Untitled Document
November 10, 2026 [GMT]
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை திருத்துமாறு ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தல்!
[Tuesday 2026-11-10 06:00]


இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளர்.

இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு அமைவாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதில் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளர்.

  

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் பென் சவுல், நீதிக்கு புறம்பான, தன்னிச்சையான மரண தண்டனைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் மோரிஸ் திட்போல் பின்ஸ், கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் லியோபோல்டோ மால்டோனாடோ குட்டரெஸ், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் நிலைமை பற்றிய சிறப்பு அறிக்கையாளர் அண்ட்ரியா பொலாரோஸ் வர்காஸ், தன்னிச்சையான தடுப்புக்காவல் குறித்த பணிக்குழுவின் நிபுணர்களான மெத்யூ கில்லெட், ஈதன் ஹீ-சீக் ஷின், நிக்கலஸ் லைனோ, வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் குறித்த பணிக்குழுவின் நிபுணர்களான கிராஸினா பரனோவ்ஸ்கா, அனா லோரினா டெல்காடில்லோ பெரெஸ், கப்ரியல்லா சிட்ரோனி மொகமட் அல்-ஒபைதி மற்றும் அஞ்சலி பரின், சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதநேயமற்ற அல்லது சிறுமைப்படுத்தும் தண்டனைகள் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் பொவ் பெரெஸ் சேல்ஸ், நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுயாதீனம் பற்றிய சிறப்பு அறிக்கையாளர் மார்க்ரெட் சாட்டர்த்வைட் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் 26 ஆண்டுகளாக நடைபெற்ற கொடூரமான உள்நாட்டுப் போருக்கு முன்னரும், போரின் போதும், அதற்குப் பின்னரும் சிறுபான்மையினருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள் உட்பட சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்கள் போன்ற பல மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்

பெற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு அமைவாக, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தின் வரைவை கவனத்தில் கொள்கின்றபோது, தடுப்புக் காவல் உத்தரவுகள், அத்தடுப்புக் காவலின் சட்டபூர்வத்தன்மை, அவசியம் மற்றும் விகிதாசாரத்தன்மை ஆகியவற்றைச் பரிசோதிப்பதுடன், விடுதலைக்கான உத்தரவைப் பிறப்பிப்பது உட்பட உடனுக்குடனான மற்றும் பயனுள்ள நீதித்துறை சார்ந்த கட்டுப்பாட்டுக்கும் மேற்பார்வைக்கும் உட்படுத்தப்பட வேண்டும்.

தடுப்புக் காவல் தொடர்பான மேன்முறையீடுகளை விசாரணை செய்யும் சுயாதீன மீளாய்வுக் குழு உண்மையிலேயே சுயாதீனமானதாக இருக்க வேண்டும்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களுக்குச் சட்ட ஆலோசனையைப் பெறுதல், மொழிபெயர்ப்பு வசதி, மருத்துவப் பரிசோதனை, இலவச சட்ட உதவி, குடும்பத்துடனான தொடர்பு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உடனடி விஜயங்கள் ஆகியவை உறுதிசெய்யப்பட வேண்டும்.

வலிந்த காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட தடுப்புக் காவல்களைத் தடுப்பதற்கு, தடுப்புக் காவலில் இருந்து மாற்றப்படும் இடங்கள் பதிவு செய்யப்பட்டு அறிக்கை செய்யப்பட வேண்டும்

பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் வேண்டுமென்றே மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் செயல்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்;, வெறும் சொத்து சேதங்களை அதிலிருந்து விலக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் பயங்கரவாத வன்முறையைத் தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பதாக மட்டுமே அமைய வேண்டும்.

இராணுவ மீறல்களின் வரலாற்றைக் கருத்திற் கொண்டு, துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக ஆயுதப்படைகளால் கைது செய்தல், விசாரணை செய்தல் மற்றும் சோதனையிடும் அதிகாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும்;, பயங்கரவாதக் குற்றங்களைத் தடுப்பதற்கான அதிகாரங்கள் பலப்படுத்தப்பட்டு நீதித்துறை மேற்பார்வைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அமைப்புகளைத் தடை செய்வதற்கான அளவுகோல்கள் மற்றும் வரம்புகள் தெளிவுபடுத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டும், தடைய உத்தரவுகளுக்குக் கால வரம்புகள் விதிக்கப்பட வேண்டும், மேலும் கட்டுப்பாட்டு உத்தரவுகள் மற்றும் இடங்களைத் தடைசெய்யும் அதிகாரங்களுக்குக் ஒட்டுமொத்தக் கால வரம்புகள் விதிக்கப்பட வேண்டும்.

சட்டவிரோதமாக, சித்திரவதை அல்லது சித்திரவதைக்கு இணையான கொடுமைகள் மூலம் பெறப்பட்ட அனைத்து சாட்சியங்கள் அல்லது வாக்குமூலங்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கப்பட வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காகச் சாட்சியங்களை வெளிப்படுத்தாமை தொடர்பான உரிய சட்ட நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். ஊடகத்துறையின் அறிக்கையிடல்களுக்கான மூலங்கள், சட்டத்துறைக்கான சிறப்புரிமைகள், தொழில்முறை இரகசியத் தன்மைகள் மற்றும் மனித உரிமை கண்காணிப்பு தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதை வழிநடத்துவதற்கான ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்பட வேண்டும், மேலும் இச்சட்டமூலம் அமுலுக்கு வந்த பிறகு பயங்கரவாதத் தடைச் சட்டம் இடைக்கால ஏற்பாடாகக் கூடப் பயன்படுத்தப்படக்கூடாது

இந்தச் சட்டமூலத்தின் கீழ் மனித உரிமைகள், சட்டபூர்வ அதிகாரங்கள் மீறப்படுவதற்கான மேற்பார்வை, பொறுப்புக்கூறல், உடனுக்குடனான பயனுள்ள நிவாரணங்களை அரசாங்கம் வலுப்படுத்த வேண்டும். இதில் தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்பதை உறுதி செய்தல், சாட்சியங்களை விலக்குதல், அதிகாரிகளின் ஒழுக்கமான அல்லது குற்றவியல் பொறுப்புக்கூறல், நட்டஈடு, மறுவாழ்வு, மன்னிப்புக் கோருதல், மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதங்கள் போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் ஆகியவை அடங்கும்.

குறித்த சட்டமூலமானது தவறான செயல்களைச் செய்யும் அதிகாரிகளுக்கு விலக்களிப்புகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மனித உரிமைகள் மதிக்கப்பட்டால் மட்டுமே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்த சட்டமூலத்தின் முந்தைய வரைவு பற்றிய கவலைகளை அரசாங்கத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், சிவில் சமூகம் உட்பட பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலங்கள் உட்பட அண்மைய மறுசீரமைப்புகள் குறித்தும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்தை மேலும் மேம்படுத்துவதற்கு அதிகாரிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



வடக்கிலும், திருகோணமலையிலும் அவ்வப்போது மழை பெய்யும்!
[Tuesday 2026-11-10 06:00]

வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்த சட்டமா அதிபர்!
[Tuesday 2026-11-10 06:00]

உத்தேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் கால எல்லையை 72 மணித்தியாலங்களிலிருந்து 48 மணித்தியாலங்களாகக் குறைத்து சட்டமூலத்தில் திருத்தம் செய்யவுள்ளதாகச் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.



பொதுக் கடன் 2 டிரில்லியனால் அதிகரிப்பு!
[Tuesday 2026-11-10 06:00]

இந்த அரசாங்கம் இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. பொறுப்பேற்றதைச் செய்து கொள்ள முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செப்டம்பர் 21 ஆம் திகதி பொறுப்பளிக்கும் போது முழுமையான கடன் 31 டிரில்லியனாக இருந்தது.



விசாரணைகள் நிறைவு- வியாக்கியானம் சபாநாயகருக்கு அனுப்பப்படும்!
[Tuesday 2026-11-10 06:00]

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.



சர்வாதிகாரப் போக்கை நோக்கிச் செல்லும் அரசாங்கம்!
[Tuesday 2026-11-10 06:00]

அரசாங்கம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள சட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை சுதந்திரத்தையும் பாதிக்கும் வகையில் சர்வாதிகாரப் போக்கை நோக்கியே அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண சாடியுள்ளார்.



ட்ரோன்கள் குறித்து நளின் பண்டார விளக்கம்!
[Tuesday 2026-11-10 06:00]

நாட்டுக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன் (Drone) கருவிகள் மற்றும் 16 மைக்ரோபோன்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.



ஞானசார தேரருக்கு காவியுடை - மகாநாயக்கர்கள் கோரிக்கை!
[Tuesday 2026-11-10 06:00]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிப்பதற்காக, தாம் உள்ளிட்ட பத்து பிக்குகள் அடங்கிய சங்க சபைப் பிரதிநிதிகள் குழுவொன்று சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக சியாம் மகா நிகாயவின் கோட்டே பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.



சசீந்திர ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு - ஆட்சேபனைகளை நிராகரித்த நீதிமன்றம்!
[Tuesday 2026-11-10 06:00]

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்த கொழும்பு மேல் நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் சசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கொழும்பில் இன்று கண்டனப் போராட்டம்- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!
[Tuesday 2026-11-10 06:00]

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.



பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நகரும் நாடு!
[Monday 2026-11-09 17:00]

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் இத்தகைய சூழ்நிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்படும் என நாம் எதிர்பார்க்கிறோம் என பேராசிரியர் ஜீ எல். பீரிஸ் தெரிவித்தார்.



4 மில்லியன் இலங்கையர்கள் ரின் எண்ணைப் பெறவில்லை!
[Monday 2026-11-09 17:00]

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்துக் குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், சுமார் 4 மில்லியன் இலங்கையர்கள் இதுவரை தமது வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



கோட்டா இரண்டு வாரங்களுக்குள் கைது- தூக்கு மேடைக்கு செல்லும் நிலையும் ஏற்படலாம்!
[Monday 2026-11-09 07:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்வார் என்றும் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம் என இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



கொழும்பு வடிகால்களைக் கூட சுத்திகரிக்க முடியாத அரசாங்கம்!
[Monday 2026-11-09 07:00]

ஆறு மாதங்களில் கொழும்பு நகரில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால், குறைந்தபட்சம் நகரின் வடிகால்களைக் கூட முறையாகச் சுத்திகரிக்க முடியாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.



வங்காள விரிகுடாவில் 14ஆம் திகதி புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்பு!
[Monday 2026-11-09 07:00]

எதிர்வரும் 14.11.2026 அன்று தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது ஆரம்பத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் தென்கிழக்குப் பகுதியை அடைந்து அதன் பின்னர் வடக்கு நோக்கி இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கரையோரமாக நகர்ந்து தமிழகத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணை!
[Monday 2026-11-09 07:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (09) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.



வடக்கு, கிழக்கில் இன்று மழை!
[Monday 2026-11-09 07:00]

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



நளின் பண்டார எடுத்து வந்த 39 ட்ரோன்கள் பறிமுதல்!
[Monday 2026-11-09 07:00]

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 39 ட்ரோன்கள் மற்றும் 16 ஒலிவாங்கிகளை, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்துள்ளனர்.



அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டம்!
[Monday 2026-11-09 07:00]

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.



மான் தாக்கி கைதி மரணம்!
[Monday 2026-11-09 07:00]

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



எண்ணெய் வரி அதிகரிப்பால் மக்கள் மீது அதிக சுமை!
[Monday 2026-11-09 07:00]

எண்ணெய் மீதான வரியை தற்போதைய வரி அளவைவிட அரசாங்கம் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா