Untitled Document
November 6, 2026 [GMT]
நாகை- காங்கேசன்துறை கப்பல் சேவையில் கட்டணம் குறைப்பு, சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!
[Thursday 2026-11-05 06:00]

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் பெரி'  கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் 'சுபம் பெரி' கப்பல் சேவைக்கான புதிய கட்டணக் குறைப்பு மற்றும் சிறப்புச் சலுகைகள் நவம்பர் மாதத்திற்கென பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  

காங்கேசன்துறை பகுதியில் உள்ள சுபம் கப்பல் சேவை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

*கட்டணக் குறைப்பு:

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கும்- காங்கேசன்துதுறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கும் இரு வழித்தடங்களிலும் பயணக் கட்டணம் இந்திய ரூபாவில் 5,500 ஆகக் குறைக்கப்பட்டு சிறப்புச் சலுகை வழங்கப்படுகிறது.

*பயணப் பொதி சலுகை:

பயணிகள் தங்களது உடமைகளில் 30 கிலோ வரை செக்-இன் லக்கேஜ் (Check-in Luggage) மற்றும் 7 கிலோ வரை கைப்பைகள் (Hand Luggage) ஆகியவற்றை எதவித கட்டணமுமின்றி இலவசமாக எடுத்துச் செல்லலாம்.

*கூடுதல் பொதி கட்டண விவரங்கள்:

30 கிலோவுக்கு மேற்பட்ட கூடுதல் எடைகளுக்கு பின்வரும் திருத்தப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன: அனைத்தும் இந்திய ரூபாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

*5 கிலோ: ₹1500 (LKR 5250 - USD 16)

*10 கிலோ: ₹2500 (LKR 8750 - USD 26)

* 30 கிலோ: ₹6000 (LKR 21000 - USD 63)

*பயணிகள் கொள்ளளவு:

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு அதிகபட்சமாக 110 பயணிகளும்

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு அதிகபட்சமாக 150 பயணிகளும் பயணிக்கலாம்.

திருத்தப்பட்ட பயணக் கட்டண விபரங்கள்:

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை ((Economy):

பெரியவர்கள் (Adult): ₹5500 | LKR 19250 | USD 58

குழந்தைகள் (Child): ₹5000 | LKR 17500 | USD 53

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் (Economy & Pre Eco):

Economy - பெரியவர்கள்: ₹5500 | LKR 19250 | USD 58

Economy - குழந்தைகள்: ₹5000 | LKR 17500 | USD 53

Pre Eco - பெரியவர்கள்: ₹6000 | LKR 21000 | USD 64

Pre Eco - குழந்தைகள்: ₹5500 | LKR 17250 USD 58

நவம்பர் மாதத்தில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தி தங்களது பயணங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். கடந்த வருடம்போல் இம்முறை மழையுடனான பருவகாலத்திற்கு சேவை நிறுத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

  
   Bookmark and Share Seithy.com



பொலிஸாருக்கு வரையறையற்ற அதிகாரம் வழங்கினால் மோசமான விளைவுகளே ஏற்படும்!
[Friday 2026-11-06 06:00]

பொலிஸ் காவலில் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோசமான பின்னணியில் பொலிஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்குவது பாரதூரமானது. பொலிஸாரின் ஆதரவுடன் சர்வாதிகார அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் தான் அரசாங்கம் செயற்படுகிறது. பொலிஸாருக்கு வரையறையற்ற வகையில் அதிகாரம் வழங்கினால் மோசமான விளைவுகளே ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.



வங்கக் கடலில் உருவாகும் மற்றொரு காற்றழுத்தம்!
[Friday 2026-11-06 06:00]

வங்கக்கடலில் எதிர்வரும் 13- ஆம் திகதி குறைந்த காற்றழுத்த பிரதேசம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அடக்குமுறை கொள்கைகள் காரணமாக ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை இழக்கப்படலாம்!
[Friday 2026-11-06 06:00]

அரசாங்கம் மக்கள் ஆணையைப் பெற்றது அபிவிருத்தியை நடைமுறைப்படுத்தவே அன்றி அடக்குமுறையை நடைமுறைப்படுத்த அல்ல. ஜனநாயக உரிமையை விரிவுபடுத்த அதிகாரம் கிடைத்தபோதிலும் மக்கள் வழங்கிய ஆணையை மீறி அரசாங்கம் ஜனநாயக உரிமையை சீர்குலைக்கும் வகையில் சட்டங்களை இயற்றி வருகிறது. அரசாங்கத்தின் இவ்வாறான அடக்குமுறை கொள்கைகள் காரணமாக ஜீ.எஸ்.பி + வரிச் சலுகை கூட இழக்க நேரிடலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



இன்று பலத்த மழை பெய்யும்!
[Friday 2026-11-06 06:00]

தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.



இலங்கையில் இரண்டாவது காலாண்டில் 430,357 டிக்டொக் காணொளிகள் நீக்கம்!
[Friday 2026-11-06 06:00]

சமூக வழிகாட்டுதல்களை மீறிய குற்றச்சாட்டில், 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையில் 430,357 டிக்டொக் காணொளிகள் நீக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜோர்தானில் இலங்கை தூதரகம் முன் தாக்குதல்- பாதுகாவலர் பலி!
[Friday 2026-11-06 06:00]

ஜோர்தானில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக ஜோர்தானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. அம்மான் நகரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் முன்னால் கூரிய ஆயுத தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



திங்கட்கிழமை விசேட விடுமுறை!
[Friday 2026-11-06 06:00]

மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரயில்களில் யானைகள் மோதுவதை தடுக்க திட்டம்!
[Friday 2026-11-06 06:00]

காட்டு யானைகள் ரயில்களில் அடிபட்டு உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சர்களின் தலைமையில் நடைபெற்ற விசேட மதிப்பாட்டுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.



ஐஎம்எவ்வை எதிர்த்தவர்கள் அதன் வாலைப் பிடித்து தொங்குகிறார்கள்!
[Friday 2026-11-06 06:00]

சர்வதேச நாணய நிதியம் கூறுவதை செய்யப் போவதில்லை என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இப்போது அதன் வாலை பிடித்து தொங்கிக்கொண்டு அவர்கள் கூறுவதுபடி பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை கொண்டு வருகின்றனர். நம்பிக்கை பொறுப்புகள் திருத்தச் சட்டமூலமும் நாணய நிதியத்தின் அழுத்தத்தின் மூலமே கொண்டுவரப்பட்டிருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.



உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை செயற்படுத்துவோம்!
[Friday 2026-11-06 06:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் முன்வைக்கும் யோசனைகளை முறையாக நிறைவேற்றுவோம். நிறைவடைந்துள்ள இரண்டு ஆண்டுகாலப்பகுதியில் 51 சட்டங்களை இயற்றியுள்ளோம். சட்டமியற்றலின்போது உயர்நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.



வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!
[Thursday 2026-11-05 18:00]

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை (5) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.



மாவீரர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்!
[Thursday 2026-11-05 18:00]

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி செலுத்திய ரவிகரன் எம்.பி துயிலும் இல்லங்களை விடுவிப்பதற்கும், மீளநிர்மாணிக்கவும் அரசு ஒத்துழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.



தடுத்து வைக்கும் காலத்தை 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தயார்!
[Thursday 2026-11-05 18:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களைத் தடுத்து வைக்கும் காலத்தை 72 மணித்தியாலத்திலிருந்து 48 மணித்தியாலமாகக் குறைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.



முள்ளியவளை துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்!
[Thursday 2026-11-05 18:00]

தாயகத்தின் விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், வழக்கம்போல இவ்வாண்டும் நவம்பர் 27ஆம் திகதி தமிழர் தாயகப் பகுதிகள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன.



மின் கட்டண உயர்வு கோரிக்கை வாபஸ்!
[Thursday 2026-11-05 18:00]

ஒக்டோபர் - டிசம்பர் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வை தேசிய அமைப்பு அமைப்பாளர் (NSO) திரும்பப் பெற்றுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளமை மற்றும் சாதகமான மழைவீழ்ச்சி முன்னறிவிப்புகளை சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



தேசிய வறுமைக்கோட்டு எல்லை ரூ. 17,742 ஆக உயர்வு!
[Thursday 2026-11-05 18:00]

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2026 செப்டம்பர் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய வறுமைக்கோடு நபர் ஒருவருக்கு மாதத்திற்கு ரூ. 17,742 ஆக உயர்ந்துள்ளது.



189 கிலோ ஹெரோய்ன், ஐசுடன் சிக்கியது படகு!
[Thursday 2026-11-05 18:00]

தென் கடலுக்கு அப்பால் சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 4.2 பில்லியன் ரூபாவிற்கும் அதிக மதிப்புடைய போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற பன்னாட்டு மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.



காணாமல் போன் முல்லைத்தீவு மீனவர்கள் ஆழ்கடலில் இருப்பதாக தகவல்!
[Thursday 2026-11-05 18:00]

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பிரதேசத்திலிருந்து கடலுக்குச் சென்று காணாமல்போன 3 மீனவர்கள் தொடர்பாகக் கிடைத்துள்ள தற்போதைய தகவல்களின் அடிப்படையில், குறித்த மீனவர்கள் கடல் நீரோட்டம் மற்றும் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுள்ளதாகவும், அங்கு ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீன்பிடிப் படகுகளுடன் இணைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.



ரின் இலக்கத்தை அவசியமாக்கும் நடைமுறை- ஏப்ரல் 1 வரை இடைநிறுத்தம்!
[Thursday 2026-11-05 17:00]

குறிப்பிட்ட எட்டு வகையான பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழை கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை 2027 ஏப்ரல் 01ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.



9 இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு எதிரான முறைப்பாட்டுத் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு!
[Thursday 2026-11-05 17:00]

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா