Untitled Document
November 4, 2026 [GMT]
மின்கம்பத்துடன் மோதியே முச்சக்கரவண்டி- 3 இளைஞர்கள் காயம்!
[Wednesday 2026-11-04 16:00]


யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  

குறித்த விபத்து இன்று புதன்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

ஊர்காவற்றுறை திசையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வீதியில் கிடந்துள்ளனர்.

இதன்போது அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து செயற்பட்டு, தனியாருக்குச் சொந்தமான மற்றுமிரு முச்சக்கரவண்டியின் உதவியுடன் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, விபத்து இடம்பெற்றதைத் தொடர்ந்து அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அம்புலன்ஸ் இறுதிவரை சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறதுடன்இச்சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு?
[Wednesday 2026-11-04 16:00]

பயங்கரவாதிகளாக இருந்தவர்கள் ஆட்சிசெய்யும் நாட்டில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் எதற்கு? இந்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டால், 6 மாதங்களில் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலைமையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படுமென புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.



22 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை!
[Wednesday 2026-11-04 16:00]

நாட்டின் பல பகுதிகளில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் (Amber) மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது.



மின்சாரக் கட்டணத்தை 2.88% அதிகரிக்க யோசனை!
[Wednesday 2026-11-04 16:00]

2026 ஆம் ஆண்டின் 4 ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88% ஆல் திருத்துமாறு நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (NSO), யோசனை முன்வைத்துள்ளது.



நாடாளுமன்றம் செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டம்!
[Wednesday 2026-11-04 16:00]

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலத்திற்கும் (PSTA) ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான சட்டமூலத்திற்கும் எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04) முன்னெடுக்கப்படுகின்றது.



வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்க கோரும் கோட்டாவின் மனு மீது 25ஆம் திகதி தீர்ப்பு!
[Wednesday 2026-11-04 16:00]

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரப்பட்ட மனு மீதான தீர்ப்பு நவம்பர் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கோட்டை நீதிவான் பாஸன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.



111 வயதை எட்டிய இலங்கையின் மிக மூத்த முதியவர்!
[Wednesday 2026-11-04 16:00]

இலங்கையின் மிக மூத்த வாழ்வாங்கு வாழும் முதியவராகக் கருதப்படும் கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த பி.எச். மேனியல் (B.H. Meniyal) 111 வயதை எட்டியுள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.



208 பொலிஸ் அதிகாரிகள் கைது- 1,500 அதிகாரிகள் சேவை இடைநிறுத்தம்!
[Wednesday 2026-11-04 16:00]

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இதுவரை 208 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.



வைத்தியர் தயாளினி கொலை வழக்கில் மகள், மருமகனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Wednesday 2026-11-04 16:00]

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சித்த மருத்துவப் பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவரது மகள் மற்றும் மருமகனை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சிட்னியில் இருந்து வந்த விமானத்தில் மதுபோதையில் கலாட்டா- 3 இந்தியர்கள் கைது!
[Wednesday 2026-11-04 16:00]

சிட்னியிலிருந்து கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு இந்தியப் பிரஜைகளும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவரும் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு இனவாத சாயம் பூச முயற்சி!
[Wednesday 2026-11-04 06:00]

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு இனவாத சாயம் பூச முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.



சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
[Wednesday 2026-11-04 06:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சந்திரசேகரின் கருத்துக்கு சிவில் சமூகம் கண்டனம்!
[Wednesday 2026-11-04 06:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.



விவசாயம் செய்யப்படாத காணிகள் மீளப் பெறப்படும்!
[Wednesday 2026-11-04 06:00]

விவசாய நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு ஆனால் உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத காணிகளை மீள அரசாங்கத்திற்கு பொறுப்பேற்று அவற்றை பயனுள்ள விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.



கார் வாங்கிய பணம் கிடைத்த வழியை வெளிப்படுத்த முடியாத பெண் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Wednesday 2026-11-04 06:00]

வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பணம் தூயதாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொட்டாவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷலா போகவத்த உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.



TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை!
[Wednesday 2026-11-04 06:00]

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் நோக்கில், TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கான 65 ரூபா விசேட பண்டங்கள் வரி நீக்கம்!
[Wednesday 2026-11-04 06:00]

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



தனியார் தொலைக்காட்சிக்கு 10 கோடி ரூா அரசாங்கப் பணம்!
[Wednesday 2026-11-04 06:00]

சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இம்மாதம் 3 எரிவாயு கப்பல்கள் வரும்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.



கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழு அமைக்குமாறு பிரேரணை!
[Tuesday 2026-11-03 15:00]

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையைக் கோரி, அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா