Untitled Document
November 16, 2026 [GMT]
விசுவமடு, வவுனியாவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள்!
[Sunday 2026-11-15 07:00]



2027ஆம் ஆண்டுக்கான மாவீரர் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு நேற்று விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027ஆம் ஆண்டுக்கான மாவீரர் பெற்றோரைக் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு நேற்று விசுவமடு மாவீரர் பெற்றோர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

இதன்போது, மாவீரர் பெற்றோருக்கு உரிய முறையில் மதிப்பளிக்கப்பட்டதுடன், புளியடி சந்தையிலிருந்து மாவீரர்களின் பொதுப் படங்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டன.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோருக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியாவில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாநகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவீரர்களது பெற்றோர்கள் கண்டி வீதியில் இருந்து நிகழ்வு இடம்பெறும் மண்டபம் வரை மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது. பிரதான ஈகைசுடரினை நான்கு மாவீரர்களின் தாயாரான செபஸ்தியாம்பிள்ளை புஸ்பவதி அம்மையார் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாவீரர்களின் திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. உணர்வெழுச்சியுடனா இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமான செ.கஜேந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி காண்டீபன், கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் எஸ்.தவபாலன், கட்சியின் உள்ளூராட்சி மன்ள உறுப்பினர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள், கலந்து கொண்டிருந்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



சிவாஜிலிங்கம் மறைவுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் இரங்கல்!
[Sunday 2026-11-15 16:00]

தமிழ்த் தேசிய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் அச்சமின்றிக் குரல்கொடுத்த அரசியல் ஆளுமை அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.



நாளை சிவாஜிலிங்கத்தின் இறுதிச்சடங்கு!
[Sunday 2026-11-15 16:00]

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் இறுதிக் கிரியைகள் நாளை (16) நடைபெறவுள்ளது.



சமரசமுமின்றி தனது அரசியல் பயணத்தில் உறுதியுடன் செயற்பட்ட தலைவர் சிவாஜிலிங்கம்!
[Sunday 2026-11-15 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



இராணுவ ட்ரக் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி!
[Sunday 2026-11-15 16:00]

மட்டக்களப்பு, கிரான் - தொப்பிகல வீதியில் இராணுவ ரக் வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.



வவுனியாவில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம்!
[Sunday 2026-11-15 16:00]

தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளரான சிவாஜிலிங்கம் மறைவைத் தொடர்ந்து வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.



தமிழ் மக்களுக்கும் உயிர்நீர்த்த தம்மவர்களை நினைவு கூரும் உரிமை இருக்க வேண்டும்!
[Sunday 2026-11-15 16:00]

அரசாங்கம் கார்த்திகை தினத்தில் தமது அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களை நினைவுகூர இருக்கும் உரிமை, தமிழ் மக்களுக்கும் உயிர்நீர்த்த தம்மவர்களை நினைவு கூருவதற்கும் இருக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.



வடக்கு வைத்தியசாலைகளை கைப்பற்றும் மத்திய அரசு- ஒன்றிணைந்து எதிர்க்க தமிழ்க் கட்சிகள் முடிவு!
[Sunday 2026-11-15 16:00]

வடக்கில் மாகாணசபை ஊடாக நிர்வகிக்கப்படும் 4 வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவை பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டிணைந்து எதிர்ப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய மூன்று தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் இணங்கியுள்ளன.



சிவாஜிலிங்கம் மறைவு - ஈடு செய்ய முடியாத இழப்பு!
[Sunday 2026-11-15 16:00]

தமிழ்த் தேசிய விடுதலைக்காக தனது வாழ்நாள் முழுவதும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்ட ஒப்பற்ற தமிழ்த் தேசியக் கொள்கைப்பற்றாளர் அமரர் மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.



குகைக்குள் பிறந்த குழந்தையின் தந்தை என சந்தேகிக்கப்படும் இளைஞனுக்கு பிணை!
[Sunday 2026-11-15 16:00]

உடுதும்பறை, கரம்பகெட்டிய பகுதியில் அமைந்துள்ள மலை உச்சி ஒன்றின் கல் குகையில் தங்கியிருந்தபோது, 15 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது இளைஞர் 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



மாமாங்கத்தில் குரங்குகள் தாக்கி 5 பேர் படுகாயம்!
[Sunday 2026-11-15 16:00]

மட்டக்களப்பு - மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை 5 பேர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் காலமானார்!
[Sunday 2026-11-15 07:00]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தமது 69 வயதில் நேற்று இரவு காலமானார்.



மாகாண சபைத் தேர்தல் அடுத்த ஆண்டும் இல்லை!
[Sunday 2026-11-15 07:00]

தேசிய இனப்பிரச்சினையொன்று உண்டு என்பதற்கான எந்தவொரு அடையாளமும் இல்லாத அரசாங்கத்தின் ஒரு கொள்கைப்பிரடகனமாகவே அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் அமைந்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தெரிவித்துள்ளார்.



குருநகர் யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33வது ஆண்டு நினைவேந்தல்!
[Sunday 2026-11-15 07:00]

யாழ்ப்பாணம் - குருநகர் புனித யாகப்பர் ஆலயம் மீதான விமான தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.



கடலுக்குச் செல்ல வேண்டாம்- மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
[Sunday 2026-11-15 07:00]

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்த சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.



உயர்கல்விக்காக பெலாரஸ் செல்லும் மாணவர்களுக்கு விசா கட்டணத்தில் விலக்கு!
[Sunday 2026-11-15 07:00]

உயர்கல்வியைத் தொடர்வதற்காக முதல் தடவையாக பெலாரஸ் நாட்டிற்குப் பயணிக்கும் இலங்கை மாணவர்களுக்கு வருகை விசா கட்டணத்தை விலக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சாதாரண மக்களுக்கு மிஞ்சுவது நெத்திலிக் கருவாடு மட்டுமே!
[Sunday 2026-11-15 07:00]

நாட்டின் வரவு–செலவுத் திட்டத்தினால் சாதாரண மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை என புதிய ஜனநாயக மாக்சிச - லெனினிசக் கட்சியின் சீ.கா.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.



குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் இல்லை!
[Sunday 2026-11-15 07:00]

ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாக தெரிவித்து ஆட்சிக்குவந்த இந்த அரசாங்கத்துக்கு எதிராக பல மோசடி குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெறுவதை காணமுடியாமல் இருக்கிறது. கொள்கலன் 323 விடுவிப்பு தொடர்பான விசாரணைகளும் இதுவரை நிறைவடையாமல் இருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.



வீதியில் நிற்கும் 80 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள்!
[Sunday 2026-11-15 07:00]

80,000 க்கும் அதிகமான வேலையில்லாப் பட்டதாரிகள் காணப்படும் நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறோம் என்று கூறி வருகின்றது. அவ்வாறு தொடர்ச்சியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தால் 80,000 வேலையில்லாப் பட்டதாரிகள் வீதியில் இருப்பது எங்ஙனம் என்ற கேள்வி எழுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.



செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு குறித்து கஜகஸ்தானுடன் பேச்சு!
[Sunday 2026-11-15 07:00]

செயற்கை நுண்ணறிவு (AI) தரவு உட்கட்டமைப்பு, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் ஒத்துழைப்பை ஏற்படுத்த இலங்கையும் கஜகஸ்தானும் உயர்மட்டப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.



மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக் கோருவோம்!
[Saturday 2026-11-14 18:00]

மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மத்திய அரசிற்குள் உள்ளீர்ப்பதனூடாக அநுரகுமார அரசாங்கமும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலை முன்னெடுத்துள்ளது. அதனூடாக மாகாண அதிகாரங்களைப் பறித்தால் நாம் மீண்டும் தமிழீழத்தைக் கோருவோம் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா