Untitled Document
November 4, 2026 [GMT]
மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை விவகாரத்துக்கு இனவாத சாயம் பூச முயற்சி!
[Wednesday 2026-11-04 06:00]

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து  இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு  இனவாத சாயம் பூச முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என  இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.இதற்கு இனவாத சாயம் பூச முயற்சிப்பது தவறான செயற்பாடாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.

  

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் நிதி வசதியுடன் வாழ்கிறார்கள். அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்து உற்பத்திகளை அதிகரிப்பதற்கான உபாயங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய தேவைகள் உள்ளன. கைத்தொழில் பொருளாதாரம் முன்னேற வேண்டுமாயின் ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிக்க வேண்டும். அத்துடன் தேசிய ஒற்றுமையுடன் இன மத பேதமின்றி அனைவரும் ஐக்கியமாக வேண்டிய தேவையுள்ளது.

அந்த அடிப்படையில் தேசிய இனப் பிரச்சினையை தீர்த்து முறையான அதிகார பகிர்வை ஏற்படுத்துவதன் ஊடாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் அமைப்புக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலமும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்கப்பூரில் ஜனாதிபதியாக இருந்த லீக்குவான்யூ அங்கிருந்த சீன, மலே, தமிழர்கள் ஆகிய மூன்று இனத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கியே அந்த நாட்டை வளர்த்துள்ளார். ஆனால் இங்கு இனவாதம், மதவாதம் மற்றும் அடிப்படை வாதம் காணப்படுவதால் தேசிய ஒற்றுமை குழம்பியுள்ளதால் இந்தநாடு வங்குரோத்தடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பில் பல தடவை பேசியுள்ளோம். ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளோம். அமைச்சர்களிடமும் இந்த விடயங்கள் தொடர்பில் கூறியுள்ளோம். இது இனவாத பிரச்சினையல்ல. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். தற்சார்பு பொருளாதார அடிப்படையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் தொடர்பான மற்றும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். இந்த பிரச்சினை தொடர்பில் பேசும் போது இனவாதம் மற்றும் மதவாத சாயம் பூச முற்படுவது பிழையான அணுகுமுறையாகும்.

அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடும் போது இதனை இனவாத ரீதியில் குறிப்பிட்டது போன்றே தெரிந்தது. ஆனால் இது வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையாகவே உள்ளது.சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அங்கு சட்டவிரோதமாக பயிர்செய்வதுடன், சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்துள்ளதுடன், அவர்கள் மாடுகள் மீதும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்படுகின்றது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

நாங்கள் மட்டக்களப்பில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினோம். இந்தப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். எங்களுக்குள்ள இடைவெளியை நீங்கள் அதிகரிக்கின்றீர்கள். இந்தப் பிரச்சினை மிகவும் பூதாகரமாக மாறியுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அந்த பண்ணையாளர்களை வாழ விடுங்கள். இதற்கான தீர்வை வழங்குங்கள். இல்லையென்றால் மக்கள் விரும்பும் போராட்டத்தை தொடர வேண்டிவரும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



சிவாஜிலிங்கம் தீவிர சிகிச்சைப் பிரிவில்!
[Wednesday 2026-11-04 06:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மேய்ச்சல் தரை விவகாரம் குறித்து சந்திரசேகரின் கருத்துக்கு சிவில் சமூகம் கண்டனம்!
[Wednesday 2026-11-04 06:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் 2026 நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது.



விவசாயம் செய்யப்படாத காணிகள் மீளப் பெறப்படும்!
[Wednesday 2026-11-04 06:00]

விவசாய நடவடிக்கைகளுக்காக குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு ஆனால் உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாத காணிகளை மீள அரசாங்கத்திற்கு பொறுப்பேற்று அவற்றை பயனுள்ள விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய கால்நடை காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.



கார் வாங்கிய பணம் கிடைத்த வழியை வெளிப்படுத்த முடியாத பெண் பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்!
[Wednesday 2026-11-04 06:00]

வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், பணம் தூயதாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கொட்டாவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி கேஷலா போகவத்த உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க நேற்று மாலை உத்தரவிட்டுள்ளார்.



TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை!
[Wednesday 2026-11-04 06:00]

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெரிசலைக் குறைக்கும் நோக்கில், TIN இலக்கம் இல்லாதவர்களுக்கு விசேட சலுகை இலக்கம் இல்லாதவர்களும் வங்கிக் கணக்குகளைத் திறக்கவும் வாகன வருமான உரிமங்களைப் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கான 65 ரூபா விசேட பண்டங்கள் வரி நீக்கம்!
[Wednesday 2026-11-04 06:00]

இரண்டு வகை இறக்குமதி அரிசிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கிலோகிராமுக்கு 65 ரூபாய் விசேட பண்டங்கள் வரியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.



தனியார் தொலைக்காட்சிக்கு 10 கோடி ரூா அரசாங்கப் பணம்!
[Wednesday 2026-11-04 06:00]

சுற்றுலா மேம்பாட்டிற்காக எனக் கூறி 10 கோடி ரூபாய் அரசாங்கப் பணத்தை நாட்டின் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நடத்தும் மாநாடு ஒன்றுக்கு வழங்கியமை குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



இம்மாதம் 3 எரிவாயு கப்பல்கள் வரும்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டு வருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.



2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!
[Wednesday 2026-11-04 06:00]

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் புதிதாக 487 எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் கணிசமான அதிகரிப்பாகும் என தெரியவந்துள்ளது.



கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழு அமைக்குமாறு பிரேரணை!
[Tuesday 2026-11-03 15:00]

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையைக் கோரி, அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.



நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை!
[Tuesday 2026-11-03 15:00]

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பினர்.



திருகோணமலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படைச் சிப்பாய்!
[Tuesday 2026-11-03 15:00]

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

கொழும்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



'க்ரிஷ்' பணப்பரிமாற்ற வழக்கில் நாமலுக்குப் பிணை!
[Tuesday 2026-11-03 15:00]

சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' பணப்பரிமாற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



பூநகரியில் வீதியில் கிடந்த 14 கிலோ ஹெரோயின், ஐஸ்!
[Tuesday 2026-11-03 15:00]

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து 13 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்!
[Tuesday 2026-11-03 15:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



யோஷித மீது திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்- பாட்டி விடுவிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

மூல ஆதாரம் கண்டறியப்படாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வைப்பீடுகள் தொடர்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கிலிருந்து டெய்சி ஃபொரெஸ்ட்டை விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.



மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கார் விபத்து- மூவர் காயம்!
[Tuesday 2026-11-03 15:00]

மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Tuesday 2026-11-03 07:00]

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே புதிய சட்டம்!
[Tuesday 2026-11-03 07:00]

அரசாங்கம் பயங்கவாத தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவதாக தெரிவித்து, அந்த சட்டத்தில் இருக்கும் அனைத்து விடயங்களையும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தில் சேர்த்திருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.


 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா