Untitled Document
November 3, 2026 [GMT]
கறுப்பு ஜூலை குறித்து விசாரிக்கும் தெரிவுக்குழு அமைக்குமாறு பிரேரணை!
[Tuesday 2026-11-03 15:00]


இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையைக் கோரி, அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்  50  பேர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்ததாகப் பரவலாகக் கருதப்படும் 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தொடர்பில் பாராளுமன்ற விசாரணையைக் கோரி, அரச பாராளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

  

பாராளுமன்ற நிகழ்ச்சிநிரல் பத்திரத்தில் (Order Paper) சேர்க்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணையில், அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ஆனந்த விஜேபால ஆகிய இரண்டு அமைச்சர்கள் உட்பட 50 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான பரிந்துரைகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் வேதனையடைந்த அனைத்து மக்களுக்கும் நியாயமான நிவாரணம் அல்லது கௌரவமான பரிகாரத்தை வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ‘கருப்பு ஜூலை’ கலவரமானது, நாட்டைப் பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளியதுடன், ஆயிரக்கணக்கான பெறுமதியான உயிர்கள் பலியாகவும், பாரிய சொத்துச் சேதங்கள் ஏற்படவும் வழிவகுத்தது. இதில் மிகக் கொடூரமான சேதம் யாதெனில், பௌதிக அழிவுகளை விடவும் சமூகங்களுக்கு இடையே பதற்றம், பயம் மற்றும் சந்தேக உணர்வுகள் தீவிரமடைந்தமையேயாகும்” எனப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றிலேயே மிக மோசமான துயரமாகக் கருதப்படும் 1983 கருப்பு ஜூலை வன்முறையினால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்துச் சேதங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியான மற்றும் சமூகப் பாதிப்புகள் இதுவரை சரியாக மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிர்காலத்தில் இத்தகைய இனவாத மற்றும் நெருக்கடியான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு, வலுவான சட்ட, சமூக மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளதுடன், இலங்கையிலுள்ள பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் நன்மதிப்பைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பது இன்றியமையாதது எனவும் அப்பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெறக் காரணமான காரணிகள் மற்றும் இத்தகைய அழிவு வேலைகளுக்கு தலைமை தாங்கிய நபர்கள் யார் என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டும் எனவும் அக்கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1983 ஜூலை கலவரத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், தேசிய நல்லிணக்கம் குறித்து ஆராய்வதற்குத் தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதே மிகவும் பொருத்தமானது என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் பாராளுமன்ற விவாதத்தின் போது தெரிவித்திருந்த நிலையிலேயே, இந்த அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின்படி, ஐந்து உறுப்பினர்கள் கையொப்பமிட்டாலும் ஒரு பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் என்பதுடன், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டால் சபாநாயகரால் தெரிவுக்குழு நியமிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரேரணையில் அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், ஆனந்த விஜேபால, பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, இரங்க குணசேகர, கமகேதர திஸாநாயக்க, சுகத் திலகரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, நிஷாந்த பெரேரா, கே. இளங்குமாரன், கந்தசாமி பிரபு, ரவீந்திர பண்டார, பாஸ்மின் ஷரீஃப், செல்லத்தம்பி திலகநாதன், பாக்ய ஸ்ரீ ஹேரத், ஆர்.எம். சமந்த ரணசிங்க, சஞ்சீவ ரணசிங்க, ரியாஸ் பாரூக், சுதத் பாலகல்ல, ஈ.எம். பஸ்நாயக்க, தனுர திஸாநாயக்க, எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, கயான் ஜனக்க, சாந்த பத்ம குமார சுபசிங்க, ஜனித ருவன் கொடித்துவக்கு, சமிந்த லலித் குமார், அனுஷ்கா திலகரத்ன, இரங்க வீரரத்ன, முனீர் முலாஃபர், லசித் பாஷன கமகே, கிட்ணன் செல்வராஜ், சந்தன சூரியாரச்சி, சந்தருவன் மதாரசிங்க, ஜகத் மனுவர்ண, தீப்தி வாசலகே, காஞ்சன வெலிபிட்டிய, ஆர்.ஜி. விஜேரத்ன, நிலந்தி கொட்டஹாச்சி, முஹம்மது பைசல், சுனில் பியன்வில, சந்திம ஹெட்டியாராச்சி, மஞ்சுள சுகத் ரத்நாயக்க, அருண பனகொட, சுசந்த தொடவத்த, ரோஷன் அக்மீமன, யு.பி. அபேவிக்ரம, நந்த பண்டார, வசந்த புஷ்ப குமார, அசோக சபுமல் ரன்வல, நிஹால் அபேசிங்க, சேனா நாணயக்கார மற்றும் நிஷாந்த பெரேரா ஆகிய 50 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



நாடாளுமன்றத்தில் குழப்ப நிலை!
[Tuesday 2026-11-03 15:00]

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (03) நாடாளுமன்றத்தில் சிறப்புரிமைப் பிரச்சினைகளை எழுப்பினர்.



திருகோணமலை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கடற்படைச் சிப்பாய்!
[Tuesday 2026-11-03 15:00]

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.



கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

கொழும்பு மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 இலிருந்து 19 ஆக உயர்த்தப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசன ஒதுக்கீடு ஒன்பதிலிருந்து எட்டாகக் குறைக்கப்பட்டுள்ளது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



'க்ரிஷ்' பணப்பரிமாற்ற வழக்கில் நாமலுக்குப் பிணை!
[Tuesday 2026-11-03 15:00]

சர்ச்சைக்குரிய 'க்ரிஷ்' பணப்பரிமாற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



பூநகரியில் வீதியில் கிடந்த 14 கிலோ ஹெரோயின், ஐஸ்!
[Tuesday 2026-11-03 15:00]

யாழ்ப்பாணம் – மன்னார் பிரதான வீதியில் பூநகரி பாடசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த பொதியொன்றிலிருந்து 13 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள்!
[Tuesday 2026-11-03 15:00]

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு சட்டமூலத்திற்கு சவால் விடுத்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் தனக்கு கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.



யோஷித மீது திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல்- பாட்டி விடுவிப்பு!
[Tuesday 2026-11-03 15:00]

மூல ஆதாரம் கண்டறியப்படாத 59 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வைப்பீடுகள் தொடர்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கிலிருந்து டெய்சி ஃபொரெஸ்ட்டை விடுவித்து மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.



மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியில் கார் விபத்து- மூவர் காயம்!
[Tuesday 2026-11-03 15:00]

மாங்குளம் - ஒட்டுசுட்டான் வீதியின் 15ஆம் கட்டைப்பகுதியில் கார் ஒன்று பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி!
[Tuesday 2026-11-03 07:00]

திருகோணமலை, சீன துறைமுகப் பகுதிக்குட்பட்ட கப்பல்துறை வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீது நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே புதிய சட்டம்!
[Tuesday 2026-11-03 07:00]

அரசாங்கம் பயங்கவாத தடைச்சட்டத்தை இல்லாமலாக்குவதாக தெரிவித்து, அந்த சட்டத்தில் இருக்கும் அனைத்து விடயங்களையும் பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலத்தில் சேர்த்திருக்கின்றன. அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்களை அடக்குவதற்கே அரசாங்கம் இவ்வாறு நடவடிக்கை எடுத்திருக்கிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.



நாடே ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது!
[Tuesday 2026-11-03 07:00]

பாதுகாப்பு துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக்காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்பு செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.



இன்று முதல் 6 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும்!
[Tuesday 2026-11-03 07:00]

இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடும் என பாராளுமன்றச் செயலகம் தெரிவித்துள்ளது.



ஒன்லைன் நிதி மோசடிகளில் ஈடுபட்ட 21 வெளிநாட்டவர்கள் கைது!
[Tuesday 2026-11-03 07:00]

நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத மோசடிகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிகல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



தெதுரு ஓயாவில் வெள்ளம்- வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
[Tuesday 2026-11-03 07:00]

தெதுரு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் மஹவ இடையிலான ரயில் மார்க்கம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அம்மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



சிங்களவர்களின் இதயத்தை நொருக்கும் பாவச்செயலுக்கு இந்தியா பங்காளியாக கூடாது!
[Tuesday 2026-11-03 07:00]

ருவன்வெலிசாய விகாரை பௌத்தர்களின் புனித தலமாகவும், சிங்களவர்களின் இதயமாகவும் காணப்படுகிறது. அநுராதபுரம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ருவன்வெலிசாயவை அண்மித்த பகுதியை அகழ்ந்தால் தூபி உடைந்து விழும் நிலைமை ஏற்படும். ஆகவே இந்த பாவச்செயலுக்கு இந்தியா பங்காளியாக கூடாது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.



அனுராதபுரத்தில் இந்துக் கோயில்களை அமைக்கும் திட்டமா?- மறுக்கிறார் சுனில் செனவி.
[Tuesday 2026-11-03 07:00]

அநுராதபுரம் புனித நகர திட்டத்தில் இந்து கோயில்களை அமைக்கும் முன்மொழிவு உள்வாங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் முற்றிலும் போலியானது. குறுகிய அரசியல் இலாபத்துக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அநுராதபுரத்தின் புனித தன்மையை பாதுகாப்பதற்காகவே அபிவிருத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார்.



முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு யோசனை!
[Tuesday 2026-11-03 07:00]

அண்மைய எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய இணைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.



அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பணிநீக்கம்!
[Tuesday 2026-11-03 07:00]

அக்குரஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியைப் பணியிலிருந்து நீக்குவதற்குப் பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்!
[Monday 2026-11-02 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கான சரியான நீதியை தற்போதைய அரசாங்கமும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு இன்று திங்கட்கிழமை (02) மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.



பூநகரியில் பல்லவராய மன்னனின் உருவச் சிலைக்கு மரியாதை!- மாவீரர்களுக்கும் அஞ்சலி.
[Monday 2026-11-02 18:00]

வீரத்தின் அடையாளமாக விளங்கும் பல்லவராய மன்னனின் உருவச் சிலைக்கு, இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா