Untitled Document
November 19, 2026 [GMT]
கவிஞர் சேரன் காலமானார்!
[Thursday 2026-11-19 18:00]


ஈழத்தின் தலைசிறந்த நவீன கவிஞரும், சமூகவியல் பேராசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் தனது 66 ஆவது வயதில் கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார்.

ஈழத்தின் தலைசிறந்த நவீன கவிஞரும், சமூகவியல் பேராசிரியரும், மூத்த ஊடகவியலாளருமான பேராசிரியர் உருத்திரமூர்த்தி சேரன் தனது 66 ஆவது வயதில் கனடாவின் டொரொன்டோ நகரில் நேற்று (18) இரவு காலமானார்.

  

நீண்டகாலமாகச் சிறுநீரக நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த சேரன், ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) அவர்களின் மகனாவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், பின்னர் நெதர்லாந்தில் முதுகலைப் பட்டத்தையும், கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

கனடாவின் வின்ட்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், புலம்பெயர் தமிழர்கள், இனத்துவ மோதல்கள் மற்றும் இடப்பெயர்வு தொடர்பான ஆய்வுகள் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.

ஈழத்தில் 1980களில் நிலவிய போர்ச்சூழல், இனக்கலவரங்கள் மற்றும் 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலக எரிப்பு உள்ளிட்ட வரலாற்று வலிகளைத் தனது கவிதைகள் ஊடாக உலகறியச் செய்தவர் சேரன். ‘இரண்டாவது சூரிய உதயம்’, ‘யமன்’, ‘கானல் வரி’, ‘எலும்புக் கூடுகளின் ஊர்வலம்’, ‘நீ இப்பொழுது இறங்கும் ஆறு’, ‘மீண்டும் கடலுக்கு’ மற்றும் ‘காடாற்று’ உள்ளிட்டவை அவரது முக்கியக் கவிதைத் தொகுப்புகளாகும்.

மேலும், 1985ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற ஈழத்துப் போராட்டக் கவிதைத் தொகுப்பினையும் அவர் இணைந்து தொகுத்திருந்தார்.

1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘Saturday Review’ ஆங்கில வார இதழில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய அவர், மனித உரிமைகள் மற்றும் ஊடகச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்தார். 2016ஆம் ஆண்டு மதிப்புமிக்க ‘ஓ.என்.வி சர்வதேச இலக்கிய விருதையும்’ பெற்றார்.

  
   Bookmark and Share Seithy.com



ஒருவரைக் கடத்தி கொலை செய்த ஈபிடிபி உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை!
[Thursday 2026-11-19 18:00]

மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஸ்குமார் என்பவரைக் கடந்த 2008ஆம் ஆண்டு வானில் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஈபிடிபி உறுப்பினர்களான 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன், மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.



ராஜ் சோமதேவவின் அறிக்கையை புறக்கணித்த நீதிமன்றம்!
[Thursday 2026-11-19 18:00]

செம்மணி - சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின் நிறைவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் வழங்கிய உத்தரவுகள் வருமாறு;



கடுவெல தீவிபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி!
[Thursday 2026-11-19 18:00]

கடுவெல பகுதியில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.



எயர்பஸ் வழக்கில் நாமலுக்கு விளக்கமறியல்!
[Thursday 2026-11-19 18:00]

கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார் (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் எயர்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் வழக்கின் பிரதிவாதிகளில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற ட்ரயல்-அட்-பார், இன்று உத்தரவிட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் கடுமையான காற்று மாசு- சென்னைக்கான விமான சேவைகள் இரத்து!
[Thursday 2026-11-19 18:00]

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால், யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இன்று இரத்து செய்யப்பட்டுள்ளன.



நினைவு கூருவதற்கான உரிமை முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது!
[Thursday 2026-11-19 18:00]

தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர் நீத்த உறுப்பினர்களை நினைவு கூருவதற்கான உரிமை திட்டமிட்ட முறையில் முற்று முழுதாக தமிழ் மக்களுக்கு மறுக்கப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



நீதி, பொறுப்புகூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் வரவுசெலவுத் திட்டத்தில் இல்லை!
[Thursday 2026-11-19 18:00]

அரசாங்கம் இதுவரையான காலப்பகுதியில் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் குறிப்பிடவில்லை. அத்துடன் நம்பிக்கை,நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை இது பாரியதொரு குறைப்பாடாகும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளையத்தம்பி ஸ்ரீநாத் தெரிவித்தார்.



அராலியில் சிவில் செயற்பாட்டாளருக்கு வாள்வெட்டு!
[Thursday 2026-11-19 18:00]

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று (19) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் பலத்த காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் தீவிபத்து!
[Thursday 2026-11-19 18:00]

கொழும்பு, கொம்பனித்தெருவில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
[Thursday 2026-11-19 05:00]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம் பி சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.



ஜனாதிபதி அனுரவைச் சந்தித்த அமெரிக்க தூதுவர்!
[Thursday 2026-11-19 05:00]

அமெரிக்கா – இலங்கை இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான முன்னுரிமைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் புதன்கிழமை (18) சந்தித்து, கலந்துரையாடியதாக அமெரிக்கத் தூதுவர தெரிவித்துள்ளார்.



எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும்!
[Thursday 2026-11-19 05:00]

பொருளாதார வளர்ச்சி வேகத்தில் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.



தொல்லியல் பட்டதாரிகளை வரலாறு பாட ஆசிரியர்களாக நியமிக்க பிரதமர் மறுப்பு!
[Thursday 2026-11-19 05:00]

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.



பட்டாசு கொளுத்த காத்திருக்கும் மக்கள்!
[Thursday 2026-11-19 05:00]

அரசாங்கம் வீட்டுக்கு செல்லும் போது பட்டாசு கொளுத்துவதற்கு மக்கள் காத்திருப்பதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



வடக்கில் ஆங்கிலம் கற்பிக்க வந்துள்ள அமெரிக்காவின் அமைதிப்படை!
[Thursday 2026-11-19 05:00]

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வியை வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க அமைதிப் படையின் (Peace Corps) 34 தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட குழுவினர் இலங்கையில் தமது இரண்டு வருடகால சேவையை ஆரம்பித்துள்ளனர்.



ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம்!
[Thursday 2026-11-19 05:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித அரச நிதியை மோசடி செய்துள்ளார் என அக்கட்சியின் உறுப்பினரான தயாசிறி ஜயசேகர ஏற்றுக்கொண்டுள்ளார். ஊழல்வாதிகளை கைது செய்வதும், சட்ட நடவடிக்கை எடுப்பதும் அரசியல் பழிவாங்கல் அல்ல, ஊழல்வாதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



ஜனாதிபதி அனுரவுக்கு பங்களாதேஷ் அழைப்பு!
[Thursday 2026-11-19 05:00]

இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பங்களாதேஷிற்கு அரச விஜயத்தை மேற்கொள்ளுமாறு அந்நாட்டுப் பிரதமர் தாரிக் ரஹ்மானினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிதழ், பங்களாதேஷ் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹுமையூன் கபீரினால் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.



இந்த ஆண்டு டெங்கு மரணங்கள் மூன்று மடங்கு!
[Thursday 2026-11-19 05:00]

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.



ஞானசார தேரருக்கு 4 வருட சிறைத்தண்டனை உறுதி!
[Wednesday 2026-11-18 18:00]

இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்த குற்றச்சாட்டில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.



சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை- உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம்!
[Wednesday 2026-11-18 18:00]

இராஜதந்திர கடவுச்சீட்டை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா