Untitled Document
November 19, 2026 [GMT]
நீதி, பொறுப்புகூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் இல்லை!
[Thursday 2026-11-19 18:00]


அரசாங்கம் இதுவரையான காலப்பகுதியில்  அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை. அத்துடன் நம்பிக்கை,நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை இது பாரியதொரு குறைப்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையத்தம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

அரசாங்கம் இதுவரையான காலப்பகுதியில் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை. அத்துடன் நம்பிக்கை,நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை இது பாரியதொரு குறைப்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையத்தம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கார்த்திகை மாதம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது .எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியை செலுத்திக்கொண்டும் மற்றும் அண்மையில் காலமான தமிழ்த் தேசிய பற்றாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.

வரவு செலவுத் திட்டம் என்பது எண்களையோ, கணக்குகளையோ, திட்டங்களையோ மட்டும் முதன்மைப்படுத்தியதாக அல்லாமல் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை,நம்பிக்கை,வாழ்வதற்கான சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாக பார்க்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்பவும், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்த அரசாங்கம் பல விடயங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த முயல்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் 13000 குடும்பங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது. கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டம், பேசாலை துறைமுகத்திற்கான நிதி ஒதுக்கீடு,குறிஞ்சாகேணி உப்பளத்தை மீள் அமைப்பதற்கான திட்டம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கான அபிவிருத்தி, பாலங்கள் அமைக்கும் திட்டம், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கான முயற்சி போன்ற நல்ல விடயங்களை முன்வைத்துள்ள போதும், பல விடயங்கள் பல நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவே உள்ளன.

மக்களுக்கான மானிய திட்டங்கள் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளை கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு இருந்த போதும், மக்களுக்கான மானியங்களை வழங்குவதில் குறைபாடுகள் நிலவுகின்றன. அத்துடன் மக்களுக்கு சம்பளத்தை வழங்கும் முறைகளில் பல நெருக்கடிகளை காணக்கூடியதாக உள்ளது. ஒரு கையால் கொடுத்து மறு கையால் பெறுவது போன்று காணப்படுகிறது.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்திற்கு வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். அந்த வகையில் அந்த பகுதிகளுக்கு பல திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருந்த போதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் இருக்கின்றன. இதனால் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் நிதி மூலங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லாமையினால் அவை திறைசேரிக்கு திரும்பச் சென்றுவிடுமா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான திட்டங்களை கண்காணிப்பதற்கு போதுமான பொறிமுறை அமைக்கப்படவில்லை.

நாட்டில் வாழும் மக்களின் எதிர்கால நிச்சயத் தன்மை என்பது வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார உரிமைகளில் மட்டும் தங்கியதாக இல்லை. அவர்களின் வாழ்வியல் கலாசாரம், அரசியல் உரிமைகளை தாங்கியதாகவே நாட்டு மக்களின் எதிர்கால நிச்சயத் தன்மை உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் தமிழ் மக்கள் கல்வி கற்ற பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கான காரணம் என்னவென ஆராயப்பட வேண்டும். அந்த விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் பின்னடைவான விடயமாக இருக்கின்றது.

அரசாங்கம் 2 வருடங்களை கடந்துள்ள போதும் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை. அத்துடன் நம்பிக்கை,நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.

மாகாண சபைகள் அதிகாரங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் நடவடிக்கைகளுக்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் உங்களை நம்பி வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் இருப்புக்கான எதிர்காலம் தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது?. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், அந்த விடயங்களைகூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு எண்ணக்கருக்கள் அல்லது கொள்கைகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருநாட்டில் அதிகார பங்கீடும்,அந்த மக்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்குமான ஒருமைப்பாடு இங்கு கூறப்பட்டிருக்க வேண்டும். எல்லா மக்களும் சமமானவர்கள் அவர்களுக்கு எல்லா விடயங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பல நெருக்கடிகள் உள்ளன. பிரதேசத்திற்கு பிரதேசம் வித்தியாசமானது.

எல்லோருக்கும் சமமான நீதி தொடர்பில் கூறினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனையில் இடம்பெறும் நெருக்கடியை கவனமாக பார்க்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும்இ அவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து அங்கு விவசாயம் செய்கின்றனர். அங்கு வதைக்கப்படும் பசுக்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸில் முறையிட முடியாத நிலைமையே உள்ளது. இங்கு சமமான நீதியென்ற விடயம் கேள்விக்குரியதாக இருக்கின்றது. இவ்வாறான விடயங்கள் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு தொடர்பான கேள்விகுறியாக இருக்கின்றது.

எவ்வாறாயினும் சில விடயங்களில் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை வரவேற்கின்றோம் குறிப்பாக அனோஜன் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.எனினும் திருகோணமலையில் கோணேஸ்வர கட்டுமானத்தை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளன. நாங்கள் தொல்லியல் திணைக்களத்தை எதிர்க்கவில்லை. ஆனால் தொல்லியல் என்ற போர்வையில் மத சுதந்திரம் பறிக்கப்படுவதனை, பாதிக்கப்படுவதை எதிர்க்கின்றோம்.

இவ்வாறான சூழ்நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில், மக்கள் தாம் வாழ்வதற்கான உறுதிப்பாடற்ற நிலையில் நாங்கள் பொருளாதார நலன்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் சவாலான விடயம் . அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நாங்கள் வலுசேர்க்க முற்படும் அதேவேளை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பான உத்தரவாதங்களை வழங்குமாறு ஜனாதிபதியை சந்திக்கும் போது கோரவுள்ளோம். சந்திப்புக்கு பின்னர் பல விடயங்களை கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஒருவரைக் கடத்தி கொலை செய்த ஈபிடிபி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!
[Thursday 2026-11-19 18:00]

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரைக் கடந்த 2008ஆம் ஆண்டு வானில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஈபிடிபி உறுப்பினர்களான 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.



ராஜ் சோமதேவவின் அறிக்கையை புறக்கணித்த நீதிமன்றம்!
[Thursday 2026-11-19 18:00]

செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள் வருமாறு;



கடுவெல தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
[Thursday 2026-11-19 18:00]

கடுவெல பகுதியில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.



எயர்பஸ் வழக்கில் நாமலுக்கு விளக்கமறியல்!
[Thursday 2026-11-19 18:00]

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் எயர்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார், இன்று உத்தரவிட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு- சென்னைக்கான விமான சேவைகள் இரத்து!
[Thursday 2026-11-19 18:00]

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.



நினைவு கூருவதற்கான உரிமை முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது!
[Thursday 2026-11-19 18:00]

தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர் நீத்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்கான உரிமை திட்டமிட்ட முறையில் முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



கவிஞர் சேரன் காலமானார்!
[Thursday 2026-11-19 18:00]

ஈழத்தின் தலைசிறந்த நவீன கவிஞரும், சமூகவியல் பேராசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் தனது 66 ஆவது வயதில் கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார்.



அராலியில் சிவில் செயற்பாட்டாளருக்கு வாள்வெட்டு!
[Thursday 2026-11-19 18:00]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று (19) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீவிபத்து!
[Thursday 2026-11-19 18:00]

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
[Thursday 2026-11-19 05:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம் பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.



ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!
[Thursday 2026-11-19 05:00]

அமெரிக்கா – இலங்கை இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் புதன்கிழமை (18) சந்தித்து, கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும்!
[Thursday 2026-11-19 05:00]

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாட ஆசிரியர்களாக நியமிக்க பிரதமர் மறுப்பு!
[Thursday 2026-11-19 05:00]

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.



பட்டாசு கொளுத்த காத்திருக்கும் மக்கள்!
[Thursday 2026-11-19 05:00]

அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் போது பட்டாசு கொளுத்துவதற்கு மக்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



வடக்கில் ஆங்கிலம் கற்பிக்க வந்துள்ள அமெரிக்காவின் அமைதிப்படை!
[Thursday 2026-11-19 05:00]

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர்.



ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம்!
[Thursday 2026-11-19 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார். ஊழல்வாதிகளை கைது செய்வதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசியல் பழிவாங்கல் அல்ல, ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஜனாதிபதி அனுரவுக்கு பங்களாதேஷ் அழைப்பு!
[Thursday 2026-11-19 05:00]

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.



இந்த ஆண்டு டெங்கு மரணங்கள் மூன்று மடங்கு!
[Thursday 2026-11-19 05:00]

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி!
[Wednesday 2026-11-18 18:00]

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை- உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!
[Wednesday 2026-11-18 18:00]

இராஜதந்திர கடவுச்சீட்டை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா