்.வி.பி. கட்சி உறுப்பினர் உள்ளடங்கலாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக, ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரை கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கைது செய்திருந்தது.

இந்த ஐந்து முக்கியக் கொலைகளுடன் தொடர்புடைய பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் பாய்ஸ் உள்ளடங்கலாக நால்வருக்கு எதிராக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் வழக்குத் தாக்கல் செய்து, அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தித் தொடர்ந்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு இன்று திறந்த மன்றில் பதில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளர்களான மொஹமட் சிபான் மற்றும் மொஹமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பிள்ளையான் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கு ஒன்றுக்கு ஆஜராகியுள்ளதால், அவரைக் காணொளி ஊடாக ஆஜர்படுத்த முடியவில்லை எனச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் எழுத்துமூல ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

அத்துடன், இச்சம்பவங்கள் தொடர்பான சாட்சியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருவதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து, பிள்ளையான் உள்ளடங்கலாக மூவரையும் எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், லண்டனில் உள்ள சந்தேக நபரான 'பொலிஸ் பாய்ஸ்' என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸுக்குத் தொடர்ந்து திறந்த பிடியாணை பிறப்பித்தார்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபரான லண்டனில் உள்ள மொஹமட் பாய்ஸைக் கைது செய்வதற்கான பிடியாணை, நீதிமன்ற அனுமதியைப் பெற்றுச் சர்வதேசப் பொலிஸாரிடம் (Interpol) ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது!
[Monday 2026-11-23 18:00]

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தினால் நாடாளுமன்றில் வாக்குவாதம்!
[Monday 2026-11-23 18:00]

முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' தொடர்பில் பரவலான பொதுமக்கள் கலந்தாலோசனைகள் முன்னெடுக்கப்படும் வரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படக் கூடாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று பதற்றமான சூழல் ஏற்பட்டது.



முதன்மை பணவீக்கம் 8.5 வீதமாக அதிகரிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 ஆக அதிகரித்துள்ளது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அமெரிக்காவுக்கு அருணி ரணராஜா- கனடாவுக்கு ரோஹன அம்பகொல்ல!
[Monday 2026-11-23 18:00]

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



தாயின் தாலிக்கொடியை திருடி அடகுவைத்து 14இலட்சம் ரூபாவை காதலனுக்கு கொடுத்த யுவதி கைது!
[Monday 2026-11-23 18:00]

மட்டக்களப்பில் காதலனுக்காகத் தனது தாயின் எட்டரைப் பவுன் தாலிக்கொடியைத் திருடி, அடகு வைத்து ரூ. 14 இலட்சம் பணத்தை வழங்கிய பின்னர், உறவுக்காரப் பெண் திருடியதாகக் கைது செய்ய வைத்து நாடகமாடிய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதி, நான்கு மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



யோசித, கரன்னகொட குற்றச்சாட்டுகளை மறுப்பு!
[Monday 2026-11-23 18:00]

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம் நிரபராதிகள் என யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.



96 ஏகே ரவைகள், துப்பாக்கியுடன் இருவர் கைது!
[Monday 2026-11-23 18:00]

ஏகே 47 துப்பாக்கி ரவைகள் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை உடைமையில் வைத்திருந்த இரண்டு பேர் கொடிகாமம் மிருசுவில் பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



கட்டுப்பாட்டை இழந்த கார் - மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகளை மோதியது!
[Monday 2026-11-23 18:00]

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளன.



மல்லாகத்தில் 2.71 ஏக்கர் காணியை விடுவிக்கும் ஆவணம் கையளிப்பு!
[Monday 2026-11-23 18:00]

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி கேணல் WMAM நிசங்கவினால் , யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் இன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.



கிளிநொச்சியில் மாவீரர் வளைவு அமைக்கச் சென்றவர்கள் கைது!
[Monday 2026-11-23 06:00]

கிளிநொச்சி - டிப்போ சந்தியில் மாவீரர் நினைவு வளைவு அமைக்கும் பணியில் ஈடுபடுவதற்காகச் சென்ற பலர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களும், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்களும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.



கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்!
[Monday 2026-11-23 06:00]

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.



திருகோணமலையில் ரயில் மோதி இருவர் பலி!
[Monday 2026-11-23 06:00]

திருகோணமலை, மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.



பிரபாகரன் சரணடைய மறுத்து தன்மானத்துடன் இறுதிவரை போரிட்டு உயிரிழந்தார்!
[Monday 2026-11-23 06:00]

பிரபாகரன் சரணடைவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டபோதும், தன்மானப் பிடிவாதத்துடன் அதனை நிராகரித்து இறுதிவரை போரிட்டு உயிரிழக்கத் தீர்மானித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் கைது செய்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம் ஆரம்பமாகியிருக்கும் என முன்னாள் இராணுவத் தளபதியும் ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.



இலங்கை- தாய்லாந்து இடையே விசா விலக்கு உடன்படிக்கை!
[Monday 2026-11-23 06:00]

சாதாரண கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கையும் தாய்லாந்தும் கையொப்பமிட்டுள்ளன.



வன்னேரிக்குளத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு!
[Monday 2026-11-23 06:00]

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நடைபெற்றது.



வடக்கு, கிழக்கில் இன்று மழை!
[Monday 2026-11-23 06:00]

வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (23) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



நாணயக் கொள்கை நடவடிக்கைகளால் மாத்திரம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது!
[Monday 2026-11-23 06:00]

அரசாங்கம் முன்னெடுத்துவரும் நாணயக் கொள்கை நடவடிக்கைகளால் மாத்திரம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது என மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளமை, பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கும் கையாள்வதற்கும் அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.



இந்த ஆண்டு விபத்துகளில் 2,463 பேர் உயிரிழப்பு!
[Monday 2026-11-23 06:00]

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 2,330 பாரிய வீதி விபத்துகளில், 2,463 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.



கொள்ளுப்பிட்டியில் வெட்டுக்காயத்துடன் சடலம்- வீசிவிட்டுச் சென்ற முச்சக்கர வண்டி!
[Monday 2026-11-23 06:00]

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (21) இரவு முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத குழுவினர், சடலத்தை அவ்விடத்தில் வீசிவிட்டுச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாவீரர் தூபியில் அக வணக்கம்! Top News
[Sunday 2026-11-22 18:00]

தேசத்தின் விடிவிற்காய் தம் உயிரை தியாகம் செய்த வீர மறவர்களை நினைவில் ஏந்தும் முகமாக மாவீரர் வார முதலாம் நாளான நேற்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாவீரர் தூபியில் அக வணக்கம் செலுத்தப்பட்டது


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா