Untitled Document
November 12, 2026 [GMT]
யோசிதவின் வழக்கு ஒத்திவைப்பு!
[Thursday 2026-11-12 15:00]


முறைகேடாகச் சொத்து சேர்த்தமை தொடர்பில் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முறைகேடாகச் சொத்து சேர்த்தமை தொடர்பில் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை, எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

  

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவிருந்த நிலையில், காலை வழக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரர் முதுகு வலி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையால் இன்று மன்றில் ஆஜராக முடியாது என அறிவித்தார்.

இதனிடையே, முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இன்றைய தினத்துடன் தமது தரப்பு சாட்சி விசாரணையை நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், முறைப்பாட்டாளர் தரப்பில் மேலும் மூன்று சாட்சிகளை மாத்திரமே அழைக்க வேண்டியுள்ளதாகவும், எதிர்வரும் வழக்குத் தவணையின்போது அம்மூவரையும் மன்றில் முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரு தரப்பு விடயங்களையும் கவனத்திற்கொண்ட நீதிபதி உதேஷ் ரணதுங்க, வழக்கின் மேலதிக விசாரணையை நவம்பர் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் சாட்சிகளைத் தவறாது மன்றில் ஆஜராகுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் நிறைவேற்றலாம்!
[Thursday 2026-11-12 15:00]

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் சட்டமூலத்தை திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.



வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி உரை!
[Thursday 2026-11-12 15:00]

2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகிறார்.



எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்- 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
[Thursday 2026-11-12 15:00]

இலங்கையின் இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் எலிக்காய்ச்சல் (Leptospirosis) பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.



அனோஜன் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி தெரிவிப்பு!
[Thursday 2026-11-12 15:00]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவை சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிப்பதற்குத் தலையிட்டமைக்காக, அவரது குடும்பத்தினர் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துத் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.



ருவன்வெலிசயவிற்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த பிக்குகள் கைது!
[Thursday 2026-11-12 15:00]

அனுராதபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பாலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் மேலும் இரு பௌத்த பிக்குகள், அங்கு ஏற்பட்ட பதற்றமான சூழலைத் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மத்தள விமான நிலையத்தினால் 70,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்டம்!
[Thursday 2026-11-12 15:00]

190 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியில் நிர்மாணிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பித்த மத்தள சர்வதேச விமான நிலையம், 2026ஆம் ஆண்டளவில் 70,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான ஒட்டுமொத்த நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



தெற்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் சிக்கியது மற்றொரு படகு!
[Thursday 2026-11-12 15:00]

போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடிப் படகொன்று தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது, இந்த மீன்பிடி படகு இடைமறிக்கப்பட்டுள்ளது.



முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் மகசின் சிறையில் மரணம்!
[Thursday 2026-11-12 15:00]

நிதி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு, மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.



இன்று 2027 வரவுசெலவுத் திட்ட உரை!
[Thursday 2026-11-12 06:00]

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசாங்கத்தின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையினை இன்று (12) பாராளுமன்றில் நிகழ்த்தவுள்ளார்.



அனோஜன் சிவராசா வழக்குகளில் இருந்து விடுதலை- விரைவில் நாடு திரும்புகிறார்!
[Thursday 2026-11-12 06:00]

மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



பிற்பகலில் 100 மி.மீ க்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்!
[Thursday 2026-11-12 06:00]

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் இன்று (12) பிற்பகல் வேளையில் 100 மி.மீ க்கும் அதிக அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம்!
[Thursday 2026-11-12 06:00]

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தால் நாங்கள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம். அச்சட்டத்தின் பாரதூரத்தன்மையை நன்கு அறிவோம்.இச்சட்டத்தை நிச்சயம் இரத்துச் செய்வோம். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டாது என விவசாயத்துறை,கால்நடை வளர்ப்பு மற்றும் நீர்பாசனத்துறை அபிவிருத்தி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.



சுற்றுலா விசாவில் வேலைக்குச் செல்ல வேண்டாம்!
[Thursday 2026-11-12 06:00]

சுற்றுலா விசா (Visit Visa) மூலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இலங்கையர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.



100 அவசர ஊர்திகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
[Thursday 2026-11-12 06:00]

இந்திய அரசாங்கத்தின் 1,725.73 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவியுடன், 1990 'சுவசெரிய' தேசிய அவசர ஊர்தி சேவைக்குக் கூடுதலாக 100 அவசர ஊர்திகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுப் பரிமாறிக்கொள்ளப்பட்டது.



பெற்றோலியம் கூட்டுத்தாபனத்துக்கு 6 மாதங்களில் ரூ.29.2 பில்லியன் நிகர இலாபம்!
[Thursday 2026-11-12 06:00]

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ. 41 பில்லியன் மானியத்தைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் (இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம்) 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ரூ. 29.2 பில்லியன் நிகர இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.



2025ஆம் ஆண்டுக்கான 40 சதவீத வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை!
[Thursday 2026-11-12 06:00]

'வெரிட்டே ரிசேர்ச்' அமைப்பின் அரச நிதி தொடர்பான இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டின் பிரகாரம், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதமான முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இருப்பினும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளின் வீதம் 2017 ஆம் ஆண்டின் பின்னர் 2025 இல் மிக உயர்வான மட்டத்தை எட்டியுள்ளது.



செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி 17ஆம் திகதி பேரணி!
[Thursday 2026-11-12 06:00]

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கொழும்பில் கொட்டித்தீர்க்கும் கனமழை!
[Wednesday 2026-11-11 16:00]

இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



திருகோணமலை புத்தர் சிலை வழக்கு- கஸ்ஸப்ப தேரருக்கு பிடியாணை!
[Wednesday 2026-11-11 16:00]

திருகோணமலை கடற்கரையில் சட்டரீதியான அனுமதியின்றி புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் புதன்கிழமை சமூகமளிக்காத வனவாசி பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை விடுத்துள்ளது.



ரணிலுக்கு எதிரான வழக்கு- டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
[Wednesday 2026-11-11 15:00]

அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்காக அதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கின்ஸ்லி ஹெட்டியாராச்சி புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா