Untitled Document
November 15, 2026 [GMT]
இராணுவத்துக்கு எதேச்சாதிகார அதிகாரங்களை வழங்கும் ஆபத்து!
[Saturday 2026-11-14 07:00]
நவம்பர் வீரர்களின் சோசலிச இலட்சியத்தைக் கைவிட்டு, நவதாராளவாதப் பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டினார்.

நவம்பர் வீரர்களின் சோசலிச இலட்சியத்தைக் கைவிட்டு, நவதாராளவாதப் பொருளாதார மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிடவும் ஆபத்தான அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டினார்.

  

முன்னிலை சோசலிசக் கட்சியின் 37ஆவது நவம்பர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் யக்கல நகர சபை மண்டபத்தில் 'உயிரைத் துச்சமெனக் கருதிப் போராடிய தலைமுறையின் கனவு சோசலிசம்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. இதில் நினைவுப் பேருரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1988 – 1989ஆம் ஆண்டுகளில் உயிரைத் துச்சமெனக் கருதிப் போராடிய தலைமுறையின் கனவு சோசலிசமாகும். ரோஹண விஜேவீர உள்ளிட்ட பலர் உயிர்த்தியாகம் செய்த அந்தத் தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியே இன்று ஆட்சியில் உள்ளது. எனினும், அந்த வரலாற்றைப் புறக்கணித்து சோசலிசத்துக்கு முரணான பொருளாதாரக் கொள்கையை முன்னெடுப்பது துயரமானது.

1917ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியிலிருந்து இன்றுவரை சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் தேவை முடிவடையவில்லை. ஸ்பார்டகஸ், கார்ல் மார்க்ஸ், லெனின், ரோஹண விஜேவீர, கமநாயக்க, இடமேகம, இரேஷா பொல்கம்பல உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகளின் அர்ப்பணிப்புக்குப் பின்னால் இருந்த இலட்சியம் சோசலிசமாகும்.

1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை உள்நாட்டுத் தொழில்துறைகளைப் பாதித்து, அரச துறையைப் பலவீனப்படுத்தியது. 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1980ஆம் ஆண்டு வேலைநிறுத்தம் ஒடுக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு தேர்தல் பிற்போடப்பட்டதுடன், 1983ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. அவசரகாலச் சட்டமும் அரச ஒடுக்குமுறையும் தொடர்ந்தன.

இன்றைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்துக்கும் இந்திய, அமெரிக்க நலன்களுக்கும் சார்பாகச் செயற்படுகின்றது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகள் இல்லை. வரிச்சலுகைகள் பெரும் செல்வந்தர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தமும் ஜனநாயகக் கருத்துகளுக்கு முரணாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிப்பதாகக் கூறியவர்கள், அதைவிட ஆபத்தான பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் பொதுச் சொத்துக்கள் தொடர்பான குற்றங்கள் சட்டமூலம் ஆகியவற்றைக் கொண்டுவந்துள்ளனர். மக்கள் எதிர்ப்பால் அரசாங்கம் பின்வாங்க நேரிட்டது. புதிய சட்டங்கள் பொலிஸ், இராணுவத்துக்கு எதேச்சதிகார அதிகாரங்களை வழங்குவதுடன், நீதித்துறையின் அதிகாரங்களையும் நிறைவேற்றுத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அபாயமுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. சிறுவர்கள் போசாக்கின்மையாலும் பெருந்தோட்டப் பெண் பிள்ளைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் அயடின் குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்துத் தட்டுப்பாட்டால் வைத்தியசாலைகளில் நோயாளர்கள் உயிரிழக்கின்றனர். சம்பளத்தால் அன்றாடத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. மக்கள் எழுச்சியை எதிர்பார்த்தே அரசாங்கம் அடக்குமுறை இயந்திரத்தைப் பலப்படுத்துகின்றது. ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடி, மக்கள் எழுச்சியைச் சோசலிச வெற்றியாக மாற்றுவதே நவம்பர் வீரர்களுக்கு வழங்கும் உண்மையான கௌரவமாகும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



மாகாண அதிகாரங்களைப் பறித்தால் மீண்டும் தமிழீழத்தைக் கோருவோம்!
[Saturday 2026-11-14 18:00]

மாகாணசபையின் அதிகாரக் கட்டுமானங்களை மத்திய அரசிற்குள் உள்ளீர்ப்பதனூடாக அநுரகுமார அரசாங்கமும் ஈழத்தமிழர் விரோத நுண்ணரசியலை முன்னெடுத்துள்ளது. அதனூடாக மாகாண அதிகாரங்களைப் பறித்தால் நாம் மீண்டும் தமிழீழத்தைக் கோருவோம் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.



புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படவில்லை!
[Saturday 2026-11-14 18:00]

விடுதலை புலி உறுப்பினர்களாக இருந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் ஆரம்பகாலத்தில் புனர்வாழ்வாதார ஆணையாளர் காரியாலயத்தினால் கண்காணிப்புக்கு உட்படுத்தட்டு வந்தனர். ஆனால் தற்போது அவர்கள் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்த தேவைப்பாடு இல்லை. அத்துடன் அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவது தொடர்பில் முறைப்பாடு செய்தால், அது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



இரண்டு சட்டமூலங்களையும் விலக்க கோரி போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முஸ்தீபு!
[Saturday 2026-11-14 18:00]

தொழிற்சங்க உரிமைகள் மற்றும் மற்றும் ஜனநாயகச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ‘நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்;’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவற்றை எந்தவித திருத்தங்களும் இன்றி முழுமையாக மீள பெற வேண்டும் என வலியுறுத்தி சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவாகிறது அக்வா புயல்!
[Saturday 2026-11-14 18:00]

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை விட்டு விலகி, நாளை (15) ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



லாஃப் கேஸ் விலை உயர்வு நாடு தழுவிய எரிவாயு சிக்கல் அல்லவாம்!
[Saturday 2026-11-14 18:00]

இலங்கையின் உள்நாட்டு எரிவாயு சந்தையில் 90 சதவீத பங்களிப்பை லிட்ரோ நிறுவனம் கொண்டுள்ளது என்றும், அந்நிறுவனம் மாதத்திற்கு சுமார் 20 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை நிரப்புகிறது என்றும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.



5 மாதங்களுக்கு முன் காணாமல்போன 15 வயது சிறுமி 2 மாத குழந்தையுடன் குகைக்குள் இருந்து மீட்பு!
[Saturday 2026-11-14 18:00]

​நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவில் அமைந்துள்ள உடுதும்பரை மீமுரே - கனதகெட்டிய, தம்படே பகுதியில் 05 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட 15 வயது சிறுமி, காட்டுப் பகுதியில் உள்ள குகை ஒன்றில் 02 மாதக் குழந்தையுடன் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.​



பருப்பு வடைக்குள் கம்பிச் சுருள்- உணவக உரிமையாளருக்கு ஒருமாத சிறைத்தண்டனை!
[Saturday 2026-11-14 18:00]

பருப்பு வடைக்குள் பாத்திரம் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பிச் சுருள் (Steel Wool) காணப்பட்ட சம்பவம் தொடர்பில், உணவு தயாரிப்பு நிலையத்தின் உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து, அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



முதலாம் தர மாணவர் சேர்க்கை 40 ஆயிரத்தினால் குறைந்தது!
[Saturday 2026-11-14 18:00]

ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.



மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணம் இல்லை!
[Saturday 2026-11-14 18:00]

அரசியல் வாழ்விலிருந்து விலகித் தனியார் துறையில் தனது தற்போதைய தொழிலில் முழுமையான திருப்தியுடன் ஈடுபட்டு வருவதாகவும், மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணமோ ஆர்வமோ தனக்கில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.



பிரைட் ரைஸ்,கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
[Saturday 2026-11-14 18:00]

லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.



கனகம்புளியடி விபத்தில் தந்தையும் மகனும் பலி!
[Saturday 2026-11-14 07:00]

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் - பருத்தித்துறை வீதியின் கனகம்புள்ளியடி சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.



மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில் பசுக்கள் சுட்டுக்கொலை!
[Saturday 2026-11-14 07:00]

மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பிரதேசத்தில், பண்ணையாளர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



இடைக்கிடை மழை பெய்யக்கூடும்!
[Saturday 2026-11-14 07:00]

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



விமல், திலித், கம்மன்பில குறித்த வழக்கில் ஜனவரி 12ஆம் திகதி தீர்ப்பு!
[Saturday 2026-11-14 07:00]

நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலீத் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்டோருக்கு எதிராக கோட்டை நீதிவான் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு தொடர்பில், ஆரம்பத்திலேயே இதனுள் வழக்குக்கான முகாந்திரம் உள்ளதா என்பது குறித்த தனது தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (13) அறிவித்துள்ளது.



மீன்பிடிப் படகுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
[Saturday 2026-11-14 07:00]

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.



லாஃப்ஸ் எரிவாயு விலை 1,775 ரூபாவால் அதிகரிப்பு!
[Saturday 2026-11-14 07:00]

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.



வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்!
[Saturday 2026-11-14 07:00]

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.



பலாலியில் 22 விமானக் குண்டுகள் மீட்பு!
[Saturday 2026-11-14 07:00]

பலாலி பகுதியில் விமானத்தில் இருந்து வீசப்படும் குண்டுகள் பல வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் இராணுவ முகாமின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு கிடங்கு வெட்டியபோது குறித்த பொருட்கள் இருப்பது அவதானிக்கப்பட்டது.



மட்டக்களப்பில் யானை தாக்கி படுகாயமடைந்த பெண் மரணம்!
[Saturday 2026-11-14 07:00]

மட்டக்களப்பு , போரதீவுப்பற்று 35ஆம் கிராமம், கண்ணபுரம் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவைச் பெண்ணொருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி 09தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



மார்ச் மாதத்துக்கு பின்னர் முரண்பாடுகள் வன்முறையாக மாறும் ஆபத்து!
[Friday 2026-11-13 16:00]

2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் அரசாங்கத்துக்கும் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்டபோகும் முரண்பாடுகள் வன்முறையாக மாறும் ஆபத்துள்ளதாக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்.


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா